என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக கவர்னர் ஆர்என் ரவி"

    • கவர்னர் மாளிகையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மார்க்சையும், மார்க்சியத்தையும் சாடியிருக்கிறார்.
    • மார்க்சிய சித்தாந்தத்தை விமர்சிப்பதன் மூலம் ஆளுநர் ரவி தான் ஆளும் வர்க்கத்தின் ஏஜெண்ட் என்பதையே வெளிப்படுத்தியுள்ளார்.

    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

    தமிழ்நாட்டில் கவர்னராக ஆர்.என்.ரவி பதவியேற்றதிலிருந்து மாநில உருவாக்கத்தை கடித்து, மாநிலத்தின் பெயரைக் கடித்து, அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைக் கடித்து, இப்போது மார்க்சையும், டார்வினையும் கடிக்க ஆரம்பித்திருக்கிறார். செக்கு என்றும், சிவன் என்றும் தெரியாமல் நடந்து கொள்வதைப் போல கவர்னர் மாளிகையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மார்க்சையும், மார்க்சியத்தையும் சாடியிருக்கிறார்.

    அறிவில் அந்நிய அறிவு, உள்ளூர் அறிவு என்றும் கிடையாது. சொல்லப்போனால் ஆர்.என்.ரவியின் ஞான பீடம் ஒரே கொடி, ஒரே தலைவர், ஒரே நாடு என்கிற உதவாக்கரை தத்துவத்தையும், சாகாவையும் பாசிஸ்ட் முசோலினியிடமிருந்தும், கொடி வணக்கம், மார்பில் கை வைத்து வணங்கும் முறை, சுவஸ்திக் ஆகியவற்றை ஹிட்லிரிடமிருந்தும் கடன்பெற்றுக் கொண்ட அமைப்பு.

    இன அழிப்புக் கொள்கைக்கு ஹிட்லரை முன்னோடியாக கொள்ள வேண்டும் என்று ஜெர்மன் நாஜியை குருவாக ஏற்றுக் கொண்ட அமைப்பு. தத்துவம், நடைமுறை என அனைத்தையும் ஐரோப்பாவிலிருந்து கடன் வாங்கிக் கொண்ட ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சார்ந்த ஆர்.என்.ரவி மார்க்சியத்தை அந்நிய தத்துவம் என்று பேசுவது அவரது அறியாமையையே காட்டுகிறது.

    மனிதகுல வரலாற்றில் ஆளும் வர்க்கத்தின் சுரண்டல், ஒடுக்குமுறை கொடுமைகளிலிருந்து உழைப்பாளி வர்க்கத்தை மீட்டு சுரண்டலற்ற பொதுவுடமை சமூகத்தை அமைக்க வழிவகுக்கும் மார்க்சிய சித்தாந்தத்தை விமர்சிப்பதன் மூலம் ஆளுநர் ரவி தான் ஆளும் வர்க்கத்தின் ஏஜெண்ட் என்பதையே வெளிப்படுத்தியுள்ளார். மார்க்சியம் இந்தியாவை சிதைத்துவிட்டது என்று பேசுகிறார்.

    பெருநோய்களை சிதைக்கும் தடுப்பு மருந்துகளை தவறானது என்று யாரும் பேச மாட்டார்கள். உலகத்தை அதன் அனைத்து விதமான கோரங்களிலிருந்தும் மீட்டெடுத்து அனைவருக்குமான பூமியாக மாற்றுவதே மார்க்சியத்தின் நோக்கம். அது சிதைக்கும் தத்துவமல்ல. அது செதுக்கும் தத்துவம். அறிவுச் சிதைவு ஏற்பட்டவர் மட்டுமே அதை சிதைக்கும் தத்துவமாக கருதுபவர்கள்.

    ஆர்.என்.ரவி அரசு அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டு அடாவடித்தனமாகவும், பொருத்தமற்ற முறையிலும் பேசுவதை கண்டித்தும், மார்க்சியம் குறித்து அவதூறாக பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க வலியுறுத்தியும் அவர் செல்லுமிடம் எல்லாம் கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பை தெரிவிப்பது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு முடிவு செய்துள்ளது.

    இதன் தொடக்கமாக 2023 பிப்ரவரி 28 அன்று கவர்னர் மாளிகை முன்பு கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும். இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்புகளும், ஜனநாயக முற்போக்கு இயக்கங்களும் கலந்துகொண்டு கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வரலாற்று சிறப்புமிக்க திறப்பு விழாவில் உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் அன்பான நல்வாழ்த்துக்கள்.
    • புதிய பாராளுமன்றம் தேசத்திற்கு பெருமை அளிப்பதாக பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

    சென்னை:

    டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலையில் திறந்து வைத்தார்.

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் தமிழ் நாட்டில் தயாரான செங்கோல் வைக்கப்பட்டுள்ளது.

