என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஜிடிபி"
- எல்ஐசியின் சொத்து மதிப்புரூ.51,21,887 கோடியை எட்டியுள்ளது.
- கடந்தாண்டு மார்ச் மாத இறுதியில் எல்ஐசியின் சொத்துமதிப்பு ரூ.43,97,205 கோடியாக இருந்தது.
எல்ஐசி நிறுவனம் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 50 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இது இலங்கை, பாகிஸ்தான், நேபாள நாடுகளின் ஒட்டுமொத்த மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
எல்ஐசியின் சொத்துக்கள் ஆண்டுக்கு ஆண்டு (ஒய்ஒய்) 16.48% அதிகரித்து மார்ச் இறுதிக்குள் ரூ.51,21,887 கோடியை (616 மில்லியன் டாலர்) எட்டியுள்ளது. இதுவே கடந்தாண்டு மார்ச் மாத இறுதியில் ரூ.43,97,205 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
டென்மார்க், பின்லாந்து, சிங்கப்பூர், ஹாங்ஹாங் போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியை விட எல்ஐசியின் சொத்து மதிப்பு அதிகமாகும்.
2024 நிதியாண்டில் எல்ஐசி ரூ.40,676 கோடி லாபம் ஈட்டியுள்ளது. எல்ஐசியின் மொத்த பிரீமியம் வருமானம் ரூ.4,75,070 கோடியாகும். இந்த நிதியாண்டில் பங்குபெறும் பாலிசிதாரர்களுக்கு ரூ.52,955.87 கோடியை போனஸாக எல்ஐசி நிறுவனம் ஒதுக்கீடு செய்துள்ளது.
- ஜி.டி.பி. கணக்கெடுப்பு சரியாக இல்லை என்று தெரிவித்துள்ளார்.
- கணக்கெடுப்பு எப்படி நடத்தப்படுகிறது என்றே தெரியவில்லை.
உலகளவில் வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் இந்தியா ஐந்தாவது பெரிய பொளுதார சக்தியாக விளங்குகிறது என பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது இருந்தது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஏசியன் பெயிண்ட்ஸ் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான அமித் சிங்கிள் நாட்டின் ஜி.டி.பி. (GDP) கணக்கெடுப்பில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு துறைகளில் ஜி.டி.பி. கணக்கெடுப்பு சரியாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
"ஜி.டி.பி. கணக்கெடுப்பு எப்படி வருகிறது என்றே தெரியவில்லை. தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் ஜி.டி.பி. மற்றும் துறைவாரியான வளர்ச்சி விகிதத்தில் முரண்பாடுகள் உள்ளன. தற்போதைய நிதியாண்டில் ஜி.டி.பி. கணக்கெடுப்பு மதிப்பற்ற ஒன்றாக இருப்பதாக நீங்கள் சொல்வது சரியானது தான். நானும் இன்று அப்படியே உணர்கிறேன். உண்மையில் ஜி.டி.பி. கணக்கெடுப்பு எப்படி நடத்தப்படுகிறது என்றே தெரியவில்லை."
"தற்போது பேசப்படும் ஜி.டி.பி. கணக்கெடுப்பு துறைவாரியாக ஒற்றுப் போகவில்லை. குறிப்பாக ஸ்டீல் மற்றும் சிமெண்ட் துறைகளில் ஜி.டி.பி. கணக்கெடுப்பில் அதிக முரண்கள் உள்ளன. ஸ்டீல், சிமென்ட் என முக்கியமான துறைகளின் உண்மையான ஜி.டி.பி. ஒட்டுமொத்த ஜி.டி.பி.யின் வளர்ச்சியில் எங்கும் ஒற்றுப்போகவில்லை," என்று தெரிவித்துள்ளார்.
