என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பி.எல்.ஐ."
- பி.எல்.ஐ., திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்சம் 100 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்க வேண்டும்.
- 10 கோடி ரூபாய முதலீட்டில் துவங்கினாலும், இத்திட்டத்தில் பயன்பெறலாம்.
திருப்பூர் :
ஜவுளித்தொழிலை பொறுத்தவரை செயற்கை நூலிழை ஆடை உற்பத்தி மட்டும் இணைக்கப்பட்டிருந்தது. ஜவுளித்துறையினர் கோரிக்கையை ஏற்று பருத்தி நூலிழை ஆடை உற்பத்தியும் இத்திட்டத்தில் இணைக்கப்பட உள்ளது.பி.எல்.ஐ., திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்சம் 100 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்க வேண்டும்.அடுத்த ஆண்டில் 200 கோடி ரூபாய் அளவுக்கு பரிவர்த்தனை செய்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.
சிறு, குறு தொழில்கள் பயன்பெறும் வகையில் குறைந்தபட்ச மூலதன முதலீடு 10 கோடி ரூபாயாக நிர்ணயிக்க வேண்டுமென தொழில்துறையினர் வலியுறுத்தி வந்தனர். இதனால் பல்வேறு நிபந்தனைகளுடன் திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிவிப்பதாக ஜவுளி துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் கூறியதாவது :- பருத்தி நூலிழை ஆடை உற்பத்தியாளர்களும் பயன்பெறும் வகையில் உற்பத்தி இணைப்பு ஊக்குவிப்பு (பி.எல்.ஐ., - 2.0) திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. முதலீட்டு வரம்பு 100 கோடி ரூபாய் என்பது குறைக்கப்பட்டுள்ளது.உதிரிபாகம் உற்பத்தி செய்யும் தொழில்கள் 10 கோடி ரூபாய முதலீட்டில் துவங்கினாலும், இத்திட்டத்தில் பயன்பெறலாம். ஏற்றுமதியாளர்கள் 20 கோடி, 30 கோடி மற்றும் 50 கோடி ரூபாய் முதலீட்டில் உற்பத்தியை துவக்கினாலும் பயன்பெற வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
- நாடு முழுவதும் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
- பி.எல்.ஐ., -2.0 திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடு 10 கோடி ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும்.
திருப்பூர் :
திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினருடன், மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் அமைச்சர் தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் கலந்தாய்வு நடத்தினார்.அப்போது அவர் பேசுகையில், மத்திய அரசு 75வது சுதந்திர தின அமுதபெருவிழாவையொட்டி நாடு முழுவதும் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம்.பி.எல்.ஐ., -2.0 திட்டம் தொடர்பாக திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். அவற்றை பரிசீலித்து புதிய விதிமுறைகளுடன், பி.எல்.ஐ., -2.0 திட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிமுறைகளுடன் கூடிய பி.எல்.ஐ., -2.0 திட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியன் கூறுகையில், பி.எல்.ஐ., -1 திட்டத்தில் பயன்பெற நிறுவனங்கள் 100 கோடி ரூபாய்க்கு அதிகமாக முதலீடு செய்திருக்க வேண்டும் என்பதால் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் பயன்பெற இயலவில்லை. பி.எல்.ஐ., -2.0 திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடு 10 கோடி ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். கோரிக்கையை கேட்டறிந்த மத்திய அமைச்சர் திருத்தப்பட்ட திட்ட வரைவு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். அறிவிப்பை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறோம் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்