என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிந்தனைச்செல்வன் பேட்டி"

    • தி.மு.க.வில் கூட்டணி வைத்து அழித்தார்களோ, அதேபோல் தற்போது வி.சி.க.வை அழித்து வருகிறார்கள்.
    • திமுக - விசிக கூட்டணி குறித்து விமர்சனம் செய்த ஆதவ் அர்ஜூனாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், " ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை எப்படி தி.மு.க.வில் கூட்டணி வைத்து அழித்தார்களோ, அதேபோல் தற்போது வி.சி.க.வை அழித்து வருகிறார்கள்" என்றார்.

    திமுக - விசிக கூட்டணி குறித்து விமர்சனம் செய்த ஆதவ் அர்ஜூனாவுக்கு வி.சி.க எம்.எல்.ஏசிந்தனைச் செல்வன் பதிலடி கொடுத்துள்ளார்.

    அப்போது அவர், " விசிகவுக்கு யாரும் பாடம் எடுக்கத் தேவையில்லை" என்று கூறியுள்ளார்.

    • சிந்தனைச் செல்வன் எம்.எல்.ஏ. தருமபுரியில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
    • அ.தி.மு.க தனது தனித்தன்மையை பா.ஜ.க.விடம் அடகு வைத்திருக்கிறது.

    தருமபுரி,

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற குழு தலைவருமான சிந்தனைச் செல்வன் எம்.எல்.ஏ. தருமபுரியில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சிந்தனைச் செல்வன் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தி.மு.க ஆட்சி செய்து மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. இதற்கான அறுவடையாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.விற்கு மாபெரும் வெற்றி கிடைக்கும்.

    எதிரணியில் இருப்பவர்கள் தங்களது வைப்புத் தொகையை பாதுகாத்துக் கொள்ளவே இந்த தேர்தலில் போராடி வருகின்றனர். பா.ஜ.க. தமிழக அரசியலை மிகவும் தரம் தாழ்ந்து, அநாகரீகமான களமாக மாற்றி வருகிறது. அரசியல் தலைவர்களை கீழ்தரமாக விமர்சனம் செய்வது, விமர்சனம் செய்வதில்லாமல் பல தருணங்களில் வன்முறைகளை ஊக்குவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளது.

    பா.ஜ.க.வின் இந்த வன்முறை அரசியலை கண்டித்து வருகிற 28-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    கவர்னராக உள்ள ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டின் மீது ஒரு பண்பாட்டுக் கருத்தியல் தாக்குதல்களை நடத்தி வருகிறார். ஆர்.எஸ்.எஸ்,சின் கொள்கை பரப்புச் செயலாளராக தொடர்ந்து செயல்பட்டு வருவது மிகுந்த வேதனையாக உள்ளது.

    அ.தி.மு.க மற்றும் தி.மு.க கட்சிகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்ட தலைவர்கள் ஒத்த கருத்துடையவர்களாக இருந்து வந்தனர். இது கடந்த கால வரலாறு. ஆனால் அ.தி.மு.க தனது தனித்தன்மையை பா.ஜ.க.விடம் அடகு வைத்திருக்கிறது.

    அ.தி.மு.க தனது தனித்தன்மையை இழக்காமல், வலுவான, ஜனநாயக பூர்வமான அரசியல் கட்சியாகவும், ஒரு வலுவான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும் என்பது விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட ஜனநாயக சக்திகளின் எதிர்பார்ப்பு.

    தமிழ்நாட்டில் பல ஏக்கர் பஞ்சமி நிலங்கள் பறிபோய் இருக்கின்றன. கடந்த ஆண்டு ஆதிதிராவிட நலத்துறை கொள்கை குறிப்பேட்டின்படி ரூ.2 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் கண்டறியபட்டு இருக்கின்றன. மேலும் மீதமுள்ள நிலங்கள் எவ்வாறு கண்டறியப்படுவது, கண்டறியப்பட்ட நிலங்களை எவ்வாறு தக்க வைத்துக் கொள்வது என்ற கேள்வி எழுகிறது. எனவே அதிகாரம் மிக்க ஒரு நிலம் மீட்பு ஆணையத்தை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என

    கோரிக்கை வைத்துள்ளோம். ஒவ்வொரு கோரிக்கைகளாக நிறைவேற்றி வரும் தமிழக அரசு பஞ்சமி நிலத்தை மீட்பதற்கான அதிகாரம் மிகுந்த நில மீட்பு ஆணையத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கின்றோம் என சிந்தனை செல்வன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

    ×