என் மலர்
நீங்கள் தேடியது "பாராளுமன்றம் கூட்டம்"
- 2024 ஆம் ஆண்டு இளநிலை மருத்துவ கல்விக்கான நீட் தேர்வை நடத்துவதற்கு காலதாமதானது என்பது உண்மையா?
- பெரிய அளவில் முறைகேடுகள், ஆள்மாறாட்டம் போன்றவை கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்து நீட் தேர்விலும் கண்டுபிடிக்கப்பட்டதா?
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினேன்!
2024 ஆம் ஆண்டு இளநிலை மருத்துவ கல்விக்கான நீட் தேர்வை நடத்துவதற்கு காலதாமதானது என்பது உண்மையா?
பெரிய அளவில் முறைகேடுகள், ஆள்மாறாட்டம் போன்றவை கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்து நீட் தேர்விலும் கண்டுபிடிக்கப்பட்டதா? அப்படியானால் அதன் விவரங்கள்?
ஆகிய கேள்விகளை நாடாளுமன்றத்தில் எழுப்பினேன்.
அதற்கு மாண்புமிகு இந்திய ஒன்றிய இணை கல்வி அமைச்சர் சுகந்தா மஜும்தார் அவர்கள் பின்வருமாறு எழுத்துப்பூர்வமாக விடையளித்தார்.
" தேசிய தேர்வு முகமை (NTA) என்னும் சிறப்பு அமைப்பானது உயர்கல்வி நிறுவனங்களில் பயில்வதற்கான நுழைவு தேர்வை நடத்துகிறது. பிப்ரவரி 9 2024 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது போலவே மே 5 2024 அன்று நீட் தேர்வு நடைபெற்றது.
2019ஆம் ஆண்டிலிருந்து சுகாதாரத் துறை அமைச்சகத்தின் சார்பில் தேசிய கல்வி முகமை நீட் தேர்வை நடத்தி வருகிறது. 2024ஆம் ஆண்டு இளநிலை மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வு நடந்த பின்னர் தேர்வில் வழக்கத்துக்கு மாறான முறைகேடுகள்/ ஏமாற்றும் நடவடிக்கைகள் ஆகியவை நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. இத்தேர்வில் நடைபெற்றுள்ள முறைகேடுகள், சதித்திட்டம், நம்பிக்கை துரோகம் ஆகியவற்றை கண்டறிந்திடும் வகையில் விரிவான விசாரணையை நடத்திட சிபிஐ யை ஒன்றிய கல்வி அமைச்சகம் கேட்டுள்ளது.
ஆகத்து 2, 2024 மாண்புமிகு உச்சநீதிமன்ற தீர்ப்பு wp (civil) 335/2024 பத்தி 84ல் " முறையான முறைகேடுகள் நடந்ததை குறிக்கும் போதிய ஆதாரப்பதிவுகள் ஏதும் இப்போதைக்கு இல்லை. இத்தேர்வின் நேர்மையை கேள்விக்குள்ளாக்கும் அளவுக்கு முறைகேடுகள் பரவலாக நடந்தது என்னும் குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரப்பதிவுகள் ஏதும் இல்லை." இதே வழக்கில் 23 ஜூலை 2024 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய ஆணையின்படி 26 ஜூலை 2024ல் சரிபார்க்கப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
22.11.2024 அன்று 2024 நீட் தேர்வில் கேள்வித்தாள் திருட்டு குறித்த வழக்கில் மொத்தம் 45 குற்றவாளிகளுக்கு எதிராக 5 குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தது. இந்த நீட் தேர்வு தாள் திருட்டு வழக்கில் ஈடுபட்ட பயனாளிகள் பெயர்களையும், கேள்வித்தாளுக்கு விடையளித்த மருத்துவ மாணவர்களின் பெயர்களையும், தேர்வில் ஆள்மாறட்டம் செய்தவர்களின் பெயர்களையும் கண்டறிந்து உரிய அமைப்பிடம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள கொடுத்துள்ளோம்." என மாண்புமிகு இந்திய ஒன்றிய இணை கல்வி அமைச்சர் சுகந்தா மஜும்தார் அவர்கள் பின்வருமாறு எழுத்துப்பூர்வமாக விடையளித்தார்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- எதிர்க்கட்சிகள் முழக்கத்தால், அவை தொடங்கிய அடுத்த நிமிடமே அவையை சபாநாயகர் ஒத்திவைத்தார்.
- பாராளுமன்றத்தில் திமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்றும் கருப்பு உடை அணிந்து முழக்கங்களை எழுப்பினர்.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு கடந்த 13ம் தேதி தொடங்கியது. அதானி குழும முறைகேடு குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், இந்தியாவை அவமானப்படுத்திய விவகாரத்தில் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஆளும் பாஜகவும் பாராளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
இதனால் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் 9 தினங்களாக முடங்கியது.
இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடியை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் பேசிய அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத் கோர்ட்டு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து அதிரடியாக தீர்பு வழங்கியது.
அதை தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி.பதவி பறிக்கப்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து பாரளுமன்றத்தில் காங்கிரஸ் நேற்று பிரச்சினை கிளப்பியது. காங்கிரஸ், தி.மு.க., திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து வந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவை நடவடிக்கைகளும் முற்றிலும் பாதிக்கப்பட்டது. பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பும் கருப்பு உடையுடன் எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாராளுமன்றத்தில் இன்றும் ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பு, அதானி விவகாரத்தால் கடும் அமளி ஏற்பட்டது.
பாராளுமன்ற மக்களவை கூடியதும் கருப்பு உடையுடன் வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்கு வந்து கோஷமிட்டனர்.
காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ் ஆகியோர் பேப்பர்களை கிழித்து சபாநாயகர் இருக்கையை நோக்கி வீசினார்கள்.
மற்றொரு காங்கிரஸ் உறுப்பினர் டி.என்.பிரதாபன் சபாநாயகர் இருக்கையை நோக்கி கருப்பு துணியை வீசினார். அப்போது சபை காவலர்கள் அதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பு, அதானி விவகாரம் ஆகிய பிரச்சினைகளை கிளப்பி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால் சபை 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
மேல் சபையில் இதே விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து சபைக்கு வந்தனர். சபை கூடியதுமே அவர்கள் முழக்கங்களை எழுப்பினார்கள்.
இதனால் ஒரே கூச்சலும், குழப்பமும் நிலவியது. இதைதொடர்ந்து அவை 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. 11வது நாளாக பாராளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின.
- பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படாது.
- ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் உள்ளிட்ட அலுவல்கள் 9-ந்தேதி வரை நடைபெறுகிறது.
பாராளுமன்றம் ஆண்டுதோறும் 3 முறை கூடுகிறது. இதில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டின் தொடக்கத்தில் நடந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31-ந்தேதி தொடங்கும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. பிப்ரவரி 9-ந்தேதி வரை இந்த தொடர் நடக்கிறது.
ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் பட்ஜெட் தொடரின் முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுகிறார்.
பின்னர் பொருளாதார ஆய்வறிக்கையை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். மறுநாள், அதாவது பிப்ரவரி 1-ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படாது.
அதற்கு பதிலாக இடைக்கால பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதால் பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம்பெறலாம் என கருதப்படுகிறது.
இதைத்தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் உள்ளிட்ட அலுவல்கள் 9-ந்தேதி வரை நடைபெறுகிறது.