என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நாகாலாந்து சட்டசபை தேர்தல்"
- பா.ஜனதா மீது மீண்டும் ஒருமுறை நம்பிக்கை வைத்ததற்காக திரிபுரா மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
- நாகாலாந்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை மீண்டும் தேர்ந்தெடுத்த மக்களுக்கு இதயத்தின் அடித்தளத்தில் இருந்து நன்றி தெரிவிக்கிறேன்.
3 மாநில சட்டசபை தேர்தல்களில் பா.ஜனதா பெற்ற வெற்றிக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வரவேற்பு தெரிவித்துள்ளார்.
அவர் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
வடகிழக்கு பகுதிக்கு இது வரலாற்று சிறப்புமிக்க நாள். பா.ஜனதா மீது மீண்டும் ஒருமுறை நம்பிக்கை வைத்ததற்காக திரிபுரா மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
பா.ஜனதா முன்னெடுத்த வளர்ச்சி சார்ந்த அரசியலுக்கு கிடைத்த வெற்றி.
வளர்ச்சி மற்றும் வளமைக்காக பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதாதான், மக்களின் முதல் விருப்பம் என்பது நிரூபணமாகி விட்டது.
நாகாலாந்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை மீண்டும் தேர்ந்தெடுத்த மக்களுக்கு இதயத்தின் அடித்தளத்தில் இருந்து நன்றி தெரிவிக்கிறேன். மேகாலயா மக்களுக்கும் நன்றி.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- திரிபுராவில் ஆட்சியமைக்க 31 இடங்கள் தேவை என்ற நிலையில், 32 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது
- மேகாலயாவின் சோஹியாங் தொகுதியில் ஒரு வேட்பாளர் உயிரிழந்ததால், 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
புதுடெல்லி:
திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் திரிபுராவில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை மீண்டும் கைப்பற்றி உள்ளது.
60 தொகுதிகளை கொண்ட திரிபுராவில் ஆளும் பாஜக 55 இடங்களில் போட்டியிட்டது. மீதமுள்ள 5 தொகுதிகளில் கூட்டணி கட்சியான திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி கட்சி (ஐ.பி.எப்.டி.) போட்டியிட்டது.
வாக்குகள் இன்று மாலை எண்ணி முடிக்கப்பட்டன. ஆட்சியமைக்க 31 இடங்கள் தேவை என்ற நிலையில், 32 இடங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. கூட்டணி கட்சியான ஐ.பி.எப்.டி. ஒரு தொகுதியில் வென்றது. திப்ரா மோதா கட்சி 13 தொகுதிகளை கைப்பற்றி இரண்டாம் இடத்தை பிடித்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்11 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
இதேபோல் 60 தொகுதிகளை கொண்ட நாகாலாந்து மாநிலத்தில் பாஜக- தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜக-என்டிபிபி கூட்டணி 37 தொகுதிகளை கைப்பற்றியது. பாஜக 12 தொகுதிகளிலும், என்டிபிபி 25 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ்-7, தேசிய மக்கள் கட்சி-5, நாகா மக்கள் முன்னணி-2, லோக் ஜன சக்தி (ராம் விலாஸ்)-2, ஐக்கிய ஜனதா தளம்-1 மற்றும் சுயேட்சைகள் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். நாகாலந்தின் தற்போதைய முதல்-மந்திரி ரியோ அங்காமி 2 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
மேகாலயாவின் சோஹியாங் தொகுதியில் ஒரு வேட்பாளர் உயிரிழந்ததால், 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சியமைக்க 31 தொகுதிகளில் வெற்றி பெறவேண்டும் என்ற நிலையில், முதல்வர் கான்ராட் சங்மாவின் தேசிய மக்கள் கட்சி (என்பிபி) அதிகபட்சமாக 26 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
ஐக்கிய ஜனநாயக கட்சி 11 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் திரிணாமுல் காங்கிரஸ் 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மக்களின் குரல் கட்சி 4 தொகுதிகளிலும், மலை மாநில மக்கள் ஜனநாயகக் கட்சி, மக்கள் ஜனநாயக முன்னணி தலா 2 இடங்களிலும், சுயேட்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். இங்கு யாருக்கும் பெரும்பான்மைக்கு கிடைக்காததால் கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்புள்ளது. அதிக தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள என்பிபி கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்போம் என்று பாஜக தெரிவித்துள்ளது.
- வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
- வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறும்
கோஹிமா:
நாகாலாந்து மாநிலத்தில் நான்கு தொகுதிகளில் சட்டமன்ற தேர்தலுக்கான மறு வாக்குப்பதிவு தொடங்கியது.வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
ஜூன்ஹிபோட்டோ, சனீஷ், டிஷீட், தோனாக்யூ சட்டமன்ற தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
நாகாலாந்தில் கடந்த 27-ம் தேதி 59 தொகுகளில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்தது..தேர்தல் முடிவுகள் மார்ச் 2-ம்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நாகாலாந்தில் 4 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.
- நாகாலாந்தில் என்.டி.பி.பி - பாஜக கூட்டணி ஆட்சியை தக்கவைக்கும் என கருத்துக்கணிப்பு வெளியானது.
கோஹிமா:
வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து சட்டசபைகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் திரிபுராவில் கடந்த 16-ம் தேதியும், மேகாலயா, நாகாலாந்துக்கு நேற்றும் (27-ம் தேதியும்) வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த 3 மாநில தேர்தல் முடிவுகளும் மார்ச் 2-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, 3 மாநில தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. அதில் இரு மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.
நாகாலாந்தில் என்.டி.பி.பி - பாஜக கூட்டணி ஆட்சியை தக்கவைக்கும் என்றும், என்டிடிபி 38 - 48 தொகுதிகளிலும், என்பிஎஃப் 3 - 8 தொகுதிகளிலும் காங்கிரஸ் 1 - 2 தொகுதிகளிலும், மற்றவை 5 - 15 இடங்களிலும் வெற்றி பெறும் என்றும் கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், தேர்தல் பொது பார்வையாளர்கள் அளித்த அறிக்கையின் படி, நாகாலாந்து சட்டசபை தொகுதிகளில் உள்ள 4 வாக்குச் சாவடிகளில் மார்ச் 1-ம் தேதி (நாளை) மறுவாக்குப்பதிவு நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
அதன்படி ஜூன்ஹிபோட்டோ சட்டமன்றத் தொகுதியின் கீழ் உள்ள நியூ காலனி, சனீஷ் தொகுதியின் கீழ் பாங்க்ரி வீ. டிஷீட் சட்டமன்றத் தொகுதியின் கீழ் ஜபோகா கிராம வாக்குச் சாவடி மற்றும் தோனாக்யூ சட்டமன்றத் தொகுதியின் கீழ் பாஸ்தோ கிழக்குப் பகுதி ஆகியவற்றில் மறு வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- திரிபுராவில் பா.ஜ.க. ஆட்சியை தக்கவைக்கும் என இந்தியா டுடே தெரிவித்துள்ளது.
- நாகாலாந்தில் என்.டி.பி.பி - பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை தக்கவைக்கும்.
புதுடெல்லி:
திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டன. 3 மாநிலங்களிலும் எந்தக் கட்சி வெற்றி பெறும் என்ற கருத்துக்கணிப்பு முடிவுகளை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
திரிபுராவில் பா.ஜ.க. 36-45, இடது சாரிகள் 6-11 டி.எம்.பி. 9-16 இடங்களைப் பெறும் என இந்தியா டுடே சேனல் கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது.
திரிபுராவில் பா.ஜ.க. 36-45 இடதுசாரிகள் 6-11 இடங்களைப் பெறும் என என் டிவி கணிப்பை வெளியிட்டுள்ளது.
நாகாலாந்தில் என்.டி.பி.பி - பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை தக்கவைக்கும்.
மேகாலயாவில் என்.பி.பி. ஆட்சியை தக்கவைக்கும் என கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
மேகாலயாவில் பா.ஜ.க. 5 , காங்கிரஸ் 3, என்பிபி -20, பிற கட்சிகள் 30 இடங்களைப் பெறும் என டைம்ஸ் நவ் சேனல் கணித்துள்ளது.
நாகாலாந்து என்.டி.டி.பி 38-48, என்.பி.எப் 3-8 காங்கிரஸ் 1-2, பிறகட்சிகள் 5-15 இடங்களை பெறும் என இந்தியா டுடே சேனல் கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது.
- மேகாலயா, நாகாலாந்தில் ஒரே கட்டமாக இன்று சட்டசபை தேர்தல் நடந்தது.