ஏசியன் பெயின்ட்ஸ் அதிகாரியின் கருத்தை மேற்கோள் காட்டிய காங்கிரஸ் கட்சி, "ஐந்தாவது பெரிய பொருளாதாரம் என்ற தகவல் போலி ஜி.டி.பி. தரவுகள் மூலம் வெளியிடப்பட்டுள்ளதா? அனைவரும் கூறிக் கொண்டு இருந்ததை ஏசியன் பெயின்ட்ஸ் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான அமித் சிங்கிள் உறுதிப்படுத்திவிட்டார்."
"அவர் ஜி.டி.பி. கணக்கெடுப்புக்கும் துறைவாரியான வளர்ச்சிக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை. ஜி.டி.பி. கணக்கெடுப்பில் மிகப்பெரிய அளவில் முரண்பாடு இருப்பதாக தெரித்துள்ளார். இந்த தகவல்களை அவர் மே 9 ஆம் தேதி நடைபெற்ற முதலீட்டாளர் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்," என்று தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
- இந்திய குடும்பங்களின் நிகர நிதி சேமிப்பு வெறும் 5 சதவீதம் என்கிற அளவுக்கு குறைந்துள்ளது.
- 2023-24-ம் நிதியாண்டில் குடும்பங்களின் செலவீனங்கள், முதலீடுகள் கணிசமாக பலவீனமடைந்துள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவின் முன்னணி நிதி நிறுவனமான மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியுள்ளதாவது:
இந்திய குடும்பங்களின் கடன் மதிப்புகள் கடந்த டிசம்பர் மாத நிலவரப்படி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 40 சதவீதம் என்ற அளவுக்கு உயர்ந்து புதிய உச்சம் தொட்டுள்ளது.
அதேசமயம் குடும்பங்களின் நிகர நிதிச் சேமிப்புகளும் குறைந்துள்ளது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிட்டால், இந்திய குடும்பங்களின் நிகர நிதி சேமிப்புகள் வெறும் 5 சதவீதம் என்கிற அளவுக்கு குறைந்துள்ளது.
2023-24-ம் நிதியாண்டில் குடும்பங்களின் செலவீனங்கள் மற்றும் முதலீடுகள் என இரண்டும் கணிசமாக பலவீனமடைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மூன்றாவது காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.4 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
- இது இந்திய பொருளாதாரத்தின் வலிமையையும், திறனையும் காட்டுகிறது என்றார் பிரதமர் மோடி.
புதுடெல்லி:
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2-வது காலாண்டில் 7.6 சதவீத வளர்ச்சி கண்டிருந்தது. 2023-24 நிதியாண்டின் 3-வது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.4 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.
இது இந்தியப் பொருளாதாரத்தின் வேகமான வளர்ச்ச்சியை காட்டுகிறது. கட்டுமானத்துறை, உற்பத்தித் துறையில் கண்டுள்ள வளர்ச்சி விகிதங்களே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில், 2023-24 மூன்றாம் காலாண்டில் பதிவாகியுள்ள 8.4 சதவீத ஜிடிபி வளர்ச்சி என்பது இந்தியப் பொருளாதாரத்தின் வலிமையையும் அதன் திறனையும் காட்டுகிறது. 140 கோடி இந்தியர்கள் சிறந்த வாழ்க்கை வாழவும், வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்கவும் உதவும் என பதிவிட்டுள்ளார்.
- 3-வது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.4 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
- உற்பத்தி துறையின் மோசமான செயல்பாடு காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
புதுடெல்லி:
நடப்பு நிதியாண்டின் (2022-2023) அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான 3-வது காலாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 4.4 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது.
உற்பத்தி துறையின் மோசமான செயல்பாடு காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதை தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 11.2 சதவீதமாக அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என தனது சமீபத்திய கணிப்பில் தேசிய புள்ளியியல் அலுவலகம் கூறியுள்ளது. இதற்கிடையே, கடந்த ஜனவரி மாதத்தில் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உரம், உருக்கு, சிமெண்ட், மின்சாரம் ஆகிய 8 முக்கிய துறைகளின் உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியுடன் ஒப்பிடுகையில் இது 7.8 சதவீதம் அதிகம் ஆகும். இத்தகவலை மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்