search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புலி குட்டி"

    • சோர்வாக உள்ள புலிக்குட்டிகளுக்கு வன உயிரியல் பூங்கா ஊழியர்கள் உணவு கொடுத்து பராமரித்து வருகின்றனர்.
    • கால்நடை மருத்துவர்கள் புலிக்குட்டிகளுக்கு சிகிச்சை அளித்து 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

    நந்தியாலா:

    ஆந்திர மாநிலம், நந்தியாலா மாவட்டம், ஆத்ம கூறு, கும்மடாபுரம் கிராம வனப்பகுதியில் 3 நாட்களுக்கு முன்பு 4 பெண் புலி குட்டிகள் இருந்தன.

    இதனை வனத்துறை அதிகாரிகள் ஆத்மா கூறுவன அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

    குட்டி புலிகளை தாய் புலியுடன் சேர்க்கும் பணி முழு வீச்சில் நடந்தது. கும்மடாபுரம் நல்லமல்லா வனப்பகுதியில் வனத்துறையினர் சுமார் 70 டிராப் கேமராக்கள் உதவியுடன் 300 பணியாளர்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட வனத்துறை அதிகாரிகள் தாய் புலியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    கடந்த 4 நாட்களாக தாய் புலியை வனத்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. தாயை விட்டு பிரிந்து உள்ளதால் புலிக்குட்டிகள் சரிவர உணவு அருந்தாமல் சோர்வாக காணப்படுகிறது.

    இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் 4 புலி குட்டிகளையும் நேற்று இரவு திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா வன உயிரியல் பூங்காவிற்கு கொண்டு சென்றனர். சோர்வாக உள்ள புலிக்குட்டிகளுக்கு வன உயிரியல் பூங்கா ஊழியர்கள் உணவு கொடுத்து பராமரித்து வருகின்றனர்.

    மேலும் கால்நடை மருத்துவர்கள் புலிக்குட்டிகளுக்கு சிகிச்சை அளித்து 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

    விரைவில் தாய் புலியை கண்டுபிடித்து அதனுடன் குட்டிகள் ஒன்று சேர்க்கப்படும் என தெரிவித்தனர்.

    ×