என் மலர்
நீங்கள் தேடியது "மதநல்லிணக்க பேரணி"
- இந்திய ஜனநாயக மக்கள் கட்சி சார்பில் நடந்தது
- தமிழகத்தில் டெட் மற்றும் நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தல்
அரக்கோணம்:
அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி சார்பில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி கிறிஸ்துவ உரிமை பேரணி அரக்கோணத்தில் நடந்தது.
அகில இந்திய கிறிஸ்துவ மக்கள் கட்சி மற்றும் அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி சார்பில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மாபெரும் கிறிஸ்துவ உரிமை பேரணி அரக்கோணம் பழைய பஸ் நிலையத்தில் தொடங்கியது. இந்த ஊர்வலத்துக்கு அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி நிறுவனர் ஐசக் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
மாநில பொதுச் செயலாளர் ரூபன் சரவணன், மண்டல பொதுச்செயலாளர்கள் டேவிட் குட்டி, பர்னபாஸ் சைமன், மேலாளர் ஜெய்சன், மகளிர் அணி செயலாளர் பிரேமா செல்வகுமாரி, மாவட்ட செயலாளர்கள் குமார், ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞரணி செயலாளர் டாக்டர் கிளிண்டன் வரவேற்றார்.
இந்த ஊர்வலம் அரசு மருத்துவமனை, சுவால்பேட்டை வழியாக தாலுகா அலுவலகம் அருகில் நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து நடந்த கூட்டத்தில் அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி நிறுவனர் ஐசக் பேசியதாவது:-
சிறுபான்மை கிறிஸ்தவர்களுக்கு 10.5 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். தமிழகத்தில் டெட் மற்றும் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும்.
தமிழகத்தில் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் சீனியா ரிட்டி அடிப்படையில் வேலை வாய்ப்புகள் வழங்க வேண்டும். ஆதிதிராவிடர் கிறிஸ்தவ சிறுபான்மை மற்றும் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அந்தந்த கல்லூரிகளுக்கு தமிழக அரசு வழங்கிட வேண்டும். தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.