என் மலர்
நீங்கள் தேடியது "புதிய திட்டப்பணிகள்"
- அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. இளங்கோ தொடங்கி வைத்தார்
- புஞ்சை தோட்டகுறிச்சி பேரூராட்சியில்கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள் திறக்கப்பட்டது
கரூர்,
கரூர் மாவட்டம் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியில் பூமி பூஜை விழா மற்றும் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது.புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி தளவாபாளையம் பகுதியில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.12 லட்சம் நிதியில் அங்கன்வாடி மையம் கட்டி முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழா, கணபதி பாளையம் புதூர் பகுதியில் ரூ.10 லட் சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட சமுதாயக் கூடம் திறப்பு விழா, தளவா பாளையம் ஆதிதிராவிடர் தெருவில் ரூ 2 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை, மலையம்பாளையம் பகுதியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை, வீரராஜபுரம் விநாயகர் கோவில் அருகில் ரூ5 லட்சம் மதிப்பீட்டில் பொதுக்கழிப்பிடம் கட் டுவதற்கான பூமி பூஜை 15 வது நிதி குழு மானியத்தில் ரூ17 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பூங்கா திறப்பு விழா நடைபெற்றது.பூமி பூஜை மற்று திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக அரவகுறிச்சி எம்.எல்.ஏ., மொஞ்சனூர் இளங்கோ கலந்து கொண்டு கட்டி முடிக்கப்பட்ட சமுதாயக்கூடம், அங்கன்வாடி மையம் மற்றும் பணி முடிவுற்ற பூங்கா ஆகியவற்றை திறந்து வைத்தும் புதிதாக கட்டப்படும் பணிகளுக்கு பூமி பூஜையும் செய்து பணியினை தொடங்கி வைத்தார்.இதில் பேரூராட்சித் தலைவர் ரூபா முரளிராஜா, துணைத் தலைவர் சதீஸ், செயல் அலுவலர் ரமேஷ் மற்றும் வார்டு உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- முடிவுற்ற பணிகளை திறந்தும் வைத்தனர்.
- 12 சாலை பணிகளை தொடங்கி வைத்தனர்.
தாராபுரம்:
மூலனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் மூலனூர் மற்றும் தாராபுரம் ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.15.11 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார்.
மூலனூர் ஊராட்சி ஒன்றியம் குமாரபாளையம் ஊராட்சி வடுகபட்டியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.44 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கால்நடை மருத்துவமனையை திறந்து வைத்து, முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.02 கோடி மதிப்பீட்டில் வண்ணாபட்டி முதல் சம்மங்கரை வரை சாலை அமைக்கும் பணி மற்றும் வேளாம்பூண்டி ஊராட்சி, அரிக்காரன்வலசில் ரூ.24.50 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி, எரிசனம்பாளையம் பகுதியில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.7 கோடி மதிப்பீட்டில் எரிசினம்பாளையம் முதல் மேட்டூர் வரை சாலை அமைக்கும் பணி மற்றும் ரூ.76.34 லட்சம் மதிப்பீட்டில் தட்டாரவலசு முதல் நாரணாவலசு வரை சாலை அமைக்கும் பணி உள்பட மொத்தம் ரூ.6.90 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்தும், முடிவுற்ற பணிகளை திறந்தும் வைத்தனர்.
மேலும் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம், தொப்பம்பட்டி ஊராட்சி தொப்பம்பட்டியில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.8.21 கோடி மதிப்பீட்டில் 12 சாலை பணிகளை தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சியின் திட்ட இயக்குநர் லட்சுமணன், திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் முருகேசன், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) ஜெகதீஸ்குமார், திருப்பூர்மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், மூலனூர் பேரூராட்சித்தலைவர் தண்டபாணி, மூலனூர் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் சுமதி கார்த்திகுமார், வட்டார மருத்துவ அலுவலர் பாலமணி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் 42 புதிய திட்டப்பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
- படியூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
காங்கயம்:
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாலசமுத்திரம்புதூர், சிவன்மலை, படியூர், பாப்பினி, வீரணம்பாளையம் மற்றும் தம்மரெட்டிபாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் 42 புதிய திட்டப்பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன் தலைமையில், தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் கூறியதாவது:-
காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாலசமுத்திரம்புதூர் ஊராட்சி அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் அய்யனாரப்பன் குட்டை புனரமைக்கும் பணி, ரூ.1.80 லட்சம் மிதிப்பீட்டில் ரெட்டிபாளையம் காலனியில் ஆயில் மில் அருகில் 1-வது குறுக்கு வீதியில் சிமெண்ட் கான்கீரிட் தளம் அமைக்கும் பணி, ரூ.9.10லட்சம் மதிப்பீட்டில் கத்தாங்கன்னியில் புதிய கதிரடிக்கும் களம் அமைக்கும் பணி , ரூ.13.16 லட்சம் மதிப்பீட்டில் ரெட்டிபாளையத்தில் புதிய நியாய விலைக்கடை அமைக்கும் பணி என மொத்தம் ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் 42 புதிய திட்டப்பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் படியூர் ஊராட்சியில் கனிமம் மற்றும் சுரங்க நிதியிலிருந்து ரூ.19.60 லட்சம் மதிப்பீட்டில் படியூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்நிகழ்ச்சியில் காங்கயம் யூனியன் சேர்மன் மகேஸ்குமார், தெற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தன், சிவன்மலை பஞ்சாயத்து தலைவர் துரைசாமி, துணை தலைவர் சண்முகம், வார்டு உறுப்பினர் சிவகுமார், படியூர் பஞ்சாயத்து தலைவர் ஜீவிதா சண்முக சுந்தரம் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
- புக்குளம் ஊராட்சியில் ரூ.23½ லட்சத்தில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தார்.
