என் மலர்
நீங்கள் தேடியது "மகளிர் உலகக் கோப்பை ஹர்மன்ப்ரீத் கவுர்"
- நேற்று மாலை வரையிலும் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
- வஸ்த்ரகர் விளையாடபோவதில்லை என உறுதியாக கூறப்பட்டாலும், ஹர்மன்ப்ரீத் பற்றி போட்டி தொடங்குவதற்கு முன்னரே தெரிய வரும்.
மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் அரை இறுதி போட்டியில் இன்று இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. கேப்டவுன் நியூலாண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்தப் போட்டி தொடங்குவதற்கு இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல் பந்து வீச்சாளரான பூஜா வஸ்த்ரகரும் இன்றைய போட்டியில் விளையாடவில்லை என தெரியவந்துள்ளது.
ஹர்மன்ப்ரீத் கவுர் கடந்த இருநாள்கள் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இவர் போட்டியில் பங்கேற்பது குறித்து அணி நிர்வாகம் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
நேற்று மாலை வரையிலும் இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். வஸ்த்ரகர் விளையாடபோவதில்லை என உறுதியாக கூறப்பட்டாலும், ஹர்மன்ப்ரீத் பற்றி போட்டி தொடங்குவதற்கு முன்னரே தெரிய வரும்.