search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆய்வு. Denial"

    • 8-ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.பள்ளிக்கு பக்கத்திலேயே பட்டாபிராமர் கோவில் கருங்கல்லால் கட்டப்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது. இத
    • கோவிலின் கல்சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்தி விடுவதாக நேற்று முடிவு செய்தனர்.

    விழுப்புரம்:

    செஞ்சி வட்டம் வல்லம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த குறிஞ்சிப்பை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி உள்ளது. 8-ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளிக்கு பக்கத்திலேயே பட்டாபிராமர் கோவில் கருங்கல்லால் கட்டப்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பள்ளியின் மூன்று வகுப்பறை கட்டிடம் மூடப்பட்டது. பக்கத்தில் உள்ள கட்டிடத்தில் வகுப்புகள் நடந்து வருகின்றன.  கோவிலின் கல்சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்தி விடுவதாக நேற்று முடிவு செய்தனர். தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி செல்வராஜ் நேரில் வந்து பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தார். ஊராட்சி மன்ற தலைவர் பேச்சுவார்த்தையை தொடர்ந்து பள்ளி நடைபெற்றது.   இந்நிலையில் வல்லம் ஒன்றிய குழு தலைவர் அமுதா ரவிக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்ததாஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது கிராம மக்கள் ஒன்றிய குழு தலைவரிடம் பள்ளி அருகில் உள்ள கோவில் சுவர் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கை இல்லாததால் நாங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்த முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தனர்   நேரில் பார்வையிட்டு விசாரணை செய்த ஒன்றிய குழு தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பொதுமக்களை சமாதானம் செய்தனர். இது குறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தனர்.

    கோவில் என்பது இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வரும். பள்ளிக்கூடம் என்பது கல்வித்துறை கட்டுப்பாட்டில் வரும். இதனால் இருதரப்பு அதிகாரிகளும் ஒன்றி ணைந்து செயல்பட்டால் தான் இப்பிரச்சனை முடிவுக்கு வரும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகி ன்றனர்.

    ×