என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கூவாகம் கூத்தாண்டவர் கோவில்"
- திருநங்கைகளுக்கு கோவில் பூசாரி தாலி கட்டுவார்.
- திருநங்கைகள் கணவரை நினைத்து ஆடி, பாடி மகிழ்ந்து கொண்டாடுவார்கள்.
திருநாவலூர்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் ஒன்றி யத்துக்கு உட்பட்ட கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 9-ந் தேதி சாகை வார்த்தலுடன் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து 10-ந் தேதி முதல் மகாபாரத சொற்பொழிவு, சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான திருநங்கைகளுக்கு கோவில் பூசாரி கையால் தாலி கட்டும் நிகழ்ச்சி நேற்று நள்ளிரவு முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதலில் உள்ளூரில் வசிக்கும் திருநங்கைகளுக்கும், இன்று காலை 7 மணி முதல் வெளியூர் திருநங்கைகளுக்கும் தாலி கட்டும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.
மேலும், இன்று மாலை வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் திருநங்கைகளுக்கு கோவில் பூசாரி தாலி கட்டுவார்.
இன்று இரவு திருநங்கைகள் அனைவரும், தங்களின் கணவரை நினைத்து ஆடி, பாடி மகிழ்ந்து கொண்டாடுவார்கள்.
நாளை (24-ந் தேதி) சித்திரை தேரோட்டம் தொடங்கும். தேர் வீதியுலா, தெய்வநாயக செட்டியார் பந்தலடிக்கு வந்தவுடன், திருநங்கைகள் அனைவரும் தங்களது கணவரை நினைத்து ஒப்பாரி வைத்து அழுது தாலிக் கயிறை அறுத்து விட்டு அருகில் உள்ள கிணறு, குளங்களில் குளித்து வெள்ளை புடவை அணிந்து கொண்டு சோகத்துடன் தங்களின் சொந்த ஊருக்கு செல்வார்கள்.
25-ந் தேதி விடையாற்றி உற்சவமும், 26-ந் தேதி தர்மர் பட்டாபிஷேகமும் நடை பெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரி கள், கிராம பொதுமக்கள், திருநங்கைகள் கூட்டமைப்பினர் செய்து வருகின்றனர்.
- நாளை சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.
- 23-ந்தேதி திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி.
உளுந்தூர்பேட்டை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது கூவாகம் கிராமம். இக்கிராமத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை பெருவிழா வருடந்தோறும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை பெருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.
10-ந் தேதி முதல் மகாபாரதம் சொற்பொழிவு மற்றும் சுவாமி வீதியுலாவும் நடைபெற உள்ளது. 12-ந்தேதி பீஷ்மர் பிறப்பு மற்றும் 14-ந் தேதி பாஞ்சாலி பிறப்பும், 17-ந் தேதி கூத்தாண்டவர் பிறப்பும் மற்றும் சுவாமி வீதியுலா நடக்கிறது.
21-ந் தேதி கூத்தாண்டவருக்கு பாலாலயம் நடைபெறுகிறது. 22-ந்தேதி மாலை கம்பம் நிறுத்தும் நிகழ்ச்சியும், சித்திரை பெருவிழாவின் முக்கிய விழாவான திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி 23-ந் தேதி நடைபெற உள்ளது.
அன்றைய தினம் மாலை இந்தியா முழுவதும் இருந்து வரும் திருநங்கைகள் கோவில் பூசாரி கையினால் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இதனை தொடர்ந்து 24-ந் தேதி சித்திரை தேரோட்டம் நடைபெற உள்ளது.ஏப்ரல் 25-ந் தேதி விடையாற்றியும், 26-ந் தேதி தர்மர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சியுடன் 18 நாள் சித்திரை பெருவிழா நிறைவு பெறுகிறது.
- தேரோட்டம் முடிந்து அரவாண் பந்தலடியில் களப்பலியிட்ட பிறகு அங்கு திரண்ட திருநங்கைகள் தாலியை அறுத்து ஒப்பாரி வைத்து அழுதனர்.
- தங்களது வேண்டுதல் நிறைவேறும் வகையில் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
உளுந்தூர்பேட்டை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே உள்ள கூவாகத்தில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 18-ந் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி 2-ந் தேதி நடந்தது.
அப்போது கோவில் பூசாரி கையினால் மகிழ்ச்சியுடன் தாலி கட்டிக் கொண்ட ஆயிரக்கணக்கான திருநங்கைகள் இரவு முழுவதும் கும்மி அடித்து ஆடிப்பாடி மகிழ்சியுடன் இருந்தனர்.
நேற்று காலை தேரோட்டம் முடிந்து அரவாண் பந்தலடியில் களப்பலியிட்ட பிறகு அங்கு திரண்ட திருநங்கைகள் தாலியை அறுத்து ஒப்பாரி வைத்து அழுதனர்.
தங்க தாலி கட்டிய திருநங்கைகள் தங்களது வேண்டுதல் நிறைவேறும் வகையில் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மொத்தம் 27 பவுன் தங்க தாலியை காணிக்கையாக செலுத்தி உரிய ரசீது பெற்றுக் கொண்டனர்.
இதே போல் வெள்ளியிலான தாலியை அங்கு வைக்கப்பட்டுள்ள உண்டியலில் போட்டனர். தாலியை காணிக்கையாக செலுத்துவதால் கூத்தாண்டவர் தங்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பார் என திருநங்கைகள் தெரிவித்தனர்.
- விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் செய்து இருந்தனர்.
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் மேற்பார்வையில் உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி.மகேஷ் தலைமையில் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
உளுந்தூர்பேட்டை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவில் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் வருடந்தோறும் சித்திரை திருவிழா நடைபெற்று வருவது வழக்கம்.
இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த மாதம் 18-ந்தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தினந்தோறும் மகாபாரதம் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மற்றும் ஊர்வலம் நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.
சாமி கண் திறத்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வந்த திருநங்கைகள் தங்க நகைகளை அணிந்தும், கை நிறைய வளையல்கள் போட்டு கொண்டும் கோவில் பூசாரி கையால் தாலி கட்டிக் கொண்டனர்.
இதனை தொடர்ந்து கோவில் அருகில் கற்பூரம் ஏற்றி விடிய, விடிய ஆயிரக்கணக்கான திருநங்கைகள் அரவாணின் பெருமைகளை பாடல்களாக பாடி கும்மி அடித்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இன்று (புதன்கிழமை) காலை 8 மணி அளவில் தேரோட்டம் நடைபெற்றது. உளுந்தூர்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.மணிக்கண்ணன் தேரோட்டத்தை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் சாந்தி இளங்கோவன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தேர் முக்கிய வீதி வழியாக சென்று தேவநாயக செட்டியார் பந்தலடியை அடைந்ததும் அரவாண்கள் பலியிடுவது நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தாலி கட்டிக் கொண்டுஇரவு முழுவதும் ஆடி பாடி மகிழ்ந்த திருநங்கைகள் தாலி அறுத்துநெற்றியில் வைத்திருந்த பொட்டுகளை அழித்து வளையல்களை உடைத்து அருகில் உள்ள குளங்களில் குளித்து வெள்ளை புடவை அணிந்து விதவைக் கோலத்தில் வீட்டிற்கு திரும்பினார்கள். நாளை விடையாற்றியும், நாளை மறுநாள்( 5-ந் தேதி) தர்மர் பட்டாபிஷேகத்துடன் 18 நாள் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் செய்து இருந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் மேற்பார்வையில் உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி.மகேஷ் தலைமையில் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
- சித்திரை பெருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்துகொண்டு மேடையில் தோன்றி ஒய்யாரமாக வலம் வந்தனர்.
உளுந்தூர்பேட்டை:
கூவாகத்தில் திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது.
மகாபாரத போரில் அரவான் (கூத்தாண்டவர்) களப்பலி கொடுப்பதை நினைவுபடுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை பெருவிழா நடைபெறுவது வழக்கம்.
இதில் திருநங்கைகளுக்கு மண முடித்தல், தேரோட்டம், தாலி அறுத்து அழுகளம் நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த விழாவில் நாடு முழுவதிலும் இருந்து திருநங்கைகள் திரளாக கலந்து கொள்வார்கள்.
இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு திருநங்கைகளுக்கான அழகிப் போட்டியை இந்த ஆண்டு உளுந்தூர்பேட்டையிலும், விழுப்புரத்திலும் நடத்த திட்டமிடப்பட்டது.
அதன்படி இன்று காலை 2 சுற்று போட்டிகள் உளுந்தூர் பேட்டையில் நடைபெற்றது. இதற்கிடையே சென்னையை சேர்ந்த திருநங்கைகளுக்கான அமைப்பு சார்பில் நேற்று விழுப்புரத்தில் அழகிப்போட்டி நடைபெற்றது.
இதை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார். இதில் 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்துகொண்டு மேடையில் தோன்றி ஒய்யாரமாக வலம் வந்தனர்.
இவர்களில் நடை, உடை, பாவனை அடிப்படையிலும், பொது அறிவு சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த 3 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் மிஸ் திருநங்கையாக சேலம் பிரகதீஷ் சிவம் தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை வைசு 2-வது இடத்தையும், தூத்துக்குடி பியூலா 3-வது இடத்தையும் பிடித்தனர். அவர்களுக்கு கிரீடம் அணிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நடிகர் பிரித்விராஜ், நடிகை வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மிஸ் கூவாகம் இறுதி அழகிப்போட்டி விழுப்புரத்தில் இன்று மாலை நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் திருநங்கைகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசு வழங்குகிறார்.
கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் நாளை (செவ்வாய்க்கிழமை) திருநங்கைகள் தாலிகட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மறுநாள் காலை தேரோட்டமும் அன்று மாலை பந்தலடியில் பாரதம் படைத்தலும், இரவு காளி கோவிலில் உயிர் பெறுதலும் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருநங்கைகள் கூவாகத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.
- மே 3-ந்தேதி மாலை பந்தலடியில் பாரதம் படைத்தல், இரவு காளி கோவிலில் உயிர் பெறுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
- விழாவில் தமிழகம் மட்டுமின்றி மும்பை, கொல்கத்தா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான திருநங்கைகள் கலந்து கொள்கிறார்கள்.
திருநாவலூர்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகத்தில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் கூவாகம் திருவிழா நடைபெறும்.
இந்த ஆண்டிற்கான திருவிழா இன்று (செவ்வாய்கிழமை) மாலை 5 மணிக்கு சாகை வார்த்தலுடன் கூழ் ஊற்றி தொடங்குகிறது. அடுத்த மாதம் (மே) 5-ந்தேதி வரை திருவிழா நடைபெற உள்ளது.
விழாவின் முக்கிய நாளான மே 1-ந்தேதி கம்பம் நிறுத்தல், 2-ந்தேதி இரவு சுவாமி கண் திறத்தல், திருநங்கைகள், பக்தர்கள் திருமாங்கல்யம் ஏற்று கொள்ளுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மே 3-ந்தேதி மாலை பந்தலடியில் பாரதம் படைத்தல், இரவு காளி கோவிலில் உயிர் பெறுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
விழாவில் தமிழகம் மட்டுமின்றி மும்பை, கொல்கத்தா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான திருநங்கைகள் கலந்து கொள்கிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்