என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திக்விஜய் சிங்"
- மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் திக்விஜய் சிங்.
- கட்சியை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துவது எப்படி என்பது குறித்து பேசினார்.
போபால்:
மத்திய பிரதேச மாநிலத்தின் ஜபல்பூரில் முன்னாள் முதல் மந்திரியும், மூத்த தலைவருமான திக்விஜய் சிங் கட்சி தொண்டர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
செய்தியை திறம்பட தெரிவிப்பது மற்றும் அமைப்பை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துவது எப்படி என்பதை ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்திடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தீவிர எதிர்ப்பாளர்களாக இருந்தாலும் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் மன விளையாட்டுகளை விளையாடுகிறார்கள். அவர்கள் ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள். ஒருபோதும் ஆர்ப்பாட்டம் செய்ய மாட்டார்கள். ஒருபோதும் அடிக்க மாட்டார்கள். ஒருபோதும் சிறைக்குச் செல்ல மாட்டார்கள், மாறாக எங்களை சிறைக்கு அனுப்புவார்கள்.
ஆர்.எஸ்.எஸ் பொதுவாக 3 விஷயங்களில் கவனம் செலுத்துகிறது. துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல், விவாதங்கள் நடத்துதல் மற்றும் இறுதியாக இயக்கத்திற்கு ஏற்படும் செலவுகள்.
நீங்கள் அவர்களை எதிர்த்துப் போராட விரும்பினால் அவர்களின் சொந்த விளையாட்டில் அவர்களை வெல்லுங்கள், நிச்சயமாக, உடல் ரீதியாக அல்ல, ஆனால் அறிவுபூர்வமாக என தெரிவித்தார்.
- வாரணாசி காங்கிரஸ் தலைவர் அஜய் ராயும், தனது வீட்டை ராகுல் காந்திக்கு வழங்க விருப்பம் தெரிவித்து உள்ளார்.
- திக்விஜய் சிங்குக்கு டெல்லியில் அரசு இல்லம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
போபால்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து டெல்லியில் அவர் வசித்து வரும் அரசு பங்களாவை காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதை ராகுல் காந்தியும் ஏற்றுக்கொண்டுள்ளார். ராகுல் காந்தி பல ஆண்டுகளாக வசித்து வந்த வீட்டை காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டு இருப்பது, காங்கிரசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே அவருக்கு தங்கள் வீட்டை வழங்க பல தலைவர்கள் முன்வந்துள்ளனர்.
அந்த வகையில் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான தக்விஜய் சிங், தனது வீட்டை ராகுல் காந்திக்கு வழங்க முன்வந்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'எனது வீட்டில் நீங்கள் தங்கினால் அதிர்ஷ்டமாக கருதுவேன்' என குறிப்பிட்டு இருந்தார்.மாநிலங்களவை உறுப்பினரான திக்விஜய் சிங்குக்கு டெல்லியில் அரசு இல்லம் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதைப்போல வாரணாசி காங்கிரஸ் தலைவர் அஜய் ராயும், தனது வீட்டை ராகுல் காந்திக்கு வழங்க விருப்பம் தெரிவித்து உள்ளார்.
- காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் சென்ற கார் பைக்கின் மீது மோதியது.
- இதில் காயமடைந்த நபருக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்துள்ளோம் என்றார்.
போபால்:
மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கர் பகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் எதிர்திசையில் வந்து கொண்டிருந்த நபர், திடீரென யூ டர்ன் எடுத்துள்ளார். இதனால் திக்விஜய் சிங் சென்ற கார் அந்த பைக்கின் மீது மோதியது.
இந்த விபத்தில் பைக்கில் வந்த 20 வயது இளைஞர் காயமடைந்தார். இதையடுத்து உடனடியாக அந்த நபர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திக்விஜய் சிங், காயமடைந்த நபருக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்துள்ளோம். தங்கள் கார் மெதுவான வேகத்தில் சென்றதால் பைக்கில் வந்தவருக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்