என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மருத்துவ அவசரநிலை"
- பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டதற்கு வருத்தம் தெரிவித்து இண்டிகோ விமான நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
- முன்னதாக, போது, விமானத்தின் வால் பகுதி தரையில் உரசியதால் திருவனந்தபுரத்திற்கு திருப்பி விடப்பட்டது.
கேரள மாநிலம் கொச்சியில் இருந்து இண்டிகோ விமானம் 6E 2407 ஒன்று நேற்று டெல்லிக்கு புறப்பட்டது. அப்போது, திடீரென மருத்துவ அவசரநிலை ஏற்பட்டதால், டெல்லியில் தரையிறங்க வேண்டிய விமானத்தை மத்தியப் பிரதேசம் மாநிலம், போபாலுக்கு திருப்பிவிடப்பட்டது.
இந்நிலையில், பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டதற்கு வருத்தம் தெரிவித்து இண்டிகோ விமான நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும், அந்த அறிக்கையில், " மருத்துவ அவசரநிலை காரணமாக விமானம் போபாலில் தரையிறக்கப்பட்டதற்கு வருத்தம் தெிரவித்துக் கொள்கிறோம். போபாலில் தரையிறங்கிய பிறகு, விமான நிலையக் குழுவினர், ஒரு நொடி கூட வீணடிக்காமல், விரைவாக உடல்நிலை பாதிக்கப்பட்ட பயணியை ஆம்புலன்ஸில் ஏற்றி, அவரைப் பாதுகாப்பாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றினோம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
முந்தைய நாள், கோழிக்கட்டில் இருந்து தம்மம் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்படும் போது, விமானத்தின் வால் பகுதி தரையில் உரசியதால் திருவனந்தபுரத்திற்கு திருப்பி விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.