என் மலர்
நீங்கள் தேடியது "சட்டபேரவை"
- 1959-ம் தொடங்கப்பட்ட சங்கம் நான்கு ஆண்டுகளாக உறுப்பினர் வயது மூப்பின் காரணமாக செயல்படாமல் இருக்கிறது.
- புதிதாக உறுப்பினர்களை சேர்த்து சங்கத்தை மேம்படுத்தி செயல்படுத்தப்படும் என்பதால் புதிய சங்கம் அமைக்க அவசியமில்லை.
சென்னை:
தமிழகத்தில் பின்தங்கியுள்ள பகுதிகளில் வேலைவாய்ப்பை உருவாக்கும் விதமாக தொழிற்பேட்டைகளை அரசு தொடங்கும் என சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
சட்டபேரவையில் கேள்வி நேரத்தின் போது, நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி, நிலக்கோட்டை பகுதியில் பித்தளைப் பாத்திர தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம் அமைக்க முன்வருமா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், 1959-ம் தொடங்கப்பட்ட சங்கம் நான்கு ஆண்டுகளாக உறுப்பினர் வயது மூப்பின் காரணமாக செயல்படாமல் இருக்கிறது என்றும், புதிதாக உறுப்பினர்களை சேர்த்து சங்கத்தை மேம்படுத்தி செயல்படுத்தப்படும் என்பதால் புதிய சங்கம் அமைக்க அவசியமில்லை என்றும் தெரிவித்தார்.
இதே போல, தமிழகத்தின் பின்தங்கிய பகுதிகளில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையி்ல் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மூலமாக தொழிற்பேட்டைகளை அரசு அமைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
- 20 அரிய கனிம வள சட்டம் 2023 ஆம் ஆண்டிலேயே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
- அப்போதே திமுக எம்பிக்கள் தடுத்திருக்க வேண்டும்
இன்று நடந்த தமிழக சட்டசபை கூட்டத்தின் பின் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
சட்டசபை வளாகத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 20 அரிய கனிம வள சட்டம் 2023 ஆம் ஆண்டிலேயே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதை அப்போதே திமுக எம்பிக்கள் தடுத்திருக்க வேண்டும்.
டங்ஸ்டன் சுரங்க ஏலம் கடந்த 9 மாதங்கள் முன்பே நடந்து முடிந்தது. ஆனால் கடந்த 9 மாதமாக தமிழக அரசிடம் இருந்து மத்திய அரசுக்கு எந்த கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை.
ஆரம்பத்திலேயே பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியிருக்க வேண்டும். ஆனால் மழுப்பலான பதிலைத்தான் திமுக அரசு அளித்துக்கொண்டிருக்கிறது.
அரசு அலட்சியமாக இருந்தது என எடுத்துக் கூறினால் அனைவர்க்கும் கோபம் வருகிறது என்று தெரிவித்துள்ளார்.