search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒருநாள் உலக கோப்பை தொடர்"

    • இந்தியாவில் அக்டோபர் மாதம் ஒருநாள் உலக கோப்பை தொடர் நடைபெறவிருக்கிறது.
    • இங்கிலாந்து டி20 ப்ளாஸ்டில் வொர்செஸ்டர்ஷைர் ரேபிட்ஸ் அணிக்காக விளையாடிய போது அவரது வலது காலில் காயம் ஏற்பட்டது.

    இந்தியாவில் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறவிருக்கும் ஒருநாள் உலக கோப்பை தொடரில் இருந்து நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல் விலகியுள்ளார்.

    ஆல்-ரவுண்டரான மைக்கேல் பிரேஸ்வெல்லுக்கு தனது அகில்லெஸ் தசைநார் சிதைந்ததால், இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பையில் இருந்து விலகியுள்ளார். இங்கிலாந்து டி20 ப்ளாஸ்டில் வொர்செஸ்டர்ஷைர் ரேபிட்ஸ் அணிக்காக விளையாடிய போது அவரது வலது காலில் காயம் ஏற்பட்டது.


    இந்நிலையில் பிரேஸ்வெல் அறுவை சிகிச்சைக்காக இங்கிலாந்துக்கு நாளை செல்ல இருக்கிறார். அதன் பிறகு அவர் நீண்டநாள் ஓய்வு எடுக்க வேண்டியிருக்கும். அதனால் இந்தியாவில் நடக்கவிருக்கும் ஒருநாள் உலக கோப்பையை அவர் தவறவிடுவார்.

    ஐபிஎல் போட்டியின் போது நியூசிலாந்து அணியின் கேப்டனான கேன் வில்லியம்சனுக்கு வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு பிரேஸ்வெல்லுக்கு காயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது.
    • அக்டோபரில் நடக்கவிருக்கும் உலக கோப்பை தொடரில் நாங்கள் வித்தியாசமான முறையில் விளையாட முயற்சி செய்வோம்.

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது.

    இந்நிலையில் வரவிருக்கும் ஒருநாள் உலக கோப்பை போட்டியில் வித்தியாசமாக விளையாட முயற்சி செய்வோம் என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அக்டோபரில் நடக்கவிருக்கும் உலக கோப்பை தொடரில் முற்றிலும் மாறுபட்ட மனநிலையுடனும் அணுகுமுறையுடன் களமிறங்குவோம். நாங்கள் வித்தியாசமான முறையில் விளையாட முயற்சி செய்வோம். வீரர்கள் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற அழுத்தத்துடன் விளையாட வேண்டாம். வித்தியாசமாக கொடுக்க வேண்டும் என முயற்சிப்போம்.

    இந்த போட்டி முக்கியம். இந்த தொடர் முக்கியம் என நினைத்து விளையாடுகிறோம். ஆனால் எதுவும் சரியாக நடக்கவில்லை.

    எனவே இந்த உலக கோப்பை தொடரில் நாம் வித்தியாசமாக சிந்தித்து செயல்படுடுவோம். எங்களின் முழு கவனமும் வித்தியாசமாக ஏதாவது செய்ய முயற்சிப்பதில் இருக்கும்.

    இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

    • ஒருநாள் உலக கோப்பைக்கு நேரடியாக தகுதிபெறாத வெஸ்ட் இண்டீஸ் அணி, தகுதிச்சுற்றுக்கான அணியை அறிவித்துள்ளது.
    • தகுதிச்சுற்றுக்கான ஷேய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஒருநாள் உலக கோப்பை தொடர் இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இங்கிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகள் நேரடியாக உலக கோப்பைக்கு தகுதிபெற்ற நிலையில், முன்னணி அணிகளில் ஒன்றான வெஸ்ட் இண்டீஸ் தகுதிச்சுற்றில் ஆடவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

    1975 மற்று 1979-ம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக 2 ஒருநாள் உலக கோப்பைகளை வென்றதுடன், டி20 உலக கோப்பையையும் 2 முறை வென்று உலகின் முன்னணி அணிகளில் ஒன்றாக திகழும் வெஸ்ட் இண்டீஸ் அணி, உலக கோப்பைக்கு நேரடியாக தகுதிபெறாததே பெரும் பின்னடைவுதான்.

    இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் உலக கோப்பைக்கு தகுதிபெற வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதிச்சுற்றில் ஆடவேண்டியுள்ள நிலையில், தகுதிச்சுற்றுக்கான ஷேய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஷேய் ஹோப் (கேப்டன்), ரோவ்மன் பவல், ஷமர் ப்ரூக்ஸ், யானிக் காரியா, கீஸி கார்ட்டி, ரோஸ்டான் சேஸ், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹுசைன், அல்ஸாரி ஜோசஃப், பிரண்டன் கிங், கைல் மேயர்ஸ், குடகேஷ் மோட்டி, கீமோ பால், நிகோலஸ் பூரன், ரொமாரியோ ஷெஃபெர்டு.

    • இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரானது நடைபெற உள்ளது.
    • 13-வது முறையாக நடைபெறவுள்ள இந்த 50 ஓவர் உலகக்கோப்பை அனைவரது மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. இந்த உலகக் கோப்பையை வெல்வதற்காக தற்போது அனைத்து அணிகளும் முழுஅளவில் தயாராகி வருகின்றன. 13-வது முறையாக நடைபெறவுள்ள இந்த 50 ஓவர் உலகக்கோப்பை அனைவரது மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த 1987, 1996 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் ஐசிசி-யின் 50 உலகக் கோப்பை தொடரானது நடைபெற்றது.

    அதில் 2011-ஆம் ஆண்டு டோனியின் தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்தது. அதனை தொடர்ந்து நடைபெற்ற பல ஐசிசி தொடர்களை இந்திய அணி இழந்த வேளையில் தற்போது இந்தியாவில் நடைபெற இருக்கும் இந்த உலகக் கோப்பையை கைப்பற்றுவதற்காக முனைப்பு காட்டி வருகிறது.

    மேலும் இந்த தொடருக்கு முன்னதாக இந்திய அணி இலங்கை, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா என அனைத்து அணிகளுக்கு எதிராகவும் சொந்த மண்ணில் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

    இந்த அனைத்து தொடர்களிலும் இந்திய அணி சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் வேளையில் இந்த ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது என்பது குறித்து பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் தங்களது கணிப்பை தெரிவித்து வருகின்றனர்.


    இந்நிலையில் உலக கோப்பையை இந்திய அணிதான் வெல்லும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான பிரட் லீ கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    இந்த ஆண்டு நடைபெற இருக்கும் உலக கோப்பையை கைப்பற்ற இந்திய அணிக்கு தான் வாய்ப்பு அதிகம் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : இந்திய அணி தற்போது மிகச் சிறப்பான அணியாக உள்ளது. அந்த அணியில் அனுபவமும் இளமையும் கலந்துள்ளது.

    அதுமட்டும் இன்றி இந்திய மைதானத்தில் இந்திய அணியை வீழ்த்துவது என்பது சவாலான காரியம். இங்குள்ள மைதானங்கள் அனைத்தும் இந்திய அணிக்கு ரொம்பவே பழக்கப்பட்டவை என்பதனால் இந்திய அணிக்கு இந்த தொடரை வெல்ல அதிக வாய்ப்பு என்று எந்தவித தயக்கமும் இன்றி பிரெட் லீ தெரிவித்துள்ளார்.

    ×