என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுங்கச்சாவடி கட்டணம்"

    • காலாவதியான 13 சுங்கச்சாவடிகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
    • இந்த சுங்கச்சாவடிகளை அகற்றகோரி மத்திய அரசுக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பி உள்ளோம்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அ.தி.மு.க உறுப்பினர் திண்டுக்கல் சீனிவாசன் தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது என்றும், அதனை ரத்து செய்ய மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    இதற்கு பதில் அளித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-

    தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் உயர்த்தப்பட்டுள்ள கட்டணத்தை திரும்ப பெறுமாறு ஏற்கனவே வலியுறுத்தி இருக்கிறோம். நேரில் சென்றும் அது பற்றி வலியுறுத்த உள்ளோம். காலாவதியான 13 சுங்கச்சாவடிகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சுங்கச்சாவடிகளை அகற்றகோரி மத்திய அரசுக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பி உள்ளோம். ஆனால் மத்திய அரசு சார்பில் காலாவதியான சுங்கச்சாவடிகள் இருக்கும் சாலைகளில் சிறிய மேம்பாலங்கள், சாலை மேம்பாட்டு பணிகள் நடக்க இருப்பதால் அவைகளை தொடர்ந்து செயல்படுத்தும் வகையில் உத்தரவிடப்பட்டுள்ளதாக பதில் அனுப்பி உள்ளார்கள். இதன் காரணமாகவே காலாவதியான சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன.

    சுங்கச்சாவடி கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி மத்திய அரசிடம் வலியுறுத்தும் போது காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றவும் வலியுறுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதிய சுங்கக் கட்டணம் ஏப்ரல் 1-ந்தேதி முதல் 2026 மார்ச் 31-ந்தேதி வரையிலான ஒரு வருட காலத்திற்கு என அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • வண்டலூர்-பாடியநல்லூர் இடையே கார், ஜீப், வேன், ஆட்டோவிற்கு ரூ.115 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ந்தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. வண்டலூர் முதல் திருவொற்றியூர் பஞ்செட்டி பொன்னேரி சாலையில் உள்ள மீஞ்சூர் வரையிலான தொலைவிற்கு சுங்கக்கட்டணம் புதிதாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    இந்த வெளிவட்டச் சாலையில் உள்ள சுங்கச் சாவடிகளில் ஒவ்வொரு வகையான வாகனங்களுக்கு கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சுங்கக் கட்டணம் ஏப்ரல் 1-ந்தேதி முதல் 2026 மார்ச் 31-ந்தேதி வரையிலான ஒரு வருட காலத்திற்கு என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    வண்டலூர்-நசரேத்பேட்டை இடையே கார், ஜீப், வேன்களுக்கு ரூ.60, இலகுரக வணிக வாகனம், சரக்கு வாகனங்களுக்கு ரூ.95, லாரி மற்றும் பஸ்களுக்கு ரூ.200, இதர கனரக வாகனங்களுக்கு ரூ.220, ரூ.315, ரூ.385 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    வண்டலூர்- நெமிலிச்சேரி வரை கார், ஜீப், வேன்களுக்கு ரூ.85, இலகுரக வணிக வாகனம் ரூ.135, லாரி, பஸ்கள் ரூ.285, கனரக வாகனங்கள் ரூ.310, ரூ.445, ரூ.545.

    வண்டலூர்-பாடிய நல்லூர் இடையே கார், ஜீப், வேன், ஆட்டோவிற்கு ரூ.115, இலகுரக வணிக வாகனம் ரூ.190, லாரி, பஸ்களுக்கு ரூ.395, கனரக வாகனங்களுக்கு ரூ.430, ரூ.615, ரூ.750 என்ற விகிதத்தில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    வண்டலூர்-மீஞ்சூர் வரை ரூ.140, ரூ.225, ரூ.470 மற்றும் கனரக வாகனங்களுக்கும் ரூ.510, ரூ.735, ரூ.895 வசூலிக்கப்பட உள்ளது.

    நசரேத்பட்டை- நெமிலிஞ்சேரி வரை கார், ஜீப், வேன், ஆட்டோவிற்கு ரூ.20, இலகுரக வணிக வாகனம் ரூ.40, லாரி, பஸ்கள் ரூ.85. 3 வகையான கனரக வாகனங்களுக்கு ரூ.90, ரூ.130, ரூ.160 புதிய கட்டணம்.

    நசரேத்பேட்டை- பாடியநல்லூர் இடையே கார், ஜீப் ஆட்டோவிற்கு ரூ.55, இலகுரக வணிக வாகனம், சரக்கு வாகனம் ரூ.90, லாரி, பஸ்கள் ரூ.195, 3 வகையான கனரக வாகனங்களுக்கு ரூ.210, ரூ.300, ரூ.370. நசரேத்பேட்டை - மீஞ்சூர் வரை கார், ஜீப், வேன் ரூ.80, இலகுரக வணிக வாகனம், சரக்கு வாகனம் ரூ.125, லாரி, பஸ்கள் ரூ.265, இதர கனரக வாகனங்கள் ரூ.290, ரூ.420, ரூ.510.

