என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கஞ்சாவுடன் வியாபாரி கைது"

    • மோட்டார் சைக்கிளில் 3.400 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தார்.
    • இவர் ஏற்கனவே கஞ்சா விற்றதாக பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேவாரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையிலான போலீசார் டி.ரெங்கநாதபுரம் மயானப்பகுதியில் கஞ்சா விற்பதாக வந்த தகவலின் பேரில் அங்கு சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது தேவாரம் மூணாண்டிபட்டி வடக்கு தெருவை சேர்ந்த முத்துவீரன் (வயது48) என்பவர் மோட்டார் சைக்கிளில் 3.400 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தார்.

    போலீசார் அவரை கைது செய்து கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். இவர் ஏற்கனவே கஞ்சா விற்றதாக பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×