என் மலர்
நீங்கள் தேடியது "தொழிலதிபர் மரணம்"
- நீரழிவு நோய்க்காக சாக்லெட் சாப்பிட்ட தொழிலதிபர் திடீரென மயங்கி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
- வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை வில்லியனூர் தில்லை நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது48). இவர் கூடப்பாக்கம் ரோடு சந்திப்பில் ஹார்வேர்டு கம்பெனி நடத்தி வந்தார்.
இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். ராமசாமிக்கு நீரழிவு நோய் இருந்து வந்தது. இதற்காக கடந்த 10 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் ராமசாமிக்கு சர்க்கரை அளவு (லோ சுகர்) குறைந்தது போல உணர்ந்தார். அதனை சரி செய்ய சாக்லேட் சாப்பிட்டார்.
அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அவரது மனைவி விஜயலட்சுமி அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதர நிலையத்துக்கு கொண்டு சென்றார்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ராமசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீரழிவு நோய்க்காக சாக்லெட் சாப்பிட்ட தொழிலதிபர் திடீரென மயங்கி விழுந்து இறந்த சம்பவம் வில்லியனூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.