என் மலர்
நீங்கள் தேடியது "வெளியுறவு அமைச்சர்"
- இன்று மாலை டொனால்டு டிரம்பும், புதினும் டெலிபோனில் உரையாட உள்ளனர்.
- ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தின் எந்தப் பகுதியையும் நாங்கள் ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டோம்.
ஐரோப்பாவின் நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் உறுப்பினராக சேர முயல்வதைக் கண்டித்து கடந்த 2022 பிப்ரவரியில் ரஷியா போர் தொடுத்தது. கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த முடிவும் எட்டப்படாமல் போர் தொடர்ந்து வருகின்றது. கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தீவிரப்படுத்தினார்.
அதன்படி முதற்கட்டமாக 30 நாட்கள் போர் நிறுத்தம் கொண்டுவருவது குறித்த முன்மொழிவு வழங்கப்பட்டது. இதற்கு உக்ரைன் சம்மதித்த நிலையில் ரஷிய அதிபர் புதினும் சம்மதிப்பாக மேலோட்டமாக தெரிவித்தார்.
போரை நிறுத்த புதின் விரும்பவில்லை என்றும் பேச்சுவார்த்தையைத் தள்ளிப்போட புதின் தந்திரம் செய்கிறார் என்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியிருந்தார். இந்நிலையில் இன்று மாலை டொனால்டு டிரம்பும், புதினும் டெலிபோனில் உரையாட உள்ளனர்.
இதற்கிடையே டெல்லியில் நடந்துவரும் ரைசினா மாநாட்டில் இன்று கலந்துகொண்டு பேசிய உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா போர் நிறுத்தம் குறித்து பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, ரஷியாவுடனான மோதலுக்கு அமைதியான தீர்வையே உக்ரைன் விரும்புகிறது, ஆனால் எங்கள் பிராந்திய ஒருமைப்பாட்டில் சமரசம் செய்ய மாட்டோம்.
டொனால்டு டிரம்ப் மற்றும் விளாடிமிர் புதின் இடையேயான டெலிபோன் உரையாடலுக்குப் பிறகு, முன்மொழியப்பட்ட போர்நிறுத்தம் குறித்த தெளிவான நிலைப்பாடு வெளிப்படும். ரஷியாவுடனான 30 நாள் போர்நிறுத்தம் குறித்த அமெரிக்க முன்மொழிவை உக்ரைன் ஏற்றுக்கொண்டது, அமைதி முயற்சியை உக்ரைன் எதிர்க்கவில்லை.
அதே நேரத்தில், உக்ரைன் அதன் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பில் சமரசம் செய்யாது. ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தின் எந்தப் பகுதியையும் நாங்கள் ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டோம். உக்ரைனைத் தாக்குவதன் மூலம் ரஷ்யா எந்த மூலோபாய இலக்குகளையும் ரஷியா அடையவில்லை என்று தெரிவித்தார்.
- இந்திய எதிர்க்கட்சி அரசியல்வாதி ராகுல்காந்தி மீதான குற்றவழக்கின் தீர்ப்பை நாங்கள் கவனித்தோம்.
- எங்களின் புரிதலுக்கு எட்டிய வரை ராகுல்காந்தி கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது.
புதுடெல்லி:
மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து குஜராத் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதை தொடர்ந்து எம்.பி. பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இதை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பாராளு மன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராகுல்காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக அமெரிக்கா ஏற்கனவே கருத்து தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் ராகுல் காந்தி விவகாரத்தில் ஜனநாயக கொள்கைகளை எதிர்பார்க்கிறோம் என்று ஜெர்மனி அரசு கருத்து தெரிவித்து உள்ளது. ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் செய்தி தொடர்பாளர் டெல்லியில் இது தொடர்பாக நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்திய எதிர்க்கட்சி அரசியல்வாதி ராகுல்காந்தி மீதான குற்றவழக்கின் தீர்ப்பை நாங்கள் கவனித்தோம். அதன்பின்னர் அவர் தகுதி இழப்பு செய்யப்பட்டதையும் கவனித்தோம். எங்களின் புரிதலுக்கு எட்டிய வரை ராகுல்காந்தி கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது.
அந்த அப்பீல் வழக்கில் தீர்ப்பு வந்த பிறகே அவர் மீதான தண்டனை நிலைக்குமா? அவர் தகுதி இழப்பு செய்யப்பட்டதில் ஏதேனும் அடிப்படை இருக்கிறதா? என்பது தெளிவாகும்.
அந்த வழக்கில் நீதித்துறை சுதந்திரமும், அடிப்படை ஜனநாயக கொள்கைகளும் பின்பற்றப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மத்திய வெளியுறவுத் துறை ஜெய்சங்கர் நேற்று பேசும்போது, "எந்தவொரு வெளிநாட்டு தூதரும் ராகுல்காந்தி விவகாரம் குறித்து என்னிடம் பேசவில்லை" என்று தெரிவித்து உள்ளார்.