என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "யூ டியூபர்"
- இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பளித்து உத்தரவிட்டனர்.
- நீதிமன்ற காவலை தொடர்ந்து புழல் சிறைக்கு சவுக்கு சங்கர் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
பெண் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் 'யூடியூபர்' சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது கஞ்சா உள்ளிட்ட வழக்குகளும் பாய்ந்துள்ளது. குண்டர் தடுப்பு சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று நடைபெற்றது. இதில், இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பளித்து உத்தரவிட்டனர்.
சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்து நீதிபதி சுவாமி நாதன் உத்தரவிட்டார்.
தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்த பிறகு ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க நீதிபதி செந்தில்பாலாஜி உத்தரவிட்டார். இரு நீதிபதிகளின்மாறுபட்ட தீர்ப்பு காரணமாக வழக்கை 3வது நீதிபதி விசாரிக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது
மேலும் சவுக்கு சங்கரை கோவை சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்ற இரு நீதிபதிகளும் ஒருமித்த கருத்தில் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பான வழக்கில் யூ டியூபர் சவுக்கு சங்கருக்கு ஜூன் 7ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற காவலை தொடர்ந்து புழல் சிறைக்கு யூ டியூபர் சவுக்கு சங்கர் அழைத்து செல்லப்பட்டார்.
- சவுக்கு சங்கர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துவரப்பட்டார்.
- சவுக்கு சங்கர் திடீரென கோஷம் எழுப்பியதால் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை:
பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைதாகி கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
சவுக்குசங்கர் மீது சென்னையில் அடுத்தடுத்து பல வழக்குகள் பதிவானதால் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய்ரத்தோர் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து நேற்று சவுக்குசங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவை கோவை ஜெயிலில் இருந்த சவுக்கு சங்கரிடம் சென்னை போலீசார் வழங்கினர்.
சவுக்கு சங்கர் கைதாகி கோவைக்கு அழைத்து வரும்போது வாகனம் விபத்தில் சிக்கி அவரது வலது கையில் காயம் ஏற்பட்டது. இதற்காக அவரது கையில் கட்டுப் போடப்பட்டுள்ளது. இதற்காக அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று காலை 2-வது முறையாக சவுக்கு சங்கர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துவரப்பட்டார். டாக்டர்கள் அவரது கையை ஸ்கேன் செய்து பார்த்து சிகிச்சை அளித்தனர். மேலும் சர்க்கரை நோய் பாதிப்புக்காகவும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தபோது அவர் திடீரென கோஷம் எழுப்பினார். எனது கையை கோவை ஜெயிலில் உடைத்து விட்டனர். எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என கோஷம் எழுப்பினர். இதைத்தொடர்ந்து பணியில் ஈடுபட்ட போலீசார் அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். சவுக்கு சங்கர் திடீரென கோஷம் எழுப்பியதால் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.
- யூ டியூபர் சவுக்கு சங்கர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது.
- குண்டர் சட்டம் தொடர்பான ஆவணங்களை சென்னை காவல்துறை வழங்கியுள்ளது.
யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு, பெண் காவலர்களை அவதூறாக பேசியது உள்பட 6 வழக்குகள் பதிந்த நிலையில், சென்னை சைபர் கிரைம் போலீசார் 7வதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து, சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீடு மற்றும் தி.நகரில் உள்ள அவரது அலுவலகத்தையும் பூட்டி போலீசார் சீல் வைத்துள்ளனர்.
சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீட்டில் 10 மணி நேரமாக நடைபெற்ற சோதனை நிறைவு பெற்ற நிலையில், 7வது வழக்குப்பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில், யூ டியூபர் சவுக்கு சங்கர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
கோவை சிறை அதிகாரிகள் குண்டர் சட்டம் தொடர்பான ஆவணங்களை சென்னை காவல்துறை வழங்கியுள்ளது.
காவல்துறையினர் குறித்த அவதூறு பேச்சு, கஞ்சா உள்ளிட்ட வழக்குகளில் கைதாகியுள்ள சவுக்கு சங்கர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
- சவுக்கு சங்கர் வீட்டில் 10 மணி நேரமாக நடைபெற்ற சோதனை நிறைவு.