- வடக்கு ஒன்றிய செயலாளர் கிரி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
குடிமங்கலம்:
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் தளி பேரூராட்சியில் ரூ.2 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, முடிவுற்ற பணியினை திறந்து வைத்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன் தலைமை தாங்கினார்.
அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைக்காக பங்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். தேர்தல் வாக்குறுதிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் மகளிருக்கு மாதம் ரூ.1.000 என்கிற மகத்தான திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி உள்ளிட்ட பலவற்றை செயல்படுத்திவருகிறார். மகளிர் சுயஉதவி குழு கடன்கள், நகைக்கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குதல் போன்ற எண்ணற்ற திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், அனிக்கடவு ஊராட்சி, நால்ரோட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை, ரூ.6½ லட்சத்தில் சுகாதார வளாகம் மற்றும் ரூ.10.90 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். புக்குளம் ஊராட்சியில் ரூ.23½ லட்சத்தில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தார்.
தளி பேரூராட்சியில் நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.82.20லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி மற்றும் மாநில நிதிக்குழுதிட்டத்தின் கீழ் ரூ.87லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்தும் என மொத்தம் ரூ.2.17 கோடி மதிப்பீட்டில் திட்டபணிகளை துவக்கி மற்றும்முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர்இல.பத்மநாபன்,வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், உடுமலை தாசில்தார் சுந்தரம், வடக்கு ஒன்றிய செயலாளர் கிரி, குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் சுகந்தி முரளி, குடிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேந்திரன்,செந்தில் கணேஷ்மாலா, தளி பேரூராட்சித்தலைவர் உதயகுமார், பேரூராட்சி செயல்அலுவலர் கல்பனா, குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவர் புஷ்பராஜ், குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கவிதா முருகானந்தம், புக்குளம் ஊராட்சி மன்றத்தலைவர் தெய்வாத்தாள், வடக்கு ஒன்றிய செயலாளர் கிரி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 269 புதிய குடியிருப்புகள்.
- தடையில்லா மின்சாரம் வழங்கிட துணை மின் நிலையம் அமைத்தல்.
சென்னை:
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1383 கோடி மதிப்பீட்டில் 79 திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் வால்டாக்ஸ் சாலையில் 129.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 700 புதிய குடி யிருப்புகள், ஸ்டான்லி மருத்துவமனை சாலையில் 143.56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 776 புதிய குடியிருப்புகள், கொன்னூர், திருவொற்றியூர், பெரம்பூர் சென்ட்ரல் நிழற்சாலை, கொண்டித்தோப்பு, திரு.வி.க. நகர் - சந்திரயோகி சமாதி சாலை, புழல்-விளாங்காடுபாக்கம் ஆகிய இடங்களில் ரூ.57 கோடி மதிப்பீட்டில் புதிய சமு தாயக்கூடங்கள் கட்டுதல், ரூ.21 கோடி மதிப்பீட்டில் தண்டையார்பேட்டையில் விளையாட்டு அரங்கம், வில்லிவாக்கம்-அகத்தியர் நகர் மற்றும் ராயபுரம் - மூலகொத்தளத்தில் விளையாட்டு திடல்கள், கொளத்தூர் - ஜவஹர் நகர் மற்றும் பெரியார் நகர் நூலகங்களை 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்துதல், கொளத்தூரில் 30 கோடி ரூபாய் மதிப் பீட்டில் மக்கள் சேவை மையம் கட்டுதல், கொளத் தூர் - நேர்மை நகரில் 36.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய காவல் நிலையம் கட்டுதல், என 421 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 15 புதிய திட்டப்பணிகள் செய்யப்படுகிறது.
