என் மலர்
நீங்கள் தேடியது "கருணாம்பிகா ராமசாமி"
- நகர்ப்புற வளர்ச்சி ரூ.38,444 கோடி, ஊரக வளர்ச்சி ரூ.22,562 கோடி என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
- அடிப்படை கட்டமைப்பு வசதிகள், குடியிருப்பு போன்ற விஷயங்களில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
திருப்பூர் :
தமிழக பட்ஜெட் குறித்து திருப்பூர் ரைசிங் உரிமையாளர் சங்க தலைவர் கருணாம்பிகா ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ள தாவது :- தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பு மூலம் நகர்ப்புற வளர்ச்சி ரூ.38,444 கோடி, ஊரக வளர்ச்சி ரூ.22,562 கோடி என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் நகர உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படும் என்று நம்பலாம். வெளிமாநில வெளி மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் திருப்பூருக்கு வரும் பொழுது அடிப்படை கட்டமைப்பு வசதிகள், குடியிருப்பு போன்ற விஷயங்களில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. இதன் வேலை வாய்ப்பு பெருகும். நெடுஞ்சாலை துறைக்காக ரூ.19,465 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் சீரமைக்கப்பட்டு சரக்கு வாகனங்கள் விரைவில் துறைமுகத்தை சென்றடையும் வகையில் நிலைமை மேம்படும் என்று தொழில்துறையினரால் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் சரக்குகளை குறிப்பிட்ட நேரத்துக்குள் கொண்டு செல்ல முடியும். எரிசக்தி துறைக்காக ரூ.10,694 கோடி ஒதுக்கப்பட்டு ள்ளதால், 'பைப்லைன் கேஸ்' திட்டம் மூலமாக தொழிற்சாலைகளுக்கு மானிய விலையில் எரிசக்தி வழங்குவதற்கு தமிழக அரசு உதவ வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.