    வெகு விமரிசையாக நடைபெற்ற பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சி குறித்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிரதமரை பாராட்டி 'டுவிட்டரில்' பதிவிட்டு இருப்பதாவது:-

    நமது தேசத்தின் ஒளிமயமான கடந்த காலத்தையும், எழுச்சிமிக்க நிகழ் காலத்தையும், பிரகாசமான எதிர் காலத்தையும், பிரதி பலிக்கும் நமது புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் வரலாற்று சிறப்புமிக்க திறப்பு விழாவில் உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் அன்பான நல்வாழ்த்துக்கள்.

    புனித செங்கோலை அதிகாரமாற்ற கலாசாரம் மற்றும் சுதந்திரத்தின் அடையாளமாகவும், நியாயமான ஆளுகையை தொடர்ந்து நினைவூட்டவும், பாராளுமன்றத்தில் அதற்குரிய இடத்தில் வைப்பது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கும். இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு தேசம் என்றும் நன்றியுடன் இருக்கும்.

    இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

    புதிய பாராளுமன்றம் தேசத்திற்கு பெருமை அளிப்பதாக பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியும் பாராட்டி உள்ளார்.

    • மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.
    • பல முக்கிய பிரமுகர்களும் மகா கும்பமேளாவுக்கு சென்று புனித நீராடி வருகின்றனர்.

    உத்தரபிரதேச மாநிலம் பிரயாக் ராஜ்நகரில் 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் என்ற இடத்தில் மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்வு என்பதால் நாடு முழுவதும் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு சென்று திரி வேணி சங்க மத்தில் புனித நீராடி வருகின்றனர்.

    வாழ்வில் மிகவும் அரிய நிகழ்வு என்பதால் பல முக்கிய பிரமுகர்களும் மகா கும்பமேளாவுக்கு சென்று புனித நீராடி வருகின்றனர்.

    அந்த வகையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கும்பமேளாவில் இன்று புனித நீராடி வழிபட்டார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பாரதம் மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து வந்த எண்ணற்ற கோடிக்கணக்கான இந்துக்களுடன் சேர்ந்து, பிரயாக்ராஜின் புண்ணிய தீர்த்தமான திவ்ய, பவ்ய மகாகும்பத்தில் புனித நீராடி, தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளின் நல்வாழ்வுக்காகவும், நமது மாபெரும் தேசமான பாரதத்தின் இணக்கமான வளத்துக்காகவும் வேண்டி வழிபட்டேன்.

    இங்கு காற்றில் பரவியுள்ள தீவிரமான நேர்மறை சக்தி அனைவரையும் ஆழமாகத் தொட்டு, மற்றவர்களுடன் இணைக்கிறது.

    சுமார் 60 கோடி சனாதனிகள் ஏற்கெனவே புனித நீராடிய இந்த தனித்துவமான மற்றும் பிரம்மாண்டமான சனாதன தர்ம விழா, மறுமலர்ச்சியடைந்த ஒரே பாரதம் உன்னத பாரதத்தின் உறுதியான சான்றாகும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மாணவ, மாணவியர்களுக்கும் எனது சிறப்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    • தயவு செய்து வீட்டுச் சூழலை மன அழுத்தமில்லாமல் வைத்திருங்கள்.

    தமிழ்நாட்டின் 12-ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் முறையே 03.03.2025 மற்றும் 05.03.2025 அன்றும் தொடங்க இருக்கின்றன.

    12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 8,21,057 மாணவ, மாணவியர்களும், 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 8,23,261 மாணவ, மாணவியர்களும் தேர்வெழுதவுள்ளனர்.

    இந்நிலையில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தமிழக ஆளுநர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    நாளை +2 தேர்வு எழுதும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் எனது சிறப்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

    இன்று இரவு நன்றாக உறங்குங்கள். உங்கள் தேர்வுகளை அமைதியாகவும் நம்பிக்கையுடனும் அணுகுங்கள்.

    முன்கூட்டியே தேர்வு மையத்தை அடையவும். ஒவ்வொரு கேள்வியையும் கவனமாகப் படித்து, உங்களுக்கு எளிதாகத் தெரிந்தவற்றுக்கு விடை எழுதத் தொடங்கவும்.

    ஒரு கேள்வி சவாலானதாக உணர்ந்தால், ஆழமாக பெரு மூச்சு விட்டு, சில நொடிகள் அமைதி காத்தால் - தெளிவாகும் நமது மனம் விடைகளை கண்டுபிடிக்கும்.

    அன்பான பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களே, இந்த நேரத்தில் மாணவ, மாணவியர்களுக்கான உங்களுடைய உணர்வுபூர்வ ஆதரவு முக்கியமானது.

    தயவு செய்து வீட்டுச் சூழலை மன அழுத்தமில்லாமல் வைத்திருங்கள். உங்கள் பிள்ளைகள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×