என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரபு - பண்பாட்டு"

    • ஸ்ரீ ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது.
    • 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்டு சொற்பொழிவு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருப்பூர் மாவட்டத்தில் தமிழ் இணைய கல்விக்கழகம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாபெரும் தமிழ்க் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப்பரப்புரை நிகழ்ச்சி உடுமலைப்பேட்டை ஸ்ரீ ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் நாளை 24-ந்தேதி அன்று காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில்கவிஞர் நந்தலாலா மற்றும் ஊடகவியலாளர் குணசேகரன் ஆகியோர் சிறந்த சொற்பொழிவாற்ற உள்ளனர்.

    தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும். சமூக சமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும், இளம்தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் ஒரு முயற்சியாக இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள 100 கல்லூரிகளில் தமிழர் மரபும் - நாகரிகமும், தமிழகத்தில் சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூக பொருளாதார முன்னேற்றம், திசைதோறும் திராவிடம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல தலைப்புகளின் கீழ் சிறந்த சொற்பொழிவாளர்களை கொண்டு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

    மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கலை மற்றும்அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்டு சொற்பொழிவு நடத்த அரசின் மூலம்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும் சொற்பொழிவுகளில் பங்கேற்கும்மாணவ, மாணவிகளுக்கு உயர் கல்வி மற்றும் வழிகாட்டி, தமிழர் பெருமிதம் குறித்த குறிப்பேடுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அனைத்து கல்லூரி மாணவ,மாணவிகளும் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.  

    ×