எண்ணூர், கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, பேசின் பாலம், பெரம்பூர், புரசைவாக்கம், அயனாவரம் ஆகிய இடங்களில் உள்ள மாநகராட்சி பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுதல், மாத்தூர், கொடுங்கையூர், ராயபுரம், பெரம்பூர், வண்ணாரப்பேட்டை – சோலையப்பன் தெரு, பெரியதம்பி தெரு மற்றும் வால்டாக்ஸ் சாலை, பேசின் பாலம் – கத்படா பிரதான சாலை மற்றும் சண்முகம் தெரு, செனாய் நகர் ஆகிய இடங்களில் உடற்பயிற்சி கூடங்கள், வியாசர்பாடி மற்றும் பெரம்பூர் ஆகிய இடங்களில் விளையாட்டு மைதானங்கள், வில்லிவாக்கத்தில் மறுவாழ்வு மையம் அமைத்தல், கொடுங்கையூரில் சமுதாயக்கூடம், சேத்பட்டு சுற்றுச்சூழல் பூங்காவை மேம்படுத்துதல், கத்திவாக்கம் மேம்படுத்தப்பட்ட நகர்ப்புற சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டிடம், ராயபுரம் மற்றும் தண்டையார்பேட்டை ஆகிய இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள், காசிமேடு, கொளத்தூர், பல்லவன் சாலை ஆகிய இடங்களில் எரிவாயு தகனமேடை அமைக்கும் பணிகள், குளங்களை சீரமைக்கும் பணிகள், மண்டலம் 1 முதல் 8 வரையில் உள்ள மின் மாற்றிகளை சுற்றி அழகுபடுத்தும் வகையிலும், பாதுகாப்பு நோக்கிலும் அமைக்கப்பட்டுள்ள பார்வை மறைப்பான்கள், பெரம்பூரில் இறைச்சிக் கூடம் அமைக்கும் பணி, கோடம்பாக்கம் மகப்பேறு மருத்துவ மனையை மேம்படுத்துதல், என 204 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 45 புதிய திட்டப்பணிகள் செய்யப்படுகிறது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தடையில்லா மின்சாரம் வழங்கிட டேவிட்சன் தெருவில் 33/11 கிலோ வாட் துணை மின் நிலையம் அமைத்தல் மற்றும் 310 ஆர்.எம்.யு மின் உபகரணங்கள் நிறுவுதல், என 70 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 2 திட்டப்பணிகள் செய்யப்படுகிறது.
தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் துறைமுகத்தில் 269 புதிய குடியிருப்புகள், புளியந்தோப்பில் 612 புதிய குடியிருப்புகள் மற்றும் எல்லீஸ்புரத்தில் 65 புதிய குடியிருப்புகள் கட்டுதல், என 134 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 புதிய திட்டப்பணிகள் செய்யப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கே.கே.நகர் சிவன் பூங்காவை ரூ.4.60 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி.
- அம்பத்தூரில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம்.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் ரூ.39 கோடியே 75 லட்சம் செலவில் போரூரில் டாக்டர் எம்.எஸ்.சுவாமி நாதன் ஈரநில பசுமை பூங்கா, கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகம் மற்றும் சாத்தாங்காடு இரும்பு மற்றும் எஃக்கு சந்தை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டுப் பணிகளை திறந்து வைத்து, ரூ.70 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டிலான 10 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.
இதில் போரூர், ராமாபுரத் தில் சுமார் 16.63 ஏக்கர் பரப்ப ளவில் ரூ.15.75 கோடி செலவில் அமைக்கப்பட்ட டாக்டர் எம். எஸ். சுவாமி நாதன் ஈரநில பசுமை பூங்கா, கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் ரூ. 4 கோடி செலவில் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை, சூரிய மின்சக்தி அமைப்பு உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள்.
திருவொற்றியூர், சாத்தாங்காடு இரும்பு மற்றும் எக்கு சந்தை வளாகத்தில் ரூ.20 கோடி செலவில் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை, மின்சார அறை, மின்னணு எடை பாலம், குடிநீர் வடிகால் அமைப்பு உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் என மொத்தம் ரூ.39.75 கோடி செலவில் 3 முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
காட்டுப்பாக்கம், இந்திரா நகரில் ரூ.19.10 கோடி மதிப்பீட்டிலும், போரூர், கணேஷ் நகரில் ரூ.12.93 கோடி மதிப்பீட்டிலும் கட்டப்பட உள்ள பன்னோக்கு மையங்கள்.
சென்னை, சேத்துப்பட்டு, அப்பாசாமி தெருவில் 1.43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள கால் பந்து மைதானம், குத்தம் பாக்கம், பெங்களூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிட்கோ மற்றும் புதூர்மேடு ஆகிய இடங்களில் ரூ.1.63 கோடி மதிப்பீட்டில் சாலை சந்திப்புகளை மேம்படுத்தும் பணிகள்.
குத்தம்பாக்கம், புறநகர் பேருந்து முனையத்தில் எஸ்.இ.டி.சி. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் பேருந்துகளுக்கு ரூ.9.55 கோடி மதிப்பீட்டில் அமைக் கப்படவுள்ள கூடுதல் வாகன நிறுத்துமிடம், சைதாப் பேட்டை, அம்மா பூங்காவை ரூ.3.65 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி, எம்.எம்.டி.ஏ. காலனி, அரசு மேல்நிலைப் பள்ளி யில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள்.
கே.கே.நகரில் உள்ள சாலை சந்திப்பு மற்றும் சிவன் பூங்காவை ரூ.4.60 கோடி மதிப்பீட்டில் மேம் படுத்தும் பணி, தாம்பரம், டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பூங்கா மற்றும் நல்லதண்ணீர் குளத்தை ரூ.5.80 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி, அம்பத்தூர் பானு நகரில் ரூ.7.01 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் என மொத்தம் ரூ.70.70 கோடி மதிப்பீட்டில் 10 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.