என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மேட்டுப்பாளையம் மார்க்கெட்"
- நீலகிரி, கோவை மாவட்டங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகள் மொத்த விற்பனைக்காக விவசாயிகளால் கொண்டு வரப்படுகிறது.
- மருத்துவ குணம் மிக்க இஞ்சியின் வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளதால் வியாபாரிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்- அன்னூர் சாலையில் மொத்த காய்கறி மண்டி செயல்பட்டு வருகிறது.
இங்கு நீலகிரி, கோவை மாவட்டங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகள் மொத்த விற்பனைக்காக விவசாயிகளால் கொண்டு வரப்படுகிறது.
பின்னர் ஏல முறையில் காய்கறிகளை விலைக்கு வாங்கி வியாபாரிகள் விற்பனைக்காக எடுத்து செல்கின்றனர்.
இந்த மொத்த காய்கறி மண்டிக்கு நீலகிரி மாவட்டத்தில் இருந்து தக்காளி, கேரட், பீன்ஸ், பீட்ரூட், நூல்கோல், டர்னீப், முள்ளங்கி, முட்டைகோஸ், சேனைகிழங்கு, பூண்டு உள்ளிட்ட காய்கறிகள் விற்பனைக்கு எடுத்து வரப்படுகிறது.
இதில் மருத்துவ குணம் கொண்ட இஞ்சி கர்நாடக மாநிலத்தில் இருந்து விற்பனைக்காக மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிக்கு கொண்டு வரப்படுகிறது.
பின்னர் இஞ்சி தரம் பிரிக்கப்பட்டு, தரத்திற்கு ஏற்பட விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் 60 கிலோ கொண்ட ஒரு மூட்டை இஞ்சி அதிகபட்சமாக ரூ.9,700க்கும், குறைந்த பட்சமாக ரூ.4 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது.
கடந்த வாரத்தை காட்டிலும் இஞ்சி வரத்து குறைவாக இருப்பதால் விலையும் அதிகரித்து காணப்படுகிறது. இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-
கடந்த வாரத்தில் 60 கிலோ கொண்ட ஒரு மூட்டை இஞ்சி அதிகபட்சமாக ரூ.8,750க்கு விற்பனையானது. தற்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் இஞ்சியின் வரத்து குறைந்துள்ளது. இதனால் தற்போது 60 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை இஞ்சி அதிகபட்சமாக ரூ.9,700க்கு விற்பனையானது. அதேபோல தரம் குறைந்த இஞ்சி குறைந்தபட்ச அளவாக ரூ.4 ஆயிரத்திற்கு விற்பனையானது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மருத்துவ குணம் மிக்க இஞ்சியின் வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளதால் வியாபாரிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
- நேற்றைய ஏலத்தில் நேந்திரன் வாழைத்தார் கிலோ ஒன்றுக்கு ரூ.15 முதல் 22 வரையும், கதளி கிலோ ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.40 வரையும் விற்பனையானது.
- நேந்திரன் வாழைக்கு போதிய விலை கிடைக்காத நிலையில் விவசாயிகள் அதனை கால்நடைகளுக்கு எடுத்து சென்று போடும் நிலையில் உள்ளது.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் செல்லும் சாலையில் தென்திருப்பதி நால்ரோடு பகுதியில் வாழைக்காய் ஏலம் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மேட்டுப்பாளையம், அன்னூர், புளியம்பட்டி, சிறுமுகை, காரமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த வாழைத்தார்களை கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.
அதனை உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர் வியாபாரிகளும் மொத்த விலைக்கு வாங்கி செல்வது வழக்கம். இம்மையத்தில் புதன், ஞாயிற்றுக்கிழமைகளில் ஏலம் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் நேந்திரன், கதளி, பூவன், தேன் வாழை, ரஸ்தாளி, ரோபஸ்டா, செவ்வாழை உள்ளிட்ட பல்வேறு வகை வாழைத்தார்கள் விவசாயிகளால் இந்த மையத்திற்கு கொண்டு வரப்பட்டன.
நேற்றைய ஏலத்தில் நேந்திரன் வாழைத்தார் கிலோ ஒன்றுக்கு ரூ.15 முதல் 22 வரையும், கதளி கிலோ ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.40 வரையும் விற்பனையானது. மேலும் பூவன் ரூ.500 வரையும், தேன் வாழை ரூ.600, ரஸ்தாளி ரூ.400, ரோபஸ்டா ரூ.400, செவ்வாழை ரூ.600 வரையும் ஏலம் போனது. குறிப்பாக நேந்திரன் விலை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கிலோ ஒன்றிற்கு ரூ.35 வரை விற்பனையான நிலையில் தற்போது கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனிடையே நேந்திரன் வாழைக்கு போதிய விலை கிடைக்காத நிலையில் விவசாயிகள் அதனை கால்நடைகளுக்கு எடுத்து சென்று போடும் நிலையில் உள்ளது. இதனால விவசாயிகள் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளனர்.
இதுகுறித்து ஏல மையத்தின் நிர்வாகிகள் சின்னராஜ் மற்றும் வெள்ளியங்கிரி கூறுகையில் நெல்லை, திருச்சி, கர்நாடக மாநிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கேரள வியாபாரிகள் நேரடியாக சென்று விவசாயிகளிடம் விலை பேசி எடுத்துச் செல்கின்றனர். இதனால் மேட்டுப்பாளையம், அன்னூர், புளியம்பட்டி, சிறுமுகை, காரமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்பட்ட நேந்திரன் வாழைத்தார்கள் வரத்து அதிகமாக இருந்தாலும் கடும் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போது கேரளா வியாபாரிகள் வருவதே இல்லை. இதனால் நேந்திரன் வாழைத்தாரின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்