search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுபிச்சி அம்மன்"

    • பொதுபிச்சி அம்மன் கோவில் மாசி திருவிழா நடந்தது.
    • இந்த நிகழ்ச்சிகளில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை அருகே உள்ள மேலநெற்குப்பை தேவர்நகர் பகுதியில் பொதுபிச்சி அம்மன் கிழவன்-கிழவி கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் "ராவாத்தா" என்னும் மாசி மாத திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இங்குள்ள செட்டி ஊரணி குளத்தில் மண் எடுத்து கிழவன்- கிழவி சிலைகள் செய்து காப்பு கட்டி, அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரவில் பெண்கள் கும்மியடித்து வழிபடுவார்கள். விழாவின் 10-ம் நாளில் இப்பகுதியில் பிறந்த பெண்கள் திருமணம் முடித்து எந்த ஊர்களுக்கு சென்றிருந்தாலும் விழாவிற்கு வந்து கலந்துகொள்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.

    விழாவின் 10ம் நாளான நேற்று இரவு அனைவரும் கூடி கும்மியடித்து கிழவன்- கிழவி கோவில் முன்பாக பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் பொங்கலை சுவாமிக்கு படையலிட்டனர். தொடர்ந்து தொட்டி சேலை கட்டி கோவிலை வலம் வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். கோவிலுக்கு வழங்கப்பட்ட பொருட்களை ஏலம்விடப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    ×