என் மலர்
நீங்கள் தேடியது "சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்"
- சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் முதல் சுற்றில் வென்றார்.
பாசெல்:
சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நேற்று தொடங்கியது. வரும் 23-ம் தேதி வரை இத்தொடர் நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், சக நாட்டு வீரர் எச்.எஸ்.பிரனாய் உடன் மோதினார்.
இதில் ஸ்ரீகாந்த் 23-21, 23-21 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் 2-வது சுற்றில் சீன வீரர் லீ ஷிபெங் உடன் மோதுகிறார்.
- சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடந்து வருகிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் இஷாராணி பரூவா முதல் சுற்றில் வென்றார்.
பாசெல்:
சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நேற்று தொடங்கியது. வரும் 23-ம் தேதி வரை இத்தொடர் நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் இஷாராணி பரூவா, சக நாட்டு வீராங்கனை ஆகர்ஷி காஷ்யப் உடன் மோதினார்.
இதில் இஷாராணி 18-21, 21-17, 22-20 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடந்து வருகிறது.
- பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்றது.
பாசெல்:
சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நேற்று தொடங்கியது. வரும் 23-ம் தேதி வரை இத்தொடர் நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
இந்நிலையில், பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் திரிசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி, சுவிட்சர்லாந்தின் அலைன் முல்லர்-நெதர்லாந்தின் கெல்லி வான் புய்டன் ஜோடி உடன் மோதியது.
இதில் இந்திய ஜோடி 21-16, 21-17 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
- சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் இன்று முதல் 23-ந் தேதி வரை நடக்கிறது.
- இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
பாசெல்:
மொத்தம் ரூ.2¼ கோடி பரிசுத் தொகைக்கான சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 23-ந் தேதி வரை நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இந்திய வீரர் லக்ஷயா சென், எச்.எஸ்.பிரனாய், ஆயுஷ் ஷெட்டி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் முதல் சுற்றில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி- மலேசியா வீரர் சோழன் காயன் உடன் மோதினார். இதில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி 21-12, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.