என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரேக் சேப்பல்"

    • வெற்றியை வசப்படுத்த ஆஸ்திரேலிய அணி தங்களது பலத்திற்கு தகுந்தபடி விளையாட வேண்டியது அவசியமானதாகும்.
    • வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலன்டை விடுத்து சுழற்பந்து வீச்சாளர் குனேமேனை ஆடும் லெவனில் சேர்த்தது தவறான முடிவாகும்.

    சிட்னி:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நாக்பூரில் நடந்த முதலாவது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்திலும், டெல்லியில் நடந்த 2-வது டெஸ்டில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிப்பதுடன், பார்டர்-கவாஸ்கர் கோப்பையை தக்கவைத்தது. இரண்டு டெஸ்டிலும் இந்திய சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி 3-வது நாளிலேயே சுருண்டது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் வருகிற 1-ந் தேதி தொடங்குகிறது. தனது தாயார் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பதால் கேப்டன் கம்மின்ஸ் 3-வது டெஸ்டில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக ஸ்டீவன் சுமித் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்துகிறார்.

    இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியினர் மோசமான தோல்வியை சந்தித்ததால் அந்த அணி மீது விமர்சனங்கள் எழுந்து இருக்கின்றன. அந்த அணியினர் சூழ்நிலையை சரியாக புரிந்து துணிச்சலுடன் ஆடவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது.

    இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவானும், முன்னாள் பயிற்சியாளருமான கிரேக் சேப்பலும் ஆஸ்திரேலிய அணியின் செயல்பாட்டை குறை சொல்லி இருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், 'இவான்டர் ஹோலிபீல்டுடனான மோதலுக்கு முன்னதாக அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் கூறுகையில் 'வாயில் குத்து விழுவது வரை ஒவ்வொருவருக்கும் ஒரு திட்டம் இருக்கும்' என்றார். ஆஸ்திரேலிய அணியின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளை பார்க்கையில் அவர் சொன்னது தான் எனது நினைவுக்கு வந்தது. ஆஸ்திரேலிய அணியினர் முதல் பந்தை எதிர்கொள்வதற்கு முன்பே தங்களை தானே வாயில் குத்திக்கொண்டனர். ஒரு தொடரை பொறுத்தமட்டில் திட்டமிடுதல் மிகவும் முக்கியமானது. குறைபாடுகளுடன் கூடிய திட்டம் பலனற்றதாகும்.

    வெற்றியை வசப்படுத்த ஆஸ்திரேலிய அணி தங்களது பலத்திற்கு தகுந்தபடி விளையாட வேண்டியது அவசியமானதாகும். சுழற்பந்து வீச்சு நமது பலம் கிடையாது. இந்தியாவில் விளையாடுகிறோம் என்பதற்காக கூடுதலாக சுழற்பந்து வீச்சாளர்களை எடுத்தால் அது வெற்றிக்கு எந்தவகையிலும் உதவாது. ஆஸ்திரேலிய அணியின் பலம் வேகப்பந்து வீச்சாகும். நீங்கள் அணியின் சிறந்த பவுலர்களை ஆட வைப்பதுடன் அவர்கள் மீது நம்பிக்கை வைத்து ஊக்கம் அளிக்க வேண்டும். பேட்ஸ்மேன்களும் புத்திசாலித்தனமாக ஆடி அவர்களுக்கு பலம் சேர்க்க வேண்டும். வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலன்டை விடுத்து சுழற்பந்து வீச்சாளர் குனேமேனை ஆடும் லெவனில் சேர்த்தது தவறான முடிவாகும். கம்மின்ஸ் ஷாட் பிட்ச் பந்து வீச்சை சரியாக செய்யாததும் பாதகமாக அமைந்தது.

    டெல்லி டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சூழ்நிலைக்கு தகுந்தபடி ஆபத்து குறைவான ஷாட்களை ஆடாமல் ஸ்வீப் ஷாட்டை அதிகம் நம்பி ஆடியது சரிவுக்கு வழிவகுத்தது. இந்திய சூழ்நிலையில் பேட்டிங் எப்படி ஆட வேண்டும் என்பதை நன்கு உணர்ந்து செயல்பட வேண்டியது அவசியமானதாகும். முதல் இரண்டு மூன்று ஓவர்களில் தங்களை நிலைநிறுத்தி கொண்டு ஷாட் ஆட வேண்டும். இனி வரும் ஆட்டங்களில் முதலில் ஆஸ்திரேலியா சிறந்த அணியை தேர்வு செய்ய வேண்டும். அடுத்து உறுதியுடனும், துணிச்சலுடனும் தங்களுக்குரிய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இந்திய மண்ணில் ஆடுவது கடினம் என்பது ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு தெரியும். ஒரு சிறந்த அணியால் தோற்கடிக்கப்படுவதை ஆஸ்திரேலிய ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் பொறுப்பற்ற முறையில் ஆடி 3 நாட்களுக்குள் ஆட்டம் இழப்பதை எல்லாம் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வது கடினம்' என்றார்.

