என் மலர்
நீங்கள் தேடியது "வெடி பொருள்"
- நாழிக்கிணறு பகுதியில் வெடிகுண்டு போல தோற்றம் அளிக்கக் கூடிய மர்ம பொருள் ஒன்று கிடந்தது.
- அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் இன்று பக்தர்கள் வழக்கம்போல் கடலில் புனித நீராடிக் கொண்டிருந்தனர்.
அப்போது நாழிக்கிணறு பகுதியில் வெடிகுண்டு போல தோற்றம் அளிக்கக் கூடிய மர்ம பொருள் ஒன்று கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மர்மபொருளை கைப்பற்றினர். அது நாட்டு வெடிகுண்டா? அல்லது திருவிழாவின் போது போடப்பட்ட வெடி பொருளா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.