என் மலர்
நீங்கள் தேடியது "நிகத் ஜரீன்"
- இதற்கு முன்பு நீது கங்காஸ், சவீதி பூரா ஆகியோர் தங்கம் வென்றனர்.
- நிகத் ஜரீன் தொடர்ந்து இரண்டாவது முறையாக உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார்.
புதுடெல்லி:
டெல்லியில் நடைபெற்று வரும் பெண்களுக்கான உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் இந்தியா மூன்றாவது தங்கம் வென்றுள்ளது. இன்று 50 கிலோ எடைப்பிரிவினருக்கான இறுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை நிகத் ஜரீன் (வயது 26), வியட்நாமைச் சேர்ந்த நிகுயென்னை 5-0 என வீழ்த்தினார்.
நிகத் ஜரீன் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துள்ளார். இதற்கு முன்பு நீது கங்காஸ், சவீதி பூரா ஆகியோர் தங்கம் வென்றனர்.
மகளிர் உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டிகளில் மேரி கோமுக்கு பிறகு ஒன்றுக்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்களை வென்ற 2வது இந்திய வீராங்கனை நிகத் ஜரீன் என்பது குறிப்பிடத்தக்கது. லண்டனில் நடந்த ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மேரி கோம், 6 உலக சாம்பியன்ஷிப் தங்கப் பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.