என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்"
- 6-வது முறையாக உலகக் கோப்பையை ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது.
- மெக்லானிங் தலைமையில் ஆஸ்திரேலிய பெண்கள் அணி, 2022-ம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலக கோப்பை மற்றும் 2014, 2018, 2020, 2023-ம் ஆண்டுகளில் நடந்த 20 ஓவர் உலக கோப்பைகள் என 5 கோப்பைகளை வென்று உள்ளது.
பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 6-வது முறையாக உலகக் கோப்பையை ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது.
உலக கோப்பையை வென்றதன் மூலம் ஆஸ்திரேலிய பெண்கள் அணி கேப்டன் மெக்லானிங் புதிய சாதனை படைத்தார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் போட்டிகளில் அதிக கோப்பையை வென்ற கேப்டன் என்ற சாதனையை அவர் படைத்தார்.
மெக்லானிங் தலைமையில் ஆஸ்திரேலிய பெண்கள் அணி, 2022-ம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலக கோப்பை மற்றும் 2014, 2018, 2020, 2023-ம் ஆண்டுகளில் நடந்த 20 ஓவர் உலக கோப்பைகள் என 5 கோப்பைகளை வென்று உள்ளது.
இதன் மூலம் அவர், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (4 முறை), இந்தியாவின் டோனி (3 முறை) ஆகியோரை முந்தினார்.