என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆஸ்கர் விருதுகள்"

    • ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது.
    • ஆர்.ஆர்.ஆர். மற்றும் தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆவண குறும்படத்திற்கு விருது வழங்கப்பட்டது.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். இவர் சிறந்த மணல் சிற்ப கலைஞராவார். உலகில் நடந்து வரும் அனைத்து விஷயங்கள் தொடர்பாக தனது கருத்தை தயங்காமல் தெரிவித்து வருபவர். எந்த விஷயமானாலும் அது தொடர்பாக ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களை வரைந்து வருபவர். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

    இதற்கிடையே, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ஆர்.ஆர்.ஆர். படத்திற்கும் 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' ஆவண குறும்படத்திற்கும் விருது வழங்கப்பட்டது.

    இந்நிலையில், ஆஸ்கர் விருது வென்ற ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினருக்கும், தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் படக்குழுவினருக்கு மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    • சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் கங்குவா.
    • ஐந்து இந்திய படங்கள் இடம்பெற்றுள்ளன.

    97வது அகாடமி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதையொட்டி இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது பெற போட்டியிட தகுதியுள்ள திரைப்படங்கள் பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்தப் பட்டியலில் 323 திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 207 திரைப்படங்கள் ஏற்கனவே சிறந்த திரைப்படம் பிரிவில் இடம்பெற தகுதி பெற்றுவிட்டன.

    207 திரைப்படங்களில் ஐந்து இந்திய திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் கங்குவா (தமிழ்), ஆடு ஜீவிதம் - தி கோட் லைஃப் (இந்தி), சந்தோஷ் (இந்தி), ஸ்வாதந்த்ரியா வீர் சாவர்கர் (இந்தி) மற்றும் ஆல் வி இமாஜின் அஸ் லைட் (மலையாளம்-இந்தி) ஆகியவை அடங்கும்.

    இந்த திரைப்படங்களை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நாளை (ஜனவரி 8) துவங்கி ஜனவரி 12 ஆம் தேதி வரை நடைபெறும். இதன்பிறகு, ஜனவரி 17 ஆம் தேதி இறுதிப் பட்டியலில் தேர்வான திரைப்படங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

    இறுதிப்பட்டியலில் எத்தனை இந்திய திரைப்படங்கள் இடம்பெறும் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். இந்த ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் 2 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த விழா ஒவேஷன் ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெறவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×