search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாட்சன்"

    • 2016 மற்றும் 2017 ஆண்டுகளில் ராயல் செலஞ்சர் பெங்களூரு அணிக்காக ஷேன் வாட்சன் விளையாடினார்.
    • 2016 ஆம் ஆண்டு சிறப்பாக விளையாடிய பெங்களூரு அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

    2016-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் இறுதி போட்டியில் தோல்வி அடைந்தற்காக பெங்களூரு ரசிகர்களிடம் முன்னாள் ராயல் செலஞ்சர் பெங்களூரு அணியின் வீரர் ஷேன் வாட்சன் மன்னிப்பு கேட்டுள்ளார்.

    2016 மற்றும் 2017 ஆண்டுகளில் ராயல் சேலஞ்சர் பெங்களூரு அணிக்காக ஷேன் வாட்சன் விளையாடினார்.

    2016 ஆம் ஆண்டு சிறப்பாக விளையாடிய பெங்களூரு அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதி போட்டியில் ஹைதராபாத் அணியை பெங்களூரு எதிர் கொண்டது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 208 ரன்கள் குவித்தது. 208 ரன்கள் என்ற இலக்கை துரத்திய பெங்களூரு அணி 200 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

    அப்போட்டியில் 4 ஓவர் பந்துவீசிய வாட்சன் விக்கெட் எதுவும் எடுக்காமல் 61 ரன்கள் விட்டு கொடுத்தார். பேட்டிங்கிலும் 9 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே அடித்தார்.

    இந்த தோல்வி குறித்து பேசிய வாட்சன், "2016 ஐபிஎல் இறுதிப்போட்டியில் தோற்றதற்காக பெங்களூரு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் முடிந்தளவிற்கு நன்றாக தயாராகியிருந்தேன். அது எனது சிறப்பான ஆட்டமாக இருக்கவேண்டும் என எதிர்பார்த்தேன். ஆனால், அதுவே எனது மிக மோசமான ஆட்டமாக அமைந்துவிட்டது" என்று தெரிவித்துள்ளார்.

    ஆனால் அந்த ஐபிஎல் தொடரில் மிக சிறப்பாக விளையாடிய வாட்சன் 20 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டோனியின் கடைசி ஐ.பி.எல். போட்டி என்று கேள்விப்பட்டேன். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை.
    • டோனியின் ஆட்டத்தை போலவே அவரது தலைமையும் சிறப்பாக உள்ளது.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். போட்டியில் வெற்றிகரமான கேப்டனாக திகழ்பவர் டோனி. அவர் 4 முறை (2010, 2011, 2018, 2021) சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐ.பி.எல். கோப்பையை பெற்றுக் கொடுத்துள்ளார்.

    மேலும் 5 முறை சி.எஸ்.கே. 2-வது இடத்தை பிடித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் அதிக முறை 'பிளே ஆப்' சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இந்த ஆண்டுக்கான 16-வது ஐ.பி.எல். போட்டி வருகிற 31-ந்தேதி தொடங்கு கிறது. அகமதாபாத்தில் நடைபெறும் முதல் ஆட் டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சாம்பியன் குஜராத் ஜெயண்ட்சை எதிர்கொள்கிறது.

    41 வயதான டோனி இந்த ஐ.பி.எல். போட்டி யோடு ஓய்வு பெறுகிறார். அவர் ஏற்கனவே சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்.

    இந்த நிலையில் அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதற்கு போதுமான உடல் தகுதியுடன் டோனி இருக்கிறார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும், சி.எஸ்.கே. அணியின் முன்னாள் வீரருமான வாட்சன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    டோனியின் கடைசி ஐ.பி.எல். போட்டி என்று கேள்விப்பட்டேன். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. டோனியால் இன்னும் 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு தொடர்ந்து விளையாட முடியும். அவர் இன்னும் உடல் தகுதியுடன் இருக்கிறார். பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் மிகவும் நன்றாக இருக்கிறார்.

    டோனியின் ஆட்டத்தை போலவே அவரது தலைமையும் சிறப்பாக உள்ளது. உடற்தகுதி மற்றும் ஆட்டத்தை நன்றாக உள்வாங்கி கொள்வது அவரை நல்ல கேப்டனாக்கியது. மைதானத்தில் அவரது திறமை அபாரமானது. சி.எஸ்.கே வெற்றி பெற அவர் ஒரு முக்கிய காரணமாகும்.

    இவ்வாறு வாட்சன் கூறி உள்ளார்.

    ×