search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமூக நீதி மாநாடு"

    • சாதிவாரி கணக்கெடுப்பு, தனியார் துறையில் இட ஒதுக்கீடு வேண்டும் என முதல் மாநாட்டில் கோரிக்கை
    • அசோக் கெலாட் உள்பட 18 தலைவர்கள் பங்கேற்றனர்

    திமுக தலைமையிலான சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் 2-வது தேசிய மாநாடு செப்டம்பர் 19-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    முதல் தேசிய மாநாடு, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது.

    இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா, உத்தர பிரதேச எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ஜம்மு - காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிக் ஓ'பிரையன், திராவிடர் கழகத் தலைவர் கீ. வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் கலந்துகொண்டு இந்தக் கூட்டத்தில் பேசினர்.

    ஏப்ரல் மாதம் நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில், இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தும்போது சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டுமென்றும் தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமென்றும் இன்று நடந்த அகில இந்திய சமூக நீதிக் கூட்டமைப்பின் முதல் மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    • நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு சமூக நீதிக்கான புரிதலை ஏற்படுத்த வேண்டும்.
    • புறக்கணிக்கப்பட்டோரை கைத்தூக்கி விடுவதுதான் சமூகநீதி என மு.க.ஸ்டாலின் பேச்சு

    சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு, டெல்லியில் இன்று தொடங்கியது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்று வரும் இம்மாநாட்டில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    ஒட்டுமொத்த இந்தியாவையும் இணையத்தால் இணைத்துள்ளோம். சமூக நீதி நம்மை இணைத்துள்ளது. சமூக நீதியை நிலைநாட்டுவதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம்.

    சமூகநீதி எனப்படும் இடஒதுக்கீடு என்பதே சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கியவர்களுக்கு தரப்பட வேண்டும் என்பதே இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் வரையறை.

    உயர்சாதி ஏழைகள் என்று கூறி இடஒதுக்கீடு தருகிறது பாஜக அரசு. இது சமூக நீதி அல்ல. ஏழைகளுக்கு எந்த பொருளாதார உதவி செய்வதை நாங்கள் தடுக்கவில்லை. அது பொருளாதார நீதியே ஆகுமே தவிர சமூகநீதி ஆகாது. ஏழைகள் என்றால் அனைத்து ஏழைகள் தானே இருக்க முடியும். அதில் என்ன உயர்சாதி ஏழைகள்? ஒடுக்கப்பட்ட சாதி ஏழைகளை புறக்கணிப்பதே சமூக அநீதி அல்லவா? அதனால் தான் பொருளாதார அளவுகோலை இடஒதுக்கீட்டில் நாங்கள் எதிர்க்கிறோம்.

    உயர்சாதியில் இருக்கும் ஏழைகளுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவது ஒன்றிய பாஜக அரசின் திட்டம். இடஒதுக்கீடு வழங்குவதால் தகுதி, திறமை போய்விட்டது என்று கூறி வந்த சிலர் இந்த இடஒதுக்கீட்டை மட்டும் ஆதரிக்கிறார்கள். பட்டியலின மக்கள், சிறுபான்மையினர் உள்ளிட்டோருக்கான இடஒதுக்கீடு முறையாக வழங்கப்படவேண்டும். நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு சமூக நீதிக்கான புரிதலை ஏற்படுத்த வேண்டும். இடஒதுக்கீட்டை தேசிய, மாநில அளவில் கண்காணிக்க வேண்டும். சமூகநீதியை காக்கும் கடமை நமக்குத்தான் உள்ளது. அதனால்தான் இணைந்துள்ளோம்; புறக்கணிக்கப்பட்டோரை கைத்தூக்கி விடுவதுதான் சமூகநீதி.

    கூட்டாட்சி, மாநில சுயாட்சி, மதச்சார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம், சோசலிசம் மற்றும் சமூக நீதி ஆகிய கொள்கைகளை இந்தியா முழுவதும் நிலைநாட்ட நாம் குரல் கொடுக்க வேண்டும். அது தனித்தனி குரலாக இருக்கக் கூடாது. அது ஒற்றுமையின் குரலாக, கூட்டணிக் குரலாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×