என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஹேஷ்டேக்"
- ராகுல் காந்தி எப்போதுமே வெள்ளைநிற டி-சர்ட்தான் அணிந்து வருகிறார்.
- தன்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றியும் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எப்போதுமே வெள்ளைநிற டி-சர்ட்தான் அணிந்து வருகிறார்.
இந்த நிலையில் 54-வது பிறந்த நாளை கொண்டாடிய ராகுல்காந்தி வெள்ளை நிற டி-சர்ட்டை தொடர்ந்து பயன்படுத்துவது ஏன்? என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார். மேலும் தன்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றியும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த உங்கள் அனை வருக்கும் மனமார்ந்த நன்றி கள். எப்போதும் வெள்ளை நிற டி-சர்ட்டை' நான் ஏன் அணிகிறேன் என்ற கேள்வி அடிக்கடி என்னிடம் கேட்கப்படுகிறது. இந்த வெள்ளை நிற டி-சர்ட்டுகள் எனக்கு வெளிப்படைத் தன்மை, திடத்தன்மை மற்றும் எளிமை ஆகிய வற்றை குறிக்கிறது.
உங்கள் வாழ்க்கையில் எங்கே, எப்படி இந்த மதிப்புகள் பயனுள்ளதாக இருக்கும்? என்பதை #WhiteTshirtArmy என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி வீடியோவில் சொல்லுங்கள். நான் உங்களுக்கு ஒரு வெள்ளை டி-சர்ட்டை பரிசாக தருகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இதற்கு முன்பும் தேர்தல் பிரச்சாரத்தின் போதும் இந்த கேள்விக்கு ராகுல் காந்தி விளக்கம் அளித்து இருந்தார். அப்போது, நான் வெள்ளை நிற சட்டை பயன்படுத்துவதற்கு வெளிப்படைத்தன்மையும், எளிமைதான் காரணம். மேலும் நான் ஆடைகளைப் பற்றி அதிகம் கவலைப்படு வதில்லை. நான் அதை எளிமையாக்க விரும்பு கிறேன்" என கூறி இருந்தார்.
- கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்வு முடிவு வெளியாகும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது.
- கடந்த மாதம் 14-ந்தேதி இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட அறிக்கையில் மார்ச் மாதத்தில் முடிவு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
சென்னை:
18 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதிய குரூப்-4 தேர்வு முடிவை வெளியிடக் கோரி தேர்வர்கள் டுவிட்டரில் ஹேஷ்டேக் செய்து வருகின்றனர். மேலும் தங்களுடைய ஆதங்கத்தை மீம்ஸ் மூலமும் தெரிவிக்கின்றனர்.
397 கிராம நிர்வாக அலுவலர், 2 ஆயிரத்து 792 இள நிலை உதவியாளர், 34 வரித்தண்டலர், 509 நில அளவையர், 74 வரைவாளர், 1,901 தட்டச்சர், 784 சுருக்கெழுத்து தட்டச்சர் உள்பட குரூப்-4 பதவிகளில் வரும் 7 ஆயிரத்து 301 பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 22-ந்தேதி தேர்வு நடந்தது.
இந்த தேர்வை எழுத 22 லட்சத்து 2 ஆயிரத்து 942 பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில், தேர்வை 18 லட்சத்து 50 ஆயிரத்து 471 பேர் எழுதினார்கள். அதாவது ஒரு பணியிடத்துக்கு 253 பேர் போட்டியிட்டு இருக்கின்றனர். தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட போதே தேர்வு முடிவு, அக்டோபர் மாதத்தில் வெளியாக வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் பெண்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக ஐகோர்ட்டு தீர்ப்பை பின்பற்றி தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் காலதாமதம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்வு முடிவு வெளியாகும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. அப்போதும் முடிவு வெளியிடப்படவில்லை.
அதனைத் தொடர்ந்து தேர்வாணையம் 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிட வாய்ப்பு இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அந்த அறிவிப்பின்படியும் கடந்த மாதத்தில் தேர்வு முடிவு வெளியாகவில்லை. கடந்த மாதம் 14-ந்தேதி இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட அறிக்கையில் மார்ச் மாதத்தில் முடிவு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலியிடங்களின் எண்ணிக்கையில் கூடுதலாக இடங்கள் சேர்க்க டி.என்.பி.எஸ்.சி. திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.
இது ஓரளவுக்கு ஆறுதலான செய்தியாக இருந்தாலும், தேர்வு முடிவு எப்போது வெளியாகும்? என்பதே தேர்வை எழுதிய 18 லட்சத்து 50 ஆயிரத்து 471 பேரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த நிலையில் தேர்வு முடிவை வெளியிடக்கோரி தேர்வை எழுதிய தேர்வர்கள் டுவிட்டரில் ''வி வான்ட் குரூப்4 ரிசல்ட்'' என்பதை 'ஹேஷ்டேக்'காக 'டிரெண்டிங்' செய்து வருகின்றனர்.
இதுமட்டுமல்லாது, தேர்வு முடிவு வெளியிடப்படாமல் இருப்பதற்கு தேர்வர்கள் 'மீம்ஸ்' மூலம் நகைச்சுவை கலந்த ஆதங்கத்தை வெளியிட்டு வருகின்றனர். அதில், தேர்வர்கள் டி.என்.பி.எஸ்.சி.யிடம் சொல்வது போல, 'வீட்டுல எவ்வளவு நாள் தாண்டா சோறு சாப்பிடுவனு கேக்குறாங்க சொந்தக்காரங்க இன்னும் உனக்கு வேலை கிடைக்கலையாடா வீட்லயே இருக்கனு சொல்றாங்க', 'எக்ஸாம் நல்லா பண்ணிருக்கேன் இந்த மாதம் ரிசல்ட் மட்டும் விட்டீங்கனா வேலைக்கு போய்டுவேன்' என பதிவிட்டுள்ளனர்.
இதேபோல், மற்றொரு மீம்சில் 'குரூப்-1 எழுதினவன் எப்போ ரிசல்ட் வரும்னு காத்திருக்கான், குரூப்-2 முதன்மைத் தேர்வு எழுதினவன் எப்படி திருத்துவாங்களோ, எந்த வருஷம் ரிசல்ட் போடுவாங்கனு இருக்கான், குரூப்-4 எழுதினவன் ரிசல்ட்ன்னு ஒன்னு இருக்கானு தேடிட்டு இருக்கான்' என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்