search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாவட்ட திட்டக்குழு"

    • மாவட்ட திட்டக்குழு கூட்டத்தில் கலெக்டர் பேச்சு
    • அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட திட்டக் குழுவின் முதல் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட திட்டக் குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டரும், திட்டக்குழு துணை தலைவருமான வளர்மதி முன்னிலை வகித்து, மாவட்ட திட்டக் குழுவின் செயல்பாடுகள் குறித்து பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் கீழ் தோற்றுவிக்கப்பட்டுள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகள் சுயாட்சி நிறுவனங்களாக செயல்பட்டு உள்ளாட்சிப் பகுதியில் பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமுதாய மேம்பாட்டிற்கான திட்டங்களை வகுக்க வேண்டும்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் தண்னிறைவு அடையும் வகையிலும், மாவட்டம் தன்னிறைவு அடையும் வகையிலும், புதிய செயல் திட்டங்களை உறுப்பினர்கள் ஆராய்ந்து தேவையான திட்ட அறிக்கை, ஏற்கனவே உள்ள சட்ட திட்டத்திற்கு உட்பட்டு செயல்படுத்த முடியும் என்ற நிலையில் உள்ள திட்டங்களாக அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

    ஆண்டு வளர்ச்சி திட்டங்களை கிராம ஊராட்சிகள் , ஊராட்சி ஒன்றியங்கள் , மாவட்ட ஊராட்சிகள், பேரூராட்சி மற்றும் நகராட்சிகள் குறிப்பிட்ட தேதிக்குள் வழங்கிட வேண்டும்.

    மாவட்ட திட்டக்குழு டிசம்பர் 31-ந் தேதிக்குள் ஒருங்கிணைந்த மாவட்ட வளர்ச்சி திட்டத்தை தயாரித்து மாநில திட்ட குழுவிற்கும், அரசுக்கும் அனுப்பிட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

    ஆகவே கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளவர்கள் மாவட்டத்திற்கு தேவையான வளர்ச்சி திட்ட அறிக்கையினை துறை அலுவலர்களுடன் இணைந்து வரையறுக்கப்பட்டுள்ள காலத்திற்குள் மாவட்ட திட்ட குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

    இந்த திட்ட அறிக்கை மீது அடுத்த கூட்டத்தில் விவாதித்து மாநில திட்ட குழுவிற்கு பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு கலெக்டர் வளர்மதி பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி,மாவட்ட ஊராட்சி செயலாளர் குமார், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் நாகராஜு, திட்டக் குழு உறுப்பினர்கள் அம்பிகா, சுந்தராம்பாள் , சக்தி, செல்வம், மாலதி, காந்திமதி , சிவக்குமார்,காஞ்சனா, தியாகராஜன், பாபி ,ஜபர் அகமத் மற்றும் உள்ளாட்சி அமைப்பு தலைவர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • 2011 - 16க்கு பின் தமிழகத்தில் மாவட்ட திட்டக்குழு அமைக்கப்படவில்லை.
    • மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் 8 பேர் உறுப்பினராக நியமிக்கப்படுவர்.

    திருப்பூர் :

    மாவட்டத்தின் வளர்ச்சி ,எதிர்கால தேவைகள் ,சிறப்பு திட்டங்கள் மத்தியமாநில அரசு திட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் செயல்படு த்த மாவட்ட திட்டக்குழு அமைக்கப்ப டுகிறது.

    மாவட்ட ஊராட்சி குழு தலைவர்கள் மாவட்ட திட்டக்குழு தலைவராகவும் கலெக்டர் துணை தலைவரா கவும் செயல்படுவர். 2011 - 16க்கு பின் தமிழகத்தில் மாவட்ட திட்டக்குழு அமைக்கப்படவில்லை. ஊரக உள்ளாட்சி நகர்ப்புற உள்ளாட்சி என உள்ளாட்சி தேர்தல் தனித்தனியாக நடந்தது. இது குறித்து திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கூறியதாவது:- சென்னை மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் நீங்கலாக 36 மாவட்டங்களில் மாவட்ட திட்டக்குழு அமைக்க அரசு அறிவிக்கை வெளியிட்டு உள்ளது. மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் 8பேர் உறுப்பின ராக நியமிக்கப்படுவர்.இது தவிர மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி கவுன்சில ர்களில் இருந்து 10 பேர் உறுப்பினராக நியமிக்கப்ப டுவர்.

    மாநில அளவிலான இடஒதுக்கீட்டுடன் கூடிய ஆண் பெண் ஒதுக்கீடு விவரத்துடன் மாவட்ட குழு அமைப்பது தொடர்பான முழு அரசாணை விரைவில் வெளியாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×