என் மலர்
நீங்கள் தேடியது "ஸ்டார்ஷிப்"
- விமானங்களை மாற்று வழியில் இயக்க வலியுறுத்தப்பட்டன.
- போலி செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது.
ஸ்பேஸ்எக்ஸ்-இன் ஸ்டார்ஷிப் முன்மாதிரி ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் வெடித்து சிதறியது. ராக்கெட் வெடித்து சிதறியதைத் தொடர்ந்து கல்ஃப் ஆஃப் மெக்சிகோ வழியே செல்லக்கூடிய விமானங்களை மாற்று வழியில் இயக்க வலியுறுத்தப்பட்டன.
ஸ்டார்ஷிப் விண்ணில் ஏவப்பட்ட எட்டு நிமிடங்களுக்கு பிறகு ஸ்பேஸ்எக்ஸ் மிஷன் கட்டுபாட்டு மையத்துடனான தொடரை இழந்தது. சோதனை முயற்சியில் ஏவப்பட்ட இந்த ராக்கெட் முதல் பேலோடு போலி செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது.
"ஸ்டார்ஷிப் உடனான அனைத்து தகவல்தொடர்புகளையும் நாங்கள் இழந்துவிட்டோம் - இது அடிப்படையில் மேல் நிலையில் எங்களுக்கு ஒரு ஒழுங்கின்மை இருப்பதைக் குறிக்கிறது" என்று ஸ்பேஸ்எக்ஸ் தகவல் தொடர்பு மேலாளர் டான் ஹூட் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவர் ஸ்டார்ஷிப் தொலைந்து போனதை உறுதிப்படுத்தினார்.
ஃபிளைட் ரேடார் 24 தளத்தின் படி பதிவுகளின் அடிப்படையில், குறைந்தது 20 வணிக விமானங்கள் மற்ற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. விமானங்களின் மீது சாத்தியமான குப்பைகள் விழுவதை தவிர்க்க பாதை மாற்றியமைக்கப்பட்டன.
இது குறித்து ஸ்பேஸ்எக்ஸ் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், வீடியோ ஒன்றை இணைத்து, "வெற்றி நிச்சயமற்றது, ஆனால் பொழுதுபோக்கு உறுதி!" என்று குறிப்பிட்டுள்ளார்.
Success is uncertain, but entertainment is guaranteed! ✨ pic.twitter.com/nn3PiP8XwG
— Elon Musk (@elonmusk) January 16, 2025
- ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் முதல் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது.
- ஸ்டார்ஷிப் ராக்கெட் மனிதர்களை சந்திரன், செவ்வாய் கிரகங்களுக்கு அழைத்து செல்லும் என கூறப்பட்டது.
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்-இன் ஸ்டார்ஷிப் இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே மிகவும் சக்திவாய்ந்த மற்றும் அளவில் பெரிய ராக்கெட் ஆகும். ஸ்பேஸ்எக்ஸ் நிறுவம் உருவாக்கி இருக்கும் இந்த ராக்கெட் மனிதர்களை நிலவு மற்றும் செவ்வாய் கிரகங்களுக்கு அழைத்துச் செல்லும் நோக்கில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ராக்கெட்டின் முதல் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஸ்டார்ஷிப் ராக்கெட் முதல் முறையாக சோதனை அடிப்படையில் விண்ணில் செலுத்தப்பட்டது. அதன்படி ராக்கெட் டேக் ஆஃப் ஆகி முதல் மூன்று நிமிடங்கள் கழித்து, அதன் பூஸ்டரில் இருந்து தனியே பிரிய வேண்டும். எனினும், ராக்கெட் தொடர்ச்சியாக சுழன்று, அதன்பின் நடுவானில் வெடித்துச் சிதறியது.
இந்திய நேரப்படி இரவு 7.03 மணிக்கு விண்ணில் டேக் ஆஃப் ஆன ஸ்டார்ஷிப் ராக்கெட் சில நிமிடங்களில் வெடித்து சிதறியது. முதல் சோதனை ஓட்டம் தோல்வியுற்றதை தொடர்ந்து, சில மாதங்களில் அடுத்த சோதனை நடைபெறும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
Congrats @SpaceX team on an exciting test launch of Starship!
— Elon Musk (@elonmusk) April 20, 2023
Learned a lot for next test launch in a few months. pic.twitter.com/gswdFut1dK
"ஸ்டார்ஷிப்-இன் சோதனை ஓட்டத்தை ஒட்டி, ஸ்பேஸ் எக்ஸ் குழுவுக்கு வாழ்த்துக்கள். இதில் நிறைய பாடம் கற்றுக் கொண்டேன், சில மாதங்களில் அடுத்த சோதனை ஓட்டம் நடைபெறும்," என்று எலான் மஸ்க் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் அக்கவுண்டில் தெரிவித்து இருக்கிறார்.