என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "துணை ஆணையாளர்"
- 4 மண்டலங்கள் கொண்ட திருப்பூர் மாநகராட்சியில் 2 மண்டலங்களுக்கு ஒரு துணை ஆணையாளர் வீதம் நியமிக்கப்பட உள்ளனர்.
- உத்தரவை கூடுதல் முதன்மை செயலாளர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சியில் புதிதாக இரண்டு துணை ஆணையாளர்கள் பணியிடம் உருவாக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சேலம் நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குனராக இருந்த சுல்தானா திருப்பூர் மாநகராட்சி துணை ஆணையாளராகவும், ஓசூர் மாநகராட்சி முன்னாள் ஆணையாளராக இருந்த பாலசுப்பிரமணியன் திருப்பூர் மாநகராட்சி துணை ஆணையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 1 மண்டலத்துக்கு 15 வார்டுகள் உள்ளன. 4 மண்டலங்கள் கொண்ட திருப்பூர் மாநகராட்சியில் 2 மண்டலங்களுக்கு ஒரு துணை ஆணையாளர் வீதம் நியமிக்கப்பட உள்ளனர்.
திருப்பூர் நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனராக இருந்த ராஜன் சேலம் நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். தாம்பரம் மாநகராட்சி முன்னாள் ஆணையாளராக இருந்த இளங்கோவன் திருப்பூர் நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாநகராட்சி செயற்பொறியாளராக இருந்த முகமது சபியுல்லா ஆவடி மாநகராட்சியின் கண்காணிப்பு பொறியாளராக மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கூடுதல் முதன்மை செயலாளர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.