என் மலர்
நீங்கள் தேடியது "ஹெச்டிசி"
- ஹெச்டிசி நிறுவனத்தின் புதிய டேப்லெட் மாடல் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
- புதிய ஹெச்டிசி டேப்லெட் ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் கொண்டிருக்கிறது.
அலுவல் பணிகளை மேற்கொள்வது, படிப்படி என பலதரப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்ய பலரும் டேப்லெட்களை பயன்படுத்த துவங்கி உள்ளனர். இந்த டிரெண்ட் காரணமாக டேப்லெட் சந்தை கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. அந்த வரிசையில், ஹெச்டிசி A102 பெயரில் புதிய டேப்லெட் அறிமுகமாக இருக்கிறது.
கூகுள் SMS சான்றளிக்கும் தளத்தில் புதிய ஹெச்டிசி A102 டேப்லெட் விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது. அதன்படி புதிய ஹெச்டிசி டேப்லெட் தற்போது டெஸ்டிங் கட்டத்தில் உள்ளது. மேலும் இது பிப்ரவரி மாதத்திலேயே அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. புதிய ஹெச்டிசி A102 டேப்லெட் மிட்-ரேன்ஜ் அல்லது பட்ஜெட் பிரிவில் நிலைநிறுத்தப்படும் என தெரிகிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஹெச்டிசி A102 மாடலில் 4ஜி வைபை வசதி, 11.0 இன்ச் 2K டிஸ்ப்ளே, 2000x1200 பிக்சல் ரெசல்யூஷன், மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர், Arm கார்டெக்ஸ் A75 மற்றும் Arm கார்டெக்ஸ் A55 கோர்கள் முறையே 2GHz மற்றும் 1.8GHz இயங்குகின்றன. இத்துடன் 20MP பிரைமரி கேமரா, 8MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.
புதிய ஹெச்டிசி A102 டேப்லெட் ஃபேஸ் டிடெக்ஷன் மற்றும் ஏஐ ஃபேஸ் அன்லாக் வசதி, ஆண்டராய்டு 12, 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படுகிறது. இந்த டேப்லெட் 8000 எம்ஏஹெச் பேட்டரி, ப்ளூடூத் 5.0, டூயல் பேண்ட் வைபை வசதி, யுஎஸ்பி டைப் சி 3.0 போர்ட், OTG சப்போர்ட் கொண்டிருக்கும் என தெரிகிறது.
தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு மற்றும் அலுவல் ரீதியிலான பயன்பாடுகளுக்கு ஏற்ற பட்ஜெட் பிரிவில் புதிய டேப்லெட் வாங்க நினைப்போருக்கு ஏற்ற மாடலாக இது இருக்கும் என தெரிகிறது. புதிய ஹெச்டிசி A102 மாடல் முதற்கட்டமாக ஆப்ரிக்க சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டு, அதன்பின் மற்ற நாடுகளில் அறிமுகமாக இருக்கிறது.
Photo Courtesy: Gizmochina