search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரஷீத் கான்"

    • டி20 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது.
    • ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான், பரூக்கி ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

    கயானா:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. குர்பாஸ் 80 ரன்கள் எடுத்தார்.

    160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 15.2 ஓவரில் 75 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 84 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது.

    ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான், பரூக்கி ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

    இந்நிலையில், வெற்றி பெற்ற பிறகு பேட்டியளித்த ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் கூறியதாவது:

    நியூசிலாந்து போன்ற பெரிய அணிக்கு எதிராக நாங்கள் பெற்ற இந்த வெற்றி மிகவும் சிறப்பானது. எங்களின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள். பேட் மற்றும் பந்தில் எங்களின் சிறப்பான செயல் திறன் இது. இப்படிப்பட்ட ஒரு அணியை வழிநடத்த நான் பெருமைப்படுகிறேன்.

    எங்கள் பந்துவீச்சாளர்கள் திறமையைப் பயன்படுத்தி பந்து வீசும் பொழுது எங்களுக்கு எதிராக 160 ரன்களை சேசிங் செய்வது கடினம். நாங்கள் திறமையை சரியாகப் பயன்படுத்தினால் எங்களை வீழ்த்துவது கடினம். வெற்றியோ, தோல்வியோ நாம் செய்ய வேண்டிய விஷயங்களைச் சரியாக செய்யவேண்டும். முடிவைப் பற்றி எப்பொழுதும் கவலைப்படுவது கிடையாது.

    பந்துவீச்சில் எங்களுக்கு பரூக்கி மிகச்சிறந்த தொடக்கத்தை கொடுத்து வருகிறார். இரு போட்டிகளிலும் அவர் பந்து வீசிய விதம் ஆச்சரியமாக இருந்தது. தொடர்ந்து தன்னுடைய பந்துவீச்சில் பணிபுரிந்தால் அவர் இதைவிட இன்னும் திறமையாக வரமுடியும் என தெரிவித்தார்.

    • 3-வது இடத்தில் ஆதில் ரஷீத் (இங்கிலாந்து), ஹசரன்கா (இலங்கை) ஆகியோர் உள்ளனர்.
    • பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் 865 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

    துபாய்:

    20 ஓவர் போட்டியில் பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர், ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.

    சமீபத்தில் பந்து வீச்சாளர் தரவரிசையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் முதலிடத்தை பிடித்து இருந்தார்.

    இந்த நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள பந்து வீச்சாளர் தரவரிசையில் ரவி பிஷ்னோயுடன் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத்கான் இணைந்து முதலிடத்தை பிடித்தார். இருவரும் 692 புள்ளிகளுடன் உள்ளனர். இதே போல் 3-வது இடத்தில் ஆதில் ரஷீத் (இங்கிலாந்து), ஹசரன்கா (இலங்கை) ஆகியோர் உள்ளனர்.


    பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் 865 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். 2-வது இடத்தில் பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் (787), 3-வது இடத்தில் தென்ஆப்பிரிக்காவின் மார்க்ராம் (758) உள்ளனர். ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் வங்காள தேசத்தின் ஷகீப்-அல்-ஹசன் 272 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

    தென்ஆப்பிரிக்க வீரர் மார்க்ரம் 2 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தில் உள்ளார். 3-வது இடத்தில் ஆப்கானிஸ்தானின் முகமது நபி (210), 4-வது இடத்தில் இந்தியாவின் ஹர்த்திக் பாண்ட்யா (200) உள்ளனர்.

    • முதலில் ஆடிய குஜராத் விஜய்சங்கர், சாய் சுதர்சன் அதிரடியால் 204 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய கொல்கத்தா 207 ரன்கள் மட்டுமே திரில் வெற்றி பெற்றது.

    அகமதாபாத்:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. அதன்படி இன்று மாலை 3.30 மணிக்கு அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற 13-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன்களை குவித்தது. சாய் சுதர்சன் அரை சதமடித்து 53 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய விஜய் சங்கர் 21 பந்தில் அரை சதமடித்தார். அவர் 63 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். ஷுப்மன் கில் 39 ரன்னில் அவுட்டானார்.

    கொல்கத்தா சார்பில் சுனில் நரைன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி விளையாடியது. தொடக்க வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். ஜெகதீசன் 6 ரன்னும், குர்பாஸ் 15 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    3வது ஜோடி சேர்ந்த வெங்கடேஷ் அய்யர், நிதிஷ் ரானா ஜோடி அதிரடியாக ஆடியது. இந்த ஜோடி 100 ரன்கள் சேர்த்த நிலையில் நிதிஷ் ரானா 45 ரன்னில் அவுட்டானார்.

    வெங்கடேஷ் அய்யர் 40 பந்தில் 5 சிக்சர், 8 பவுண்டரி உள்பட 83 ரன்கள் குவித்து வெளியேறினார்.

    17-வது ஓவரை வீசிய ரஷீத் கான் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஆண்ட்ரூ ரசல், சுனில் நரைன், ஷர்துல் தாக்குர் ஆகியோரை வெளியேற்றினார்.

    ஆனால், கடைசி ஓவரில் 5 சிக்சர்களை அடித்து அணியை திரில் வெற்றிபெறச் செய்தார் ரிங்கு சிங்.

    இறுதியில், கொல்கத்தா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 207 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

    குஜராத் சார்பில் ரஷீத் கான் 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ×