search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்டிகுவா கோர்ட்"

    • டொமினிக்கன் தீவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
    • சில நாட்களுக்கு முன்பு இன்டர்போலீஸ் ரெட் நோட்டீஸ் பட்டியலில் அவரது பெயர் நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆன்டிகுவா:

    இந்தியாவை சேர்ந்த பிரபல வைர வியாபாரியான மெகுல் சோக்சி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.10 ஆயிரம் கோடி கடன் வாங்கி அதை திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பினார்.

    2018-ம் ஆண்டில் இருந்து ஆன்டிகுவா தீவில் வசித்து வந்த மெகுல் சோக்சி திடீரென்று மாயமானார். சில நாட்களுக்கு பிறகு அவர் டொமினிக்கன் தீவில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    அவரை டொமினிக்கன் தீவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ஆன்டிகுவா குடியுரிமை பெற்ற மெகுல் சோக்சியை அந்நாட்டுக்கு திரும்ப அனுப்ப அவரது வக்கீல்கள் தொடர்ந்த வழக்கிலும் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.

    இதையடுத்து ஆண்டிகுவாவுக்கு அனுப்பப்பட்ட மெகுல் சோக்சியை இந்தியா கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டது. இது தொடர்பான வழக்கு ஆன்டிகுவா அண்ட் பார்டிடா நாட்டில் உள்ள ஐகோர்ட்டில் நடந்து வந்தது.

    இந்நிலையில் மெகுல் சோக்சியை வலுக்கட்டாயமாக ஆன்டிகுவா மற்றும் பார்டிடா தீவில் இருந்து வெளியேற்ற முடியாது என்று கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    இதனால் அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேல் முறையீடு உள்ளிட்ட அனைத்து சட்டப் பூர்வ வாய்ப்புகளையும் இழந்த நிலையில் மெகுல் சோக்சிக்கு இந்த தீர்ப்பு சாதகமாக அமைந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு இன்டர்போலீஸ் ரெட் நோட்டீஸ் பட்டியலில் அவரது பெயர் நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×