- ரூ.2 லட்சம் பணம், கஞ்சா சிகரெட்டுகள் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல்.
யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது 7வது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கஞ்சா வழக்கு, பெண் காவலர்களை அவதூறாக பேசியது உள்பட 6 வழக்குகள் பதிந்த நிலையில், சென்னை சைபர் கிரைம் போலீசார் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீடு மற்றும் தி.நகரில் உள்ள அவரது அலுவலகத்தையும் பூட்டி போலீசார் சீல் வைத்துள்ளனர்.
சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீட்டில் 10 மணி நேரமாக நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றுள்ளது.
இந்த சோதனையில் ரூ.2 லட்சம் பணம், கஞ்சா சிகரெட்டுகள், லேப்டாப் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
- கைது செய்ய சென்ற போலீசாரை தரக்குறைவாக பேசியது உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
- வழக்கு தேனியில் இருந்து மதுரை போதை பொருள் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட உள்ளது.
தேனி:
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் யூ-டியூபர் சவுக்கு சங்கரை தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியில் கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். பூதிப்புரம் ரோட்டில் உள்ள தங்கும் விடுதியில் கடந்த 3-ந் தேதி அதிகாலை சவுக்கு சங்கரை கைது செய்து கோவைக்கு அழைத்து சென்றனர். மேலும் அவருடன் தங்கி இருந்த சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராம்பிரபு, பரமக்குடியைச் சேர்ந்த ராஜரத்தினத்தை விசாரித்தனர்.
அவர்கள் வந்த காரில் சோதனை செய்தபோது 2.6 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து நடமாடும் தய அறிவியல் ஆய்வு வாகனம் மூலம் ஆய்வு செய்த போலீசார் சவுக்கு சங்கர், ராம்பிரபு, ராஜரத்தினம் ஆகிய 3 பேர் மீதும் கஞ்சா கடத்தல் வழக்கு, கைது செய்ய சென்ற போலீசாரை தரக்குறைவாக பேசியது உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
சவுக்கு சங்கர் கோவைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் ராம்பிரபு, ராஜரத்தினம் ஆகியோர் கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு தேனி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கில் 4-வது நபராக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ஆரைக்குடி வடக்குத் தெருவைச் சேர்ந்த திருமால் மகன் மகேந்திரன் (24) என்பவரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், சவுக்கு சங்கருக்கு மகேந்திரன் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இவரிடம் இருந்து 2.6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தேனி மாவட்ட நீதிமன்றத்தில் 1 கிலோவுக்கு உட்பட்ட கஞ்சா வழக்குகள் மட்டுமே விசாரிக்க முடியும். ஆனால் மொத்தம் 3 கிலோ கஞ்சா பிடிபட்டுள்ளதால் இந்த வழக்கு தேனியில் இருந்து மதுரை போதை பொருள் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட உள்ளது என்றனர்.
- பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்துள்ளனர்
- நீதிமன்ற வளாகத்தில் சவுக்கு சங்கருக்கு எதிராக பெண்கள் முழக்கமிட்டதால் சிறிது நேரம் அங்கு சலசலப்பு ஏற்பட்டது
தமிழக காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
யூ டியூபர் சவுக்கு சங்கரை கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்காக போலீசார் அழைத்து வந்தனர். அப்போது நீதிமன்ற வளாகத்தில் சவுக்கு சங்கருக்கு எதிராக பெண்கள் முழக்கமிட்டதால் சிறிது நேரம் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசி கைதாகியுள்ள சவுக்கு சங்கருக்கு தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெண்ணுரிமை பெண் பாதுகாப்பு எனப் பெண்கள் நலனுக்காக வெயில் என்றும் பாராமல் மழை என்றும் பாராமல் புயல் என்றும் பாராமல் வெள்ளம் என்றும் பாராமல் கடுமையாக மக்கள் பணியாற்றும் நமது பெண் காவலர்களை மகளிர் காவல் துறையை குறித்து கேவலமாக பேசியதற்காக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்
பல தடைகளையும் இன்னல்களையும் கடந்து பெண்கள் காவல்துறையில் பணியாற்றுவதை நாம் கொண்டாட வேண்டும், பெண்ணினத்திற்கே பெருமை சேர்க்கும் வகையில் பாரதி கண்ட புதுமைப் பெண்களாக அவர்கள் பணியாற்றுவதை கண்டு நாம் பெருமிதம் கொள்ள வேண்டும்.
அதைவிடுத்து காவல்துறையில் உள்ள பெண்களையும் மூன்றாம் பாலினத்தவரையும், அருவருக்கத்தக்க விதமாக சவுக்கு சங்கர் அவர்கள் பேசியதை தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.
பாரதி, அம்பேத்கர், பெரியார் போன்ற தத்துவார்த்த தலைவர்கள் கண்ட புதுமை பெண்கள் நாங்கள். சமூக மாற்றத்துக்கான ஒரு சீரிய சித்தாந்தத்தை முன்னெடுத்து அதன் வழியில் தங்கள் வாழ்க்கையை அரப்பணித்துக் கொண்டவர்கள் தமிழக காவல்துறையை சார்த்த மகளிர் காவலாளிகள். அவர்கள் பெண் என்பதினால் நீங்கள் எதை வேண்டுமென்றாலும் பேசி விட முடியாது. எங்கள் பெண்களின் சுயமரியாதைக்கு ஒரு இழுக்கு என்றால் அதற்கு எதிராக தமிழக மகளிர் காங்கிரஸ் தெருவில் இறங்கிப் போராட தயாராக உள்ளோம்.
பெண்ணினத்தை போற்ற கண்ணியத்தை அளவுகோலாக வைத்து எடைபோடுங்கள்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தேனியில் ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
- மாற்று வாகனம் மூலம் சவுக்கு சங்கரை போலீசார் கோவை அழைத்து சென்றனர்.
தேனி:
தமிழக காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதையடுத்து அவரை கைது செய்யும் நடவடிக்கையில் கோவை போலீசார் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சவுக்கு சங்கர் தேனி வந்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து இன்று (சனிக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் தேனியில் ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து அவரை போலீசார் வேனில் கோவைக்கு அழைத்து சென்றனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஐ.டி.ஐ. கார்னர் பகுதியில் செல்லும்போது, அந்த வழியாக வந்த காரும், வேனும் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் கார் சுக்குநூறாக நொறுங்கியது. போலீஸ் வேனின் முன்பகுதி சேதமடைந்தது.
இந்த விபத்தில் வேனில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் மற்றும் சவுக்கு சங்கர் ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. சவுக்கு சங்கருக்கு உதடு மற்றும் காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மாற்று வாகனம் மூலம் சவுக்கு சங்கரை போலீசார் கோவை அழைத்து சென்றனர். காரில் வந்த நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். கைதான சவுக்கு சங்கரை அழைத்து சென்ற போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மிஸ்டர் பீஸ்ட் என்ற பெயரில் வீடியோக்களை யூடிப்பில் பதிவிட்டு வருகிறார்.
- ஜிம்மி டொனால்ட்சன் ஒரு ஓட்டலில் பணியாளராக பணியாற்றும் பெண் ஊழியருக்கு புத்தம் புதிய காரை பரிசாக கொடுத்துள்ளார்.
யூ-டியூபர்களில் சிலர் மிகவும் பிரபலமானவர்களாக திகழ்கிறார்கள். அந்த வகையில் ஜிம்மி டொனால்ட்சன் என்ற யூ-டியூபர் உலக அளவில் அதிகம் பேர் பின் தொடரும் பிரபலமான யூ-டியூபராக திகழ்கிறார்.
இவர் மிஸ்டர் பீஸ்ட் என்ற பெயரில் வீடியோக்களை யூடிப்பில் பதிவிட்டு வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றிய ஒரு வீடியோ 11 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. ஜிம்மி டொனால்ட்சன் ஒரு ஓட்டலில் பணியாளராக பணியாற்றும் பெண் ஊழியருக்கு புத்தம் புதிய காரை பரிசாக கொடுத்துள்ளார். இதனை தனது வீடியோ பதிவில் யாரேனும் எப்போதாவது ஒரு காரை டிப்சாக கொடுத்துள்ளீர்களா? நான் எனது கருப்பு நிற டயோட்டா வாகனத்தை கொடுக்கிறேன் என கூறியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்