    • 5 பேட்ஸ்மேன்களுமே அவர்களது அணிக்காக அதிக ரன்களை குவித்து உள்ளனர்.
    • உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடப்பதால் அந்த அணிக்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

    மெல்போர்ன்:

    கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் 'பேபுலஸ் போர்' (மிகச்சிறந்த நால்வர்) என்ற வார்த்தை பிரபலமானது. வீராட்கோலி (இந்தியா), ஜோரூட் (இங்கிலாந்து), வில்லியம்சன் (நியூசிலாந்து), ஸ்டீவ் சுமித் (ஆஸ்திரேலியா) ஆகியோர் இதில் இடம் பெற்றுள்ளனர்.

    தற்போது இந்த அடை மொழியில் பாகிஸ்தானின் பாபர் ஆசம் 5-வதாக இணைந்துள்ளார். அதனால் 'பேப் 5' என அழைக்கப்படுகிறது.

    இந்நிலையில் இந்த 5 வீரர்களில் உலக கோப்பை போட்டியில் வீராட்கோலியும், ஸ்டீவ் சுமித் தான் முத்திரை பதிப்பார்கள் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான கிரேக் சேப்பல் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்த 5 பேட்ஸ்மேன்களுமே அவர்களது அணிக்காக அதிக ரன்களை குவித்து உள்ளனர். இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பையில் இந்த 5 பேருமே ரன்களை குவிக்க வாய்ப்பு உள்ளது. ஒருநாள் போட்டி, டெஸ்ட், 20 ஓவர் என 3 வடிவிலான போட்டிகளிலும் சிறப்பாக இருப்பது வீராட்கோலி, ஸ்டீவ் சுமித் மட்டுமே.

    இருவரும் இந்த உலக கோப்பை போட்டியில் தங்களது முத்திரையை பதிப்பார்கள் என்று நம்புகிறேன்.

    உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடப்பதால் அந்த அணிக்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆசிய அணிகள் இந்தியாவில் சிறப்பாக செயல்படும்.

    ஆனால் சமீபகாலமாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்கள் இந்தியாவில் அபாரமாக ஆடுகிறார்கள். இந்தியாவில் அவர்கள் தங்கள் நேரத்தை செலவிடு கிறார்கள். இதனால் உலக கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு அதிகமான வாய்ப்பு உள்ளது.

    34 வயதான வீராட்கோலி டெஸ்டில் 8676 ரன்னும் (111 போட்டி) ஒருநாள் போட்டியில் 12,898 ரன்னும் (275), 20 ஓவரில் 4008 ரன்னும் (115) எடுத்துள்ளார். அவரது சராசரி முறையே 49.29, 57.32 மற்றும் 52.73 ஆக இருக்கிறது.

    34 வயதான ஸ்டீவ் சுமித் டெஸ்டில் 9320 ரன்னும் (102), ஒருநாள் போட்டியில் 4939 ரன்னும் (142) எடுத்து உள்ளார். அவரது சராசரி முறையே 58.61 மற்றும் 44.49 ஆக இருக்கிறது.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
    • ஐசிசி பும்ராவின் ஏமாற்று பவுலிங் ஆக்சனுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில்லை.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில் 150 ரன்னில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 104 ரன்னில் சுருண்டது.

    46 ரன்கள் முன்னிலையில் 2- வது இன்னிங்சை ஆடிய இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 487 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 534 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஜெய்ஷ்வால் (161 ரன்), விராட் கோலி (100 ரன்) ஆகியோர் சதம் அடித்தனர். கே.எல்.ராகுல் 77 ரன் எடுத்தார்.

    534 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலியா 238 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இப்போட்டியில் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டும் இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டும் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவிய கேப்டன் பும்ராவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

    இதனையடுத்து, பும்ராவின் பவுலிங் ஆக்சன் பந்தை எறிவது போல் இருப்பதாலேயே அவரை எதிர்கொள்வது கடினமாக உள்ளது என்றும் ஆனால் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் ஐசிசி அவருடைய ஏமாற்று பவுலிங் ஆக்சனுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில்லை என்று ஆஸ்திரேலிய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சித்தார்கள்.

    இந்நிலையில், ரசிகர்களின் இத்தகைய விமர்சனத்துக்கு முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் கிரேக் சேப்பல் பதிலடி கொடுத்துள்ளார்.

    இது தொடர்பாக தி சிட்னி மார்னிங் ஹெரால்டு பத்திரிகையில் சேப்பல் எழுதியுள்ள தனது கட்டுரையில், "பும்ரா தலைமையில் இந்தியாவின் பவுலர்கள் மிகவும் சிறப்பாக பந்துவீசினார்கள். அதனால் ஆஸ்திரேலியா 52 ஓவரில் 104க்கு ஆல் அவுட்டானது. சில நேரங்களில் பும்ரா கிட்டத்தட்ட விளையாட முடியாதவராக இருந்தார்.

    பும்ராவின் ஆக்சன் பற்றி கேள்வி எழுப்பும் நான்சென்ஸ் வேலையை தயவு செய்து நிறுத்துங்கள். அவருடைய ஆக்சன் தனித்துவமானது. அதே சமயம் அது சந்தேகத்துக்கு இடமின்றி சரியாக உள்ளது அப்படிப்பட்ட ஒருவரை விமர்சிப்பது ஒரு சாம்பியனையும் நம்முடைய விளையாட்டையும் இழிவு படுத்துகிறது" என்று எழுதியுள்ளார்.

    ×