என் மலர்
நீங்கள் தேடியது "டேனி"
- கிரிக்கெட் போட்டி தொடங்கும் முன் மோரிசன் இவ்வாறு செய்வது இது முதல் முறை அல்ல.
- அவர் முன்னாள் ஐபிஎல் தொகுப்பாளர் கரிஷ்மா கோடக்குடன் இதேபோன்ற ஒன்றைச் செய்தார்.
2023-ம் ஆண்டுக்கான பாகிஸ்தான் பிரீமியர் லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் இதுவரை ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது என்றே கூறலாம்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டி20 லீக் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கிளாடியேட்டர்ஸ் 179 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இஸ்லாமாபாத் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு மூன்று பந்துகள் மீதமிருக்கையில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் கிரிக்கெட் போட்டி தவிர வர்ணனையாரின் செயலும் ரசிகர்களை வியப்படைய வைத்தது. இந்த போட்டிக்கு முன்பு வர்ணனையாளர் டேனி மோரிசன் தொகுப்பாளர் எரின் ஹாலண்டைத் தூக்கிக் கொண்டு சுற்றினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Love ya uncle @SteelyDan66 ? @thePSLt20 pic.twitter.com/9reSq6ekdN
— Erin Holland (@erinvholland) March 5, 2023
இந்த வீடியோவை ஹாலண்ட் அவர்களே டுவிட் செய்து லவ் யா மாமா என்று பதிவிட்டுள்ளார்.
கிரிக்கெட் போட்டி தொடங்கும் முன் மோரிசன் இவ்வாறு செய்வது இது முதல் முறை அல்ல. இதற்கு முன் ஐபிஎல் தொடரில் ஒரு சியர்லீடரை தோளில் தூக்கியிருந்தார். மற்றொரு சம்பவத்தில், அவர் முன்னாள் ஐபிஎல் தொகுப்பாளர் கரிஷ்மா கோடக்குடன் இதேபோன்ற ஒன்றைச் செய்தார்.
- இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் டேனி.
- இவர் நடித்திருந்த செங்களம் வெப் தொடர் சமீபத்தில் வெளியானது.
தமிழ் திரையுலகில் பொல்லாதவன், பையா, ரௌத்திரம் படத்தில் நடித்த டேனி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். அதன்பின்னர் மியாவ், மரகத நாணயம், ரங்கூன், இரண்டாம் குத்து, மாநாடு உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரின் பாராட்டுக்களை பெற்றார். இவர் நடித்திருந்த செங்களம் வெப் தொடர் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் நடிகர் டேனி, நடிப்பு பயிற்சி பட்டறையின் மூலம் பல நடிகர்களை உருவாக்க திட்டமிட்டுள்ளார். இதற்கு விஜய் சேதுபதி, ஜி.வி.பிரகாஷ், ராதா ரவி, சீமான், வெற்றிமாறன், தம்பி ராமையா உள்ளிட்ட பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து அதன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த நடிப்பு பயிற்சி பட்டறை வருகிற மே 19, 20, 21ம் தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளது. டேனியின் நடிப்பு பயிற்சி பட்டறைக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.