search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடிகர் சத்யராஜ்"

    • பொன்விழா ஆண்டு விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.
    • நடிகர் சத்யராஜ்க்கு கலைஞர் விருது வழங்கப்பட்டது.

    முத்தமிழ் பேரவையின் பொன்விழா ஆண்டு விருது வழங்கும் விழா சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில், நடிகர் சத்யராஜ்க்கு கலைஞர் விருது வழங்கப்பட்டது.

    அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-

    எந்த பண்பாட்டு தாக்குதல் நடந்தாலும் தமிழ், தமிழினம், தமிழ்நாடு நிலைத்து நிற்க தமிழின் வலிமையும், நமது பண்பாட்டின் சிறப்பும்தான் காரணம்.

    திரைப்படத்தில் பெரியாராக வாழ்ந்து காட்டியவர் நடிகர் சத்யராஜ்.

    திராவிடமே தமிழுக்கு அரண் என பேசியவர் சத்யராஜ், தான் நடிகராக ஆனதற்கு கலைஞர் தான் காரணம் என கூறுபவர் சத்யராஜ்.

    கலைஞர் பேசினாலே அதில் இசை, நயம் இருக்கும். கலைஞர் பொதுக் கூட்டங்களில் பேசும்போது நாடக தமிழை பார்க்கலாம்.

    இசையிலும் தமிழ் ஒலிக்க வேண்டும். எந்த ஆதிக்கத்தையும் வெல்லும் ஆற்றல் மொழிக்கு உண்டு.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சென்சார் போர்டில் கட்செய்யப்பட்ட எல்லா காட்சிகளும் இங்கு காண்பிக்கப்பட்டது.
    • படத்திலும் எல்லா சீன்களும் உள்ளன. ஆனால் வசனங்கள் வேறு.

    சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள தோழர் சேகுவேரா படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் சத்யராஜ் பேசும்போது கூறியதாவது:-

    நான் இதுவரை 250 படங்களில் நடித்துள்ளேன். எல்லாப்படங்களிலும் நடிப்பது மகிழ்ச்சியான விசயம்தான். வெற்றி அடைந்தாலும், தோல்வி அடைந்தாலும் அந்த நடிப்பு பணி என்பது எனக்கு மகிழ்ச்சியான விசயம். மகிழ்சியாக ஒரு படத்தில் சென்று நடிப்பேன். படம் ஓடினால் கூடுதல் மகிழ்ச்சி வரும். ஓடவில்லை என்றால் வர்த்தம்தான். ஆனால் நடிப்பு என்பது மகிழ்ச்சியான விசயம்.

    பெருமைக்குரிய படம் என்றால் அதில் ஒருசிலதான். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமேன்றால் தந்தை பெரியாராக நடித்ததுதான். அதன்பின் சில பெயர்களை தாங்கி நடிக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கும். கதைக்கும் எம்.ஜி.ஆர்.-க்கும் எந்த வகையில் சம்பந்தம் கிடையாது. எம்.ஜி.ஆர். மகன் படத்தில் நான்தான் எம்.ஜி.ஆர்.

    தோழர் சேகுவேரா உடன் என்னை எந்த வகையிலும் ஒப்பிட்டு பார்க்க முடியாது. அப்படிப்பட்ட ஒப்பற்ற புரட்சியாளர். சேகுவாராக இருக்க முடியாது. அவரது பெயரில் நடிப்பது மிக்க மகிழ்ச்சி.

    புரட்சிக்காரன் படத்தில் சேகுவேரா கெட்அப்பில் நடித்திருக்கிறேன். சென்சார் போர்டில் கட்செய்யப்பட்ட எல்லா காட்சிகளும் இங்கு காண்பிக்கப்பட்டது. படத்திலும் எல்லா சீன்களும் உள்ளன. ஆனால் வசனங்கள் வேறு. சென்சார் விதிக்கு உட்பட்ட வசனங்கள் பேசப்பட்டுள்ளது. மீண்டும் சென்சாருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இதனால் செப்டம்பர் 20-ந்தேதி படம் ரிலீஸ் ஆவதில் தடங்கல் வந்துவிடுமோ என வினியோகஸ்தரர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. சென்சாரில் என்ன சொல்லப்பட்டதோ அதை மாற்றி செய்து விட்டோம்.

    இவ்வாறு சத்யராஜ் பேசினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இன்றைய இளம் தலைமுறை தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு அரிய புகைப்படங்களும் கண்காட்சியில் இடம் பிடித்துள்ளன.
    • திராவிட இயக்கத்தின் வரலாறு மற்றும் கோவைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ள சிறப்பான திட்டங்கள் குறித்த புகைப்படங்களும் இடம்பெற உள்ளது.

    கோவை:

    கோவை வ.உ.சி மைதானத்தில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டு கால சரித்திர வரலாற்று புகைப்பட கண்காட்சி நடக்கிறது. இன்று தொடங்கி வருகிற 14-ந் தேதி வரை இந்த கண்காட்சி நடக்க உள்ளது.

    கண்காட்சியின் தொடக்க விழா இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை தாங்குகிறார். மாவட்ட செயலாளர்கள் கார்த்திக், தொ.அ.ரவி, தளபதி முருகேசன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டு மு.க.ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை திறந்து வைக்கிறார். பின்னர் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள புகைப்படங்களை பார்வையிடுகிறார். இந்த கண்காட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சம்மந்தப்பட்ட இதுவரை யாரும் பார்த்திராத பல அரிய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் அவர் 70 ஆண்டு கால பொது வாழ்க்கையில் சந்தித்த சவால்கள், மக்கள் நலனுக்காக அவர் மேற்கொண்ட போராட்டங்கள், எதிர்கொண்ட துயரங்கள் ஆகியவற்றை இன்றைய இளம் தலைமுறை தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு அரிய புகைப்படங்களும் இந்த கண்காட்சியில் இடம் பிடித்துள்ளன.

    திராவிட இயக்கத்தின் வரலாறு மற்றும் கோவைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ள சிறப்பான திட்டங்கள் குறித்த புகைப்படங்களும் இடம்பெற உள்ளது.

    இந்த கண்காட்சி தினந்தோறும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது. இந்த கண்காட்சியை காண அனைவருக்கும் இலவச அனுமதி அளிக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் என அனைவரும் வந்து கண்காட்சியை பார்வையிட்டு, திராவிட இயக்கத்தின் வரலாறு, மு.க.ஸ்டாலின் சந்தித்த போராட்டங்கள் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ள வேண்டும் என ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று விடுமுறை நாள் என்பதால் இந்த கண்காட்சியை காண ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×