என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய சர்வோதய சங்க கட்டிடம்"

    • விற்பனையை அதிகரிப்பதற்காக மத்திய, மாநில அரசுகளால் மானியம் வழங்கப்படுகிறது.
    • இந்திய காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்தலைவர் மனோஜ்குமார் திறந்து வைத்தார்.

    பல்லடம் :

    பல்லடம் - பொள்ளாச்சி சாலையில் சர்வோதய சங்க கட்டிடம் உள்ளது. இந்த நிலையில் பழைய காதி பவன் கடைகளை புதுப்பித்து விற்பனையை அதிகரிப்பதற்காக மத்திய, மாநில அரசுகளால் மானியம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் கே.ஆர்.டி.பி.திட்டத்தில், பல்லடத்தில் உள்ள சர்வோதய சங்க கட்டிடம் புதுப்பிக்கப்பட்டது. மேலும் அருகிலேயே பணிமனை ஒன்றும் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.புதிய கட்டடங்களை, இந்திய காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்தலைவர் மனோஜ்குமார் திறந்து வைத்தார். வாரியத்தின் தென் மண்டல தலைவர் பாண்டே, வாரியத்தின் தமிழ்நாடு இயக்குனர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்லடம் சர்வோதய சங்க செயலாளர் செல்வராஜ் வரவேற்றார். கட்டிடங்களைத் திறந்து வைத்த வாரியத் தலைவர் மனோஜ் குமார் கதர்வாரிய பொருட்களை பார்வையிட்டார்.

    பின்னர் கதர்வாரிய உறுப்பின ர்களுடன் அமர்ந்து மதிய உணவு உண்டார். இந்த நிகழ்ச்சியில் பல்லடம் சர்வோதய சங்க தலைவர் ஆறுச்சாமி, பொருளாளர் பழனிச்சாமி, அலுவலர் ஜெயபால் மற்றும் தமிழ்நாடு சர்வோதய சங்க நிர்வாகிகள்,சமூக ஆர்வலர்கள் ரமேஷ், மஞ்சுநாதன்,நெசவாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×