search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தண்ணீர் பந்த"

    • தண்ணீர் பந்தலை திறக்க அ.தி.மு.க. வினருக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி, உத்தரவு பிறப்பித்திருந்தார்.
    • தண்ணீர் பந்தலை பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன், திறந்து வைத்து பொதுமக்களுக்கு வழங்கினார்.

    தருமபுரி,

    கோடை காலம் தொடங்கியது முதல் வெப்பத்தின்தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொது மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். பொது வெளியில் வெப்பத்தை சமாளிக்கும் வகையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆங்காங்கே தண்ணீர் பந்தலை திறக்க வேண்டும் என அ.தி.மு.க. வினருக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி, உத்தரவு பிறப்பித்திருந்தார்.

    இதனையடுத்து இன்று தருமபுரி மாவட்டம் நகர அ.தி.மு.க சார்பில் நகர செயலாளர் பூக்கடை ரவி எற்பாட்டில் தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் தாகத்தை தீர்க்கும் நீர்மோர், தர்பூசணி, இளநீர், வெள்ளரிக்காய், நுங்கு, பப்பாளி, கொய்யா, வாழைபழம், அன்னாச்சிபழம், அடங்கிய தண்ணீர் பந்தலை தருமபுரி மாவட்ட செயலாளரும், பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.அன்பழகன், திறந்து வைத்து பொதுமக்களுக்கு வழங்கினார்.

    இதே போல் மாவட்டத்தில் காரிமங்கலம், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×