search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுகன்யான் திட்டம்"

    • சூரியனை ஆராய்ச்சி செய்வதற்கான முன்னேற்பாடு பணிகளையும் இஸ்ரோ செய்து வருகிறது.
    • குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான இடத்தினை தமிழக அரசு கையகப்படுத்தி கொடுத்துவிட்டது.

    விருதுநகர்:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய ஆலோசகர் சிவன் தனது மனைவியுடன் விருதுநகர் வந்தார். அவர்களுடன் முன்னாள் மூத்த இஸ்ரோ விஞ்ஞானி சிவசுப்பிரமணியனும் விருதுநகர் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து காமராஜர் நினைவு இல்லம் சென்று பார்வையிட்டனர். பின்னர் நிருபர்களிடம் சிவன் கூறியதாவது:-

    மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் நிலவை ஆராய்ச்சி செய்யும் சந்திராயன்-3 திட்டம் ஆகியவற்றிற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் சூரியனை ஆராய்ச்சி செய்வதற்கான முன்னேற்பாடு பணிகளையும் இஸ்ரோ செய்து வருகிறது.

    மற்ற நாடுகளுக்கு சவால் விடும் வகையில் நாம் வளர வேண்டிய அவசியமில்லை. நம் நாட்டிற்கு தேவையான ஆராய்ச்சிகளை செய்து வருகிறோம். இந்தியாவில் இருந்து ஏவுகணைகளை விண்வெளிக்கு அனுப்புவதற்கான செலவு குறைவாக உள்ளதால் பல்வேறு நாடுகளும் இந்தியாவில் இருந்து தங்களது ஏவுகணைகளை அனுப்ப முன் வந்துள்ளன்.

    குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான இடத்தினை தமிழக அரசு கையகப்படுத்தி கொடுத்துவிட்டது. அங்கு கட்டுமான பணிகள் மற்றும் பிற பணிகளை தொடங்குவதற்காக நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த ராக்கெட் ஏவுதளம் அமைந்தால் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அப்பகுதியின் பொருளாதார நிலைமை மேம்பாடு அடையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×