- நாகாலாந்தில் 82 சதவீதமும், மேகாலயாவில் 74 சதவீதமும் வாக்குகள் பதிவானது.
புதுடெல்லி:
வடகிழக்கு மாநிலங்களான மேகாலயாவில் 60 தொகுதிகளுக்கும், நாகாலாந்தில் 60 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இரு மாநிலங்களிலும் பா.ஜ.க., காங்கிரஸ் போன்ற முக்கிய கட்சிகளும், மாநிலத்தை சேர்ந்த சிறிய கட்சிகளும் கடந்த சில வாரங்களாக மாநிலம் முழுவதும் அனல் பறக்கும் பிரசாரத்தை மேற்கொண்டன.
மேகாலயாவில் 21.6 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இங்கு ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்களே அதிகம். மாநிலத்தில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 375 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் சோஹியாங் தொகுதியில் ஒரு வேட்பாளர் உயிரிழந்ததால், 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகள் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டன. களத்தில் 4 பெண் வேட்பாளர்கள் இருந்தனர். இவர்கள் 4 பேரில் யாரேனும் ஒருவர் வெற்றி பெற்றால் அவர் மேகாலயா சட்டசபையின் முதல் பெண் எம்.எல்.ஏ.வாக இருப்பார்.
நாகாலாந்தில் 13.17 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 184 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இதில் பா.ஜ.க. ஒரு இடத்தில் போட்டியின்றி வெற்றி பெற்றது. இதனால் 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. ஆளும் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி (என்.டி.பி.பி.)-பா.ஜ.க. கூட்டணி இணைந்து முறையே 40, 20 தொகுதிகளில் போட்டியிட்டன. இதுபோல காங்கிரஸ் 23 இடங்களிலும், நாகா மக்கள் முன்னணி 22 தொகுதியிலும், ஜன்சக்தி கட்சி (ராம்விலாஸ் பாஸ்வான்) 15 தொகுதிகளிலும் போட்டியிட்டது.
இந்நிலையில், மேகாலயா, நாகாலாந்தில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். வாக்குச்சாவடிக்கு முதலில் வந்த 5 வாக்காளர்களுக்கு தேர்தல் கமிஷன் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இரு மாநிலங்களிலும் காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்குகளை பதிவு செய்தனர். மூத்த வாக்காளர்களும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். அமைதியான வாக்குப்பதிவை உறுதி செய்வதற்காக ஏராளமான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது.
இறுதியில் மேகாலயாவில் 82.42 சதவீத வாக்குகளும், நாகாலாந்தில் 74.32 சதவீத வாக்குகளும் பதிவானது.
திரிபுராவில் கடந்த 16-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து திரிபுராவுடன், மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தல் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி உள்ளிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
- நாகாலாந்தில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 57.06 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது.
- மேகாலயாவில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 44.73 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.
மேகாலயா, நாகாலாந்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த நிலையில், மேகாலயா, நாகாலாந்தில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 1 மணி நிலவரம் வெளியாகியுள்ளது. 1 மணி நிலவரப்படி நாகாலாந்தில் 57.06 சதவீதமும் மேகாலயாவில் 44.73 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளது.
வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- நாகாலாந்தில் 11 மணி நிலவரப்படி 35.76 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது.
- மேகாலயாவில் 11 மணி நிலவரப்படி 26.07 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.
மேகாலயா, நாகாலாந்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த நிலையில், மேகாலயா, நாகாலாந்தில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், காலை 11 மணி நிலவரம் வெளியாகியுள்ளது. 11 மணி நிலவரப்படி நாகாலாந்தில் 35.76 சதவீதமும் மேகாலயாவில் 26.07 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளது.
வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- மேகாலயா, நாகாலாந்து மக்கள் தவறாமல் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள்.
- முதல்முறை வாக்காளர்கள், இளைஞர்கள் அனைவரும் வாக்களித்து புதிய சாதனையை படைத்திடுக என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மேகாலயாவில் 59 தொகுதிக்கும், நாகாலாந்தில் 60 தொகுதிக்குமான சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. பொதுமக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில், மேகாலயா, நாகாலாந்து மக்கள் தவறாமல் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள் என்று பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும், முதல்முறை வாக்காளர்கள், இளைஞர்கள் அனைவரும் வாக்களித்து புதிய சாதனையை படைத்திடுக எனவும் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்