search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருநங்கைகள் தின விழா"

    • 50க்கும் மேற்பட்ட இடங்களில் மரக்கன்றுகள் நட்டு ஆடல் பாடலுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
    • திருப்பூர் மாநகராட்சி வணிக வளாக கட்டடத்தில் வாடகைக்கு ஒரு கடை ஒதுக்க வேண்டும்.

    திருப்பூர் :

    தேசிய திருநங்கைகள் தினத்தையொட்டி திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியில் தேசிய திருநங்கைகள் தின விழா தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கியது. பின்னர் திருநங்கைகள் சார்பில்தயார் செய்யப்படும் இனிப்பு மற்றும் கார வகைகளை பொதுமக்களுக்கு வழங்கி யும் நாதஸ்வரம் வாசித்து ஊர்வலமாக வந்து 50க்கும் மேற்பட்ட இடங்களில் மரக்கன்றுகள் நட்டு ஆடல் பாடலுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.தொடர்ந்து நடந்த விழாவில் திருநங்கைகள் சங்கத்தின் தலைவி திவ்யா பேசியதாவது:- உலகமெங்கும் வாழும்அனைத்து திருநங்கைகளுக்கும் தேசிய திருநங்கைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். நாங்கள் ஏற்பாடு செய்யும் இனிப்பு மற்றும் கார வகைகளை விற்பதற்கு ஏதுவாக திருப்பூர் மாநகராட்சி வணிக வளாக கட்டடத்தில் வாடகைக்கு ஒரு கடை ஒதுக்க வேண்டும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் செயலாளர் லட்சுமி, பொருளாளர் தர்ஷனா,துணைத் தலைவர் சித்ரா, துணைச் செயலாளர் தர்ஷினி ,செயற்குழு உறுப்பினர்கள் கார்த்திகா, ரூபினி, துர்கா, மோனிகா, சௌந்தர்யா, பவானி,கௌரி உள்ளிட்ட நிர்வாகிகள் 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    ×