search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விலங்குகள் ஆராய்ச்சி மையம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோவில்களில் ஹோமம் வளர்க்கும் போது பசு கோமியம் கிருமி நாசினியாக பயன்படுத்தப்படுகிறது.
    • பசு மோமியத்தில் நல்ல பாக்டீரியா மற்றும் நல்ல பூஞ்சைகள் இருப்பதாக சித்த மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    புதுடெல்லி:

    சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பசு மாட்டின் கோமியம் நோய் எதிர்ப்பு சக்தி தரும் துணை மருந்தாகவும், அரு மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    பஞ்சகவ்யம் என சொல்லப்படும் மருந்தில் பிரதானமாக பசு கோமியம், தயிர், வெண்ணெய் ஆகிய மூலப்பொருட்கள் இடம்பெறுகின்றன. மேலும் பதப்படுத்தப்பட்ட கோமியமும் தனியாக மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

    அதேபோன்று கோவில்களில் ஹோமம் வளர்க்கும் போது பசு கோமியம் கிருமி நாசினியாக பயன்படுத்தப்படுகிறது. அதில் நல்ல பாக்டீரியா மற்றும் நல்ல பூஞ்சைகள் இருப்பதாக சித்த மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    பண்டைக் காலத்தில் பசுக்களின் கோமியத்தை பதப்படுத்தாமல் மக்கள் நேரடியாக குடித்தனர். ஆனால் இப்போது அந்த முறை இல்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நாட்டின் உயர்ந்த விலங்கு ஆராய்ச்சி அமைப்பான இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் (ஐவிஆர்ஐ) போஜ் ராஜ் சிங் தலைமையில் ஒரு ஆய்வினை நடத்தியது. இந்த ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

    அதில், பசு கோமியம் மனிதர்களுக்கு தகுதியற்றது. சில பாக்டீரியாக்களுக்கு பயனுள்ளதாக இருந்தாலும், ஆரோக்கியமான பசுக்கள் மற்றும் காளைகளின் சிறுநீர் மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில் 14 வகையான தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருப்பதை கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    மேலும் எருமையின் சிறுநீரில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு செயல்பாடு பசுக்களை விட மிக உயர்ந்தது எனவும் தெரிவித்துள்ளனர். பசு, எருமைகள் மற்றும் மனிதர்களின் 73 சிறுநீர் மாதிரிகளின் பகுப்பாய்வில், எருமையின் சிறுநீரில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு நடவடிக்கை பசுக்களை விட மிக உயர்ந்தது என்று கூறுகிறது.

    இந்த ஆய்வு முடிவுகள் தொடர்பாக திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அதிகாரி டாக்டர் எஸ்.காமராஜ் கூறும்போது, ஆரோக்கியமான பசுக்களின் கோமியத்தை நேரடியாக அருந்துவதால் எந்த பக்க விளைவும் ஏற்படுவதில்லை. மனம் ஒப்புக்கொள்ளாதவர்களுக்கு வாந்தி மட்டுமே வரும். வேறு எந்த பிரச்சினையும் ஏற்படாது. ஒருவரால் 15 மில்லி அல்லது 30 மில்லி அளவுக்கு மட்டுமே நேரடியாக கோமியத்தை அருந்த முடியும் என்றனர்.

    ஆயுர்வேத மருத்துவ அதிகாரி ஒருவர் கூறுகையில், இன்றளவும் கிராமப் புறங்களில் வீட்டு முற்றத்தில் சாணம் தெளிப்பதும், கோமியம் கலந்த சாணம் கொண்டு வீட்டை மொழுகவும் செய்கிறார்கள்.

    கிருமிகளை கொல்லும் பாக்டீரியாக்கள் இதில் இருக்கின்றன. இந்தியாவின் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் சுத்திகரிப்பு செய்த பசு மாட்டின் கோமியத்தை தினமும் அருந்தி வந்ததாக அவரே தெரிவித்துள்ளார். 99 வயது வரை அவர் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தார்.

    ஒவ்வொரு கால கட்டத்திலும் இவ்வாறான ஆய்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. இதனை மக்கள் நம்ப தயாராக இல்லை என்றார்.

    ×