search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்"

    • டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணியின் பந்து வீச்சு மோசமாக இருந்தது.
    • ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு அணி தனது தொடக்க ஆட்டத்தில் டெல்லியிடம் தோற்றது.

    மும்பை:

    முதலாவது பெண்கள் பிரி மீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.

    5 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டித் தொடரில் இன்று நடக்கும் 4-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

    மும்பை அணி தனது தொடக்க ஆட்டத்தில் குஜராத்தை 143 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    மும்பை 2-வது வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணியில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஹெய்லி மேத்யூஸ், அமெலியாகெர், நடாலி ஸ்கிவர்-பிரன்ட் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.பந்து வீச்சில் சைகா இஷாக், வாங், பூஜா வஸ்த்ரகர் ஆகியோர் உள்ளனர். மும்பை அணி பேட்டிங், பந்து வீச்சில் சம பலம் வாய்ந்ததாக உள்ளது.

    ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு அணி தனது தொடக்க ஆட்டத்தில் டெல்லியிடம் தோற்றது. அந்தஅணி முதல் வெற்றியை பெறும் முனைப்பில் உள்ளது. அந்த அணியில் சோபியா டிவன், எல்லிஸ் பெர்ரி, ரிச்சா கோஷ், ஹீதர் நைட், மேகன்ஷட், ரேணுகா சிங் ஆகிய வீராங்கனைகள் உள்ளனர்.

    டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணியின் பந்து வீச்சு மோசமாக இருந்தது. அந்த ஆட்டத்தில் டெல்லி 223 ரன்கள் குவித்தது. இதனால் பெங்களூரு அணி பந்து வீச்சில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியம்.

    நேற்று மாலை நடந்த லீக் ஆட்டத்தில் பெங்களூர் அணியை டெல்லி வீழ்த்தியது. இரவு நடந்த ஆட்டத்தில் குஜராத் அணியை உ.பி.வாரியர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியா சத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. பெங்களூர் அணி தனது தொடக்க ஆட்டத்தில் தோற்றது. டெல்லி, உ.பி.வாரியர்ஸ் அணிகள் தங்களது தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன.

    ×