    • தற்போது உயர்த்தப்பட்ட சுங்க கட்டணத்தை பஞ்சாப் மாநில அரசு தள்ளுபடி செய்துள்ளது.
    • தமிழ்நாடு முதலமைச்சரும் உயர்த்தப்பட்ட சுங்க கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

    கருப்பூர்:

    தமிழகத்தில் 26-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்ந்துள்ளது. இதனை கண்டித்து சேலம் கருப்பூர் பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளம் சார்பிலும், லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பிலும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தன்ராஜ், தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் குமார், பொருளாளர் செந்தில், துணை தலைவர் தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் ஓமலூர், மேட்டூர் தாலுகா அளவிலான லாரி உரிமையாளர்கள் நலச்சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    பின்னர் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தன்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சுங்க கட்டணத்தை உயர்த்த கூடாது என பலமுறை வலியுறுத்தி வருகிறோம். ஆனால் தொடர்ந்து சுங்க கட்டணம் வருடத்திற்கு இரண்டு முறை உயர்த்தி வருகின்றனர். தற்போது சென்னையில் இருந்து டெல்லிக்கு செல்ல ரூ.43 ஆயிரம் சுங்க கட்டணம் செலுத்தி வந்தோம். தற்போது உயர்த்தப்பட்டுள்ள சுங்க கட்டணத்தால் ரூ.47 ஆயிரத்து 300 சுங்க கட்டணம் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து அசாம் செல்ல சுங்க கட்டணம் பழைய கட்டணம் ரூ.40 ஆயிரம் கட்டி வந்தோம். தற்போது உயர்த்தப்பட்ட சுங்க கட்டணத்தால் மேலும் 4 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. சேலத்தில் இருந்து குஜராத்திற்கு செல்லும்போது சுங்க கட்டணமாக ரூ.42 ஆயிரம் கட்டி வந்தோம். தற்போது மேலும் ரூ.4 ஆயிரம் கூடுதலாக கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    தற்போது உயர்த்தப்பட்ட சுங்க கட்டணத்தை பஞ்சாப் மாநில அரசு தள்ளுபடி செய்துள்ளது. இதுபோல தமிழ்நாடு முதலமைச்சரும் உயர்த்தப்பட்ட சுங்க கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

    தமிழகத்தில் 60 கிலோ மீட்டருக்கு இடையில் உள்ள 33 சுங்கச்சாவடிகள் அகற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இது குறித்து தமிழக அமைச்சர்கள் மத்திய மந்திரியை சந்தித்து வலியுறுத்தி உள்ளனர். ஆனால் இதுவரை அந்த சுங்கச்சாவடிகளும் அகற்றப்படவில்லை.

    எனவே உடனே 33 சுங்கச்சாவடிகள் அகற்றப்பட வேண்டும். இது போல ஜி.பி.ஆர்.எஸ். கருவி மூலம் சுங்க கட்டணம் வசூலிப்போம் என மத்திய மந்திரி தெரிவித்திருக்கிறார். தற்போது ஒரு வருடத்திற்கு சுங்க கட்டணம் மூலம் ரூ.36 ஆயிரம் கோடி வருவாய் வருகிறது என மத்திய மந்திரி தெரிவித்திருக்கிறார்.

    ஜி.பி.ஆர்.எஸ். கருவி பொருத்திவிட்டால் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடி வருவாய் வரும். இதனால் லாரி உரிமையாளர்களும், பொதுமக்களும் பெரிதும் பாதிப்பு அடைவார்கள். இதனால் ஜி.பி.ஆர்.எஸ். கருவி பொருத்துவதை மத்திய அரசு கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தமிழ்நாட்டில் டெண்டர் முடிந்த சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
    • சுங்கச்சாவடி பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும்.

    தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் கொளத்தூர் த.ரவி விடுத்து உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் டெண்டர் முடிந்த சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்ற வேண்டும். சுங்கச்சாவடி பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். சில சுங்கச்சாவடிகளில் சரக்கு வாகனங்கள் பல மணி நேரம் காத்து கிடக்கும் நிலை உள்ளது. அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

    காய்கறி, பழம், மலர், முட்டை உள்ளிட்ட பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு சுங்க கட்டணத்தை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வரவேண்டும். சுங்க கட்டணம் ரத்து செய்யப்பட்டால் பொதுமக்களுக்கு காய்கறி, பழம், பூக்கள், முட்டை ஆகிய பொருட்களின் விலை தானாக குறைந்துவிடும்.

    இவ்வாறு கொளத்தூர் த.ரவி கூறி உள்ளார்.

    ×