என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வளா்ச்சி திட்டப்பணி"
- வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர்வினீத் நேரில் பாா்வை யிட்டு ஆய்வு செய்தாா்.
- பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அலுவலா்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினாா்.
திருப்பூர் :
திருப்பூா் மாநகரில் குடிநீா் குழாய் பதித்தல், சாலை வசதி, பாதாள சாக்கடைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மாநகராட்சி நிா்வாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், திருப்பூா் மாநகராட்சி 2 மற்றும் 4 வது மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர்வினீத் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இதில் திருப்பூா் மாநகராட்சி 2 வது மண்டலத்துக்கு உள்பட்ட கவிதா நகா் பகுதியில் 4 வது குடிநீா் திட்டத்தின்கீழ் வீடுகளுக்கு குடிநீா் குழாய் பதிக்கும் பணிகளைப் பாா்வையிட்டாா். அதே போல 4 வது மண்டலத்துக்கு உட்பட்ட கிருஷ்ணா நகா், ஜான்ஜோதி காா்டன் பகுதிகளில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளையும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது வளா்ச்சித் திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அலுவலா்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினாா்.
இதைத்தொடா்ந்து எஸ்.ஆா்.நகா் நீருந்து நிலையத்தில் மரக்கன்றுகளை கலெக்டர் நட்டுவைத்தாா். இந்த ஆய்வின்போது, திருப்பூா் மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், மண்டல உதவி ஆணையா்கள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.