search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெரு கிரிக்கெட்"

    • நான் கல்லி கிரிக்கெட்டில் இம்பெக் பிளேயர் என இந்த வீடியோவுக்கு தலைப்பிட்டுருந்தார்.
    • இவரது தலைப்புக்கு ரஷித்கான் கிண்டலாக பதில் அளித்தார்.

    இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல், ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட் எடுத்த வீரர் என்ற சாதனையை இவர் படைத்தார்.

    ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் வரிசையில் சாஹல் 187 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். பிராவோ 183 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்திலும், 174 விக்கெட்டுகளுடன் பியூஷ் சாவ்லா மூன்றாம் இடத்திலும், 172 விக்கெட்டுகளுடன் அமித் மிஷ்ரா நான்காம் இடத்திலும் உள்ளனர்.

     

    ஐபிஎல் தொடர் முடிவடைந்த நிலையில், யுஸ்வேந்திர சாஹல் தெருவில் சில கிரிக்கெட் ஆர்வலர்களுடன் விளையாடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அந்த வீடியோவில் சாஹல் பேட்டிங் செய்வது போல இருந்தது. சில அற்புதமான ஷாட்களை விளையாடினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    நான் கல்லி கிரிக்கெட்டில் இம்பெக் பிளேயர் என இந்த வீடியோவுக்கு சாஹல் தலைப்பிட்டுருந்தார். இந்த வீடியோவை பார்த்த பலரும் சுவாரஸ்யமாக கருத்துக்களை பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.

    இந்த தலைப்புக்கு ஆப்கானிஸ்தான் அணியின் சூழற்பந்து வீச்சாளர் ரஷித்கான், 'கல்லி கிரிக்கெட்டில் ஒரு சிக்சராவது அடிங்க சகோதரா' என கிண்டலாக கமெண்ட் செய்தார்.

    அதற்கு பதிலளித்த சாஹல், இங்கே சிக்சர் அடித்தால் அவுட் என தெரிவித்தார். 

    • இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் தொடர் மார்ச் 17-ந் தேதி தொடங்குகிறது.
    • இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.

    ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. முதல் டெஸ்ட் மற்றும் 2-வது டெஸ்ட்டில் முதல் இன்னிங்சில் மற்றும் விளையாடிய வார்னர் காயம் காரணமாக விலகி உள்ளார்.

    அடுத்ததாக ஒருநாள் தொடர் மார்ச் 17-ந் தேதி தொடங்குகிறது. இதில் காயம் காரணமாக விலகி இருந்த டேவிட் வார்னர் இடம் பெற்றுள்ளார். இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் டேவிட் வார்னர் மும்பையில் உள்ள ஒரு தெருவில் கிரிக்கெட் விளையாடியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    இதை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கிரிக்கெட் விளையாட அமைதியான இடம் கிடைத்துள்ளது என தலைப்பிட்டிருந்தார